சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’!
இன்ஸ்டன்ட் வைரல்: சாய் அபயங்கரின் அடுத்த இண்டி பாடல் 'ரதிமா' வெளியானது!
பிரபல இளம் இசையமைப்பாளரும் பாடகருமான சாய் அபயங்கர், தனது 6-வது சுயாதீன (Indie) பாடலான ‘ரதிமா’ (Radhimaa)-வை திங்க் இண்டி (Think Indie) நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.
காதல் முறிவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்பாடல், நவீன பாப் இசையையும் கவ்வாலி (Qawwali) சாயலையும் இணைத்து, ஒரு புதிய இசை அனுபவத்தை வழங்குகிறது. பிரியும் காதலை சோகமாக இல்லாமல், இளமைத் துடிப்புடனும் நேர்மறை உணர்வுடனும் எடுத்துரைக்கும் வகையில் சாய் அபயங்கர் இப்பாடலை அமைத்துள்ளார்.
இப்பாடலின் அழகிய இசை காணொளியில் சாய் அபயங்கருடன் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் தேஜோ பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வீடியோ, பாடலின் எனர்ஜியான இசைக்கும், அதில் உள்ள உணர்ச்சிகரமான கருப்பொருளுக்கும் வலு சேர்க்கும் வகையில் காட்சிப்...








