ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான ‘சிக்மா’
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சுபாஷ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஆக்ஷன் அட்வென்ச்சர் காமெடி திரைப்படமான ‘சிக்மா’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!
சென்னை: தென்னிந்திய சினிமாவில் தரமான தயாரிப்புகளுக்கும் உலகளவில் பார்வையாளர்கள் மத்தியில் படங்களை கொண்டு போய் சேர்க்கும் உத்திக்கும் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம் சுபாஷ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ். இந்நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பான ஆக்ஷன் அட்வென்ச்சர் காமெடி திரைப்படமான ’சிக்மா’ 65 நாட்களுக்கான படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தை சுபாஷ்கரனின் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது . நான்கு மாதங்கள் திட்டமிடப்பட்ட இந்தப் படத்தின் 95% ஷெட்யூல் நிறைவடைந்து உள்ளது .
சமூக விதிமுறைகளை மீறி லட்சியத்துடன் தன் இலக்குகளைத் தொடரும் அச்சமற்ற ஒருவனின் கதையைச் சொல்வதுதான் ‘சிக்மா’ திரைப்படம். இந்த திரைப்படம் அதிரடி ஆ...








