Wednesday, November 18

Uncategorized

சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Uncategorized
டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது ! *Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!* Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படத்தின் படப்பிடிப்பு, முழுமையாக நிறைவடைந்தது. “டூரிஸ்ட் ஃபேமிலி” படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இந்த புதிய படம் அறிவிக்கப்பட்ட போதே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் ஒரே கட்டமாக மின்னல...
தி ஃபாஸ்ட் அண்ட் க்யூரியஸ் – தி ஆட்டோ எக்ஸ்போ 2025

தி ஃபாஸ்ட் அண்ட் க்யூரியஸ் – தி ஆட்டோ எக்ஸ்போ 2025

Uncategorized
உங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள்!”- கார் எக்ஸ்போவில் 2025 ரசிகர்களை கவர்ந்த, சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் ! ஹைதராபாத்தில் நடைபெற்ற தி ஃபாஸ்ட் அண்ட் க்யூரியஸ் - தி ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்ச்சியில் சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் கலந்துகொண்டு ரசிகர்களுடன் உரையாடி, தனது வாழ்க்கை அனுபவங்கள், போராட்டங்கள் மற்றும் சினிமா பயணம் குறித்து ஊக்கமூட்டும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார். பாதுகாப்பாக வாகனம் ஓட்ட வேண்டும் என்ற முக்கியமான செய்தியுடன், அவருடைய கருத்துக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியைத் தொடங்கிய சாய் துர்கா தேஜ், அனைவருக்கும் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக ஓட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார்..,“அனைவரும் ஹெல்மெட் அணியுங்கள். வேகமாக ஓட்டாதீர்கள். பாதுகாப்பாக ஓட்டுங்கள்,”என்று கூறிய அவர், தனது உயிருக்கு ஆபத்தான விபத்துக்குப் பிறகு வாழ்க்கை குறித்து தன் ...
ஆண்டனி வர்கீஸ் அதிரடி மாஸ் லுக்கில் மிரட்டும்  “காட்டாளன்” !

ஆண்டனி வர்கீஸ் அதிரடி மாஸ் லுக்கில் மிரட்டும்  “காட்டாளன்” !

Uncategorized
“காட்டாளன்”  பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் மாபெரும் ஆக்‌ஷன் திரில்லர் படமான “காட்டாளன்” படத்தின், அதிரடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி நடிகர் ஆண்டனி வர்கீஸுன் மிரட்டல் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.  எரியும் கண்கள், சிதறிய சிவப்பு முடி, வாயில் புகைபிடிக்கும் சிகார் — இப்படியாக ஆண்டனியின் அதிரடி லுக், ஒரு கடும் ஆற்றல் கொண்ட மாஸ் அவதாரமாக காட்சி தருகிறது. ரத்தம் பூசப்பட்ட முகம், கைகள் ஆகியவை படத்தின் அதிரடி ஆக்‌ஷன் களத்தை வெளிப்படுத்தி, இதுவரை கண்டிராத மிரட்டலான நிறைந்த தோற்றத்தை ரசிகர்களுக்கு வழங்கி விருந்தளிக்கிறது. பான்-இந்தியா ஹிட் ஆக்‌ஷன் திரில்லர் *“மார்கோ”*விற்கு பின், “காட்டாளன்” படம் க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் மற்றொரு மிகப்பெ...

தனுஷ் – க்ரிதி சனோன் நடித்ததேரே இஷ்க் மேயின் டீசர்!

Uncategorized
ஆனந்த் எல் ராயின் தேரே இஷ்க் மேயின் டீசரில் தனுஷ் – க்ரிதி சனோன்: ஒரு காவிய காதல் கதை! வரும் நவம்பர் 28 அன்று ஹிந்தி மற்றும் தமிழில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் சங்கர் – முக்தியின் சினிமா பயணத்தை அனுபவியுங்கள். காதல் இதுவரை இவ்வளவு தீவிரமாக இருந்ததில்லை. 🔗 https://youtu.be/O9N6kz7_0vQ?si=DLTPUzgN72ThJwoK தேரே இஷ்க் மேயின் படத்தை இயக்குநர்-தயாரிப்பாளர் ஆனந்த் எல் ராய், புஷண் குமார் மற்றும் கலர் யெல்லோ தயாரித்து, தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் கதை எழுத, இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ டடீஸர் தற்போது வெளியாகி உள்ளது. புதியதும் எதிர்பாராததுமான இந்த ஜோடி, டீசரில் சங்கர் (தனுஷ்) – முக்தி (க்ரிதி சனோன்) இடையிலான காந்த ஈர்ப்பை வெளிப்படுத்துகிறது. முன்பே வெளியான சில கா...
“மருதம்” திரைப்பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“மருதம்” திரைப்பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

Uncategorized
  “*மருதம்*” திரைப்பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ! Aruvar private limited சார்பில் C வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”. சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, திரை பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில்.., தயாரிப்பாளர் வெங்கடேசன் பேசியதாவது.., இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. அக்டோபர் 10 படம் வருகிறது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. நடிகர் அரு...
பல்டி _ விமர்சனம்

பல்டி _ விமர்சனம்

Uncategorized
பல்டி _ விமர்சனம் கபடி விளையாட்டை மையப்படுத்தி அதிரடி சண்டைக் காட்சிகளுடன் ஒரு பொழுதுபோக்கு படத்தை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் உன்னி சிவலிங்கம். பஞ்சமி ரைடர்ஸ் என்ற கபடி குழுவில் விளையாடும் ஷேன் நிகமும் சாந்தனுவும் மிக நெருங்கிய நண்பர்கள். பொற்றாமரை பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் செல்வராகவனும் பொற்றாமரை அணி என்ற பெயரில் கபடி குழு ஒன்றை நடத்தி வருகிறார். ஒரு கபடி போட்டியின் போது செல்வராகவன் அணியை தோற்கடித்து பஞ்சமி ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று விடுகிறது. இதைத் தொடர்ந்து தங்களது பொற்றாமரை அணிக்காக விளையாடுவதற்கு ஷேன் நிகம்  மற்றும் சாந்தனுவை செல்வராகவன் அழைக்கிறார். பொருளாதார தேவைக்காக செல்வராகவன் அணியில்  விளையாட சம்மதிக்கும் இருவரும், தங்களை அறியாமல் அவரது அடாவடி கந்து வட்டி வியாபாரத்தில் சிக்கி தவிப்பதும், அதிலிருந்து மீள முயற்சிப்பதும் தான்  பல்ட...

யாஷிகா ஆனந்த் நடிக்கும் “டாஸ்” திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

Uncategorized
"யாஷிகா ஆனந்த்" நடிக்கும் “டாஸ்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது! பிளாக் டைமண்ட் ஸ்டுடியோ சார்பில் சையத் ஜாஃபர் தயாரிப்பில், சகு பாண்டியன் இயக்கத்தில் ரத்தன் மௌலி, யாஷிகா ஆனந்த், விஜய் டிவி புகழ் யோகி, தேஜா ஸ்ரீ, சஞ்சய் ஷங்கர் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் 'டாஸ்' (TOSS). இந்த படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா படக்குழுவினர் கலந்து கொள்ள கோவில்பட்டியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த பூஜை மற்றும் துவக்க விழாவில் முன்னாள் அமைச்சர் திரு. கடம்பூர் C ராஜூ MLA அவர்கள் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார். படத்தை பற்றி இயக்குனர் சகு பாண்டியன் கூறியதாவது: மர்மமான முறையில் மூன்று கொலைகள் நிகழ்கின்றன. அந்த கொலைகளின் பின்னணி என்ன? யாஷிகா ஆனந்துக்கும் கொலைகளுக்கும் என்ன தொடர்பு என்பதை சொல்லும் ஒரு கிரைம் திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. யாஷிகா ஆனந்த் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு ...

‘குறள் இசையோன்’ பரத்வாஜ்!

Uncategorized
'குறள் இசையோன்' பரத்வாஜ்! இசையமைப்பாளர் பரத்வாஜ்க்கு கனடா நாட்டில் நடைபெற்ற 'உலக திருக்குறள் மாநாட்டில்', டொராண்டோ தமிழ் சங்கம் "குறள் இசையோன்" பட்டம் வழங்கியது. காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, ரோஜாக்கூட்டம், பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் போன்ற பல படங்களுக்கு இசையமைத்து, இசையமைத்த அத்தனை பாடல்களையும் 'மெகா ஹிட்' செய்த இசையமைப்பாளர் பரத்வாஜ். இவர் 1330 திருக்குறளை, 1330 பாடகர்களை பாட வைத்து, திருக்குறள் முழுவதையும் இசை வடிவில்10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கினார். கனடா நாட்டில் டொராண்டோ தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற 'உலக திருக்குறள் மாநாட்டில்' பரத்வாஜ் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து, 1330 திருக்குறளையும் இசை வடிவில் கொடுத்த அவருக்கு பாராட்டு விழா நடத்தி, 'குறள் இசையோன்' பட்டத்தையும் வழங்கியது. கனடா அரசும் அந்த விழாவில் பரத்வாஜ் அவர்களின் திருக்குறள் தமிழ் சேவையை பாராட்டி சர்டிபிகே...
எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘அதீரா’!

எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘அதீரா’!

Uncategorized
பிரசாந்த் வர்மா, கல்யாண் தாசரி, எஸ்.ஜே.சூர்யா, ரிவாஸ் ரமேஷ் டுக்கால், ஆர்கேடி ஸ்டுடியோஸ், PVCU வின் ‘அதீரா’ படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது !!* அதீராவின் காலம் தொடங்கி விட்டது! தனது தனித்துவமான இயக்கத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ள சினிமா வித்தகர் பிரசாந்த் வர்மா, மீண்டும் ஆர்கேடி ஸ்டுடியோஸுடன் இணைந்து ஒரு மாபெரும் சூப்பர் ஹீரோ பிரம்மாண்டத்தை உருவாக்க உள்ளார். டோலிவுட்டில் ஜாம்பி வகை படத்தை அறிமுகப்படுத்தியதும், இந்தியாவின் முதல் ஒரிஜினல் சூப்பர் ஹீரோ சாகாவான ஹனுமான் படத்தை உருவாக்கியதும் இவர்தான். அந்த கனவை இன்னொரு படி முன்னேற்றும் விதமாக, இப்போது அவர் தனது அடுத்த அத்தியாயமான அதீராவை அறிமுகப்படுத்துகிறார். இதில், கல்யாண் தாசரி ஹீரோவாக தனது பிரம்மாண்ட அறிமுகத்தைச் செய்கிறார். அதோடு, முன்னணி நடிகர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். ரிவாஸ் ரமேஷ் டு...
நடிகர் சங்க கட்டிடம் உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு அடையாளமாக இருக்கும்

நடிகர் சங்க கட்டிடம் உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு அடையாளமாக இருக்கும்

Uncategorized
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69 ஆவது பொதுக்குழு கூட்டம்! தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69 ஆவது பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் துவக்கத்தில் கடந்த வருடங்களில் நம்மை விட்டு மறைந்த நடிகை சரோஜாதேவி, நடிகர்கள் டெல்லி கணேஷ், ராஜேஷ், எம். ஏ. பிரகாஷ், மனோஜ் கே.பாரதி மற்றும் சமீபத்தில் மறைந்த ரோபோ சங்கர் உட்பட 70மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் பொதுக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும், சிவகுமார், வடிவேலு, ஜி.வி.பிரகாஷ்குமார், ஸ்ரீமன், பசுபதி, நடிகைகள் எம்.என்.ராஜம், சச்சு, லதா அம்பிகா, ஊர்வசி, ரேகா, ஷர்மிளா, ரோகிணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குறிப்...