Saturday, November 21

Uncategorized

தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழா!

தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழா!

Uncategorized
“விஜயகாந்த்துக்கு அடுத்ததாக விமல் தான்” தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழாவில் ஆர்.வி உதயகுமார் பாராட்டு! நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் எழில். கடந்த 2013ல் விமலை வைத்து இவர் இயக்கிய தேசிங்கு ராஜா படம் வெற்றிப்படமாக அமைந்தது. 12 வருடங்களுக்கு தற்போது இதன் இரண்டாம் பாகமாக விமல் நாயகனாக நடிக்கும் தேசிங்கு ராஜா-2 படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எழில். இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் P ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்தில் நடிகர் ஜனா அறிமுக...
‘தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்த ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி!

‘தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்த ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி!

Uncategorized
2026 மார்ச் 26 ஆம் தேதியன்று வெளியாகும் 'தி பாரடைஸ்' படத்தின் படப்பிடிப்பில் இணைந்த 'நேச்சுரல் ஸ்டார்' நானி! *ஹைதராபாத்தில் நாற்பது நாட்கள் நடைபெறும் ஸ்ரீகாந்த் ஓடேலா - சுதாகர் செருகுரி- SLV சினிமாஸ் - கூட்டணியில் தயாராகும் ' தி பாரடைஸ்' படத்தின் படப்பிடிப்பில் 'நேச்சுரல் ஸ்டார் 'நானி இணைந்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படம்- அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது* இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் கனவு படமான ' தி பாரடைஸ்' படத்தின் படப்பிடிப்பில் 'நேச்சுரல் ஸ்டார்' நானி இணைந்திருக்கிறார். இந்த திரைப்படத்தை SLV சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த அதிரடி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெறுகிறது. ' தசரா' படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு 'நேச்சுரல் ஸ்டார் 'நானி- இயக...
சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

Uncategorized
சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா! சாருகேசி படத்தில் ஒய் ஜீ மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அருண் ஆர் இந்த படத்தை தயாரிக்க, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். பாடல்கள் மற்றும் வசனம் பா. விஜய் எழுத, தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார். சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர். சாருகேசி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யராஜ் நேரில் வர முடியாத காரணத்தால் வீடியோ பதிவின் மூலம் அனைவரிடமும் பேசியிருந்தார். சத்யராஜ் பேசும்போது," அனைவருக்கும் வணக்கம். ஒருநாள் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா எனக்க...

ஜூன் 27 முதல் திரையரங்குகளில் வெளியாகும் ‘மார்கன்’

Uncategorized
“விஜய் ஆண்டனியின் பின்னணி இசையுடன் ரசிகர்களுக்கு ஒரு முழு சினிமாட்டிக் அனுபவத்தை ‘மார்கன்’ வழங்கும்” – இயக்குநர் லியோ ஜான் பால்; தமிழ் சினிமா துறையின் மிகச் சிறந்த மற்றும் பாராட்டப்பட்ட எடிட்டர்களில் ஒருவர் லியோ ஜான் பால், தனது இயக்குநர் அவதாரமாக ‘மார்கன்’ திரைப்படத்தை இயகியுள்ளார். விஜய் ஆண்டனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த படம் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. எடிட்டிங் துறையில் ஸ்லீக் மற்றும் ஸ்டைலிஷ் ட்ரான்ஸிஷன்களில் தேர்ச்சி பெற்றவர், இப்போது இயக்குநராக தாழ்மையுடன் தன் பயணத்தைத் தொடங்குகிறார். ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வீடியோ ப்ரொமோக்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இயக்குநர் லியோ ஜான் பால், ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் சிறப்பம்சங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார். “இந்தப் படத்தின் கதை எழுத தொடங்கியபோத...
இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ‘கருப்பு’ படத்தில் இணையும் சூர்யா த்ரிஷா!

இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ‘கருப்பு’ படத்தில் இணையும் சூர்யா த்ரிஷா!

Uncategorized
சூர்யா மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் பிரம்மாண்டப் படைப்பாக உருவாகும் ‘கருப்பு’. ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது! தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல தரமான படங்களைத் தயாரித்து, தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ள பெற்ற ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்தப் பிரமாண்ட படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இதுவரை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எடுத்துள்ள புகழ்பெற்ற படங்களின் வரிசையில் மிக அதிக பொருட் செலவில் உருவாகும் திரைப்படம் ‘கருப்பு’. அதேபோல், சிறிய அளவிலான ஆனால் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களை இயக்கிய ஆர்.ஜே. பாலாஜி, ‘கருப்பு’ படத்தின் மூலம் பட்ஜெட், திட்டமிடல் மற்றும் மிகப்பெரிய நடிகர் பட்டாளம் என அவரும் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார். சூர்யா மற்றும் த்ரிஷா இணை இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேரும் படம் ‘கருப...

திரையில் மட்டும் இல்லை. நிஜத்திலும் டாக்டர்தான்தீபா பாலு!

Uncategorized
'ஹார்ட்பீட்' வெப் தொடரில் டாக்டராக நடித்த நடிகை தீபா பாலு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்! கலைக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கலை மற்றும் திரைத்துறைக்கு பல திறமைகள் அறிமுகமாகியுள்ளனர். அந்த வகையில், தஞ்சாவூர், பட்டுக்கோட்டையை சேர்ந்த தீபா பாலு திரைத்துறைக்கு தவிர்க்க முடியாத அறிமுகம். ஹாட்ஸ்டாரில் 'ஹார்ட்பீட்' வெப்தொடரில் டாக்டர் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கல்லூரியில் தீபா படித்துக் கொண்டிருந்தபோது, நாக்கவுட் யூடியூப் சேனலில் அவர் நடித்த 'தேன்மிட்டாய்' சீரிஸ் அனைவரையும் ரசிக்க வைத்தது. கோவிட் காலக்கட்டத்தில் ஹிட் ஆன இந்த சீரிஸ் மூலம் அவருக்கு ரசிகர்கள் உருவானதுடன் திரைத்துறையினர் கவனத்தையும் தீபா கவர்ந்தார். ஹாட்ஸ்டார் வெப்சீரிஸூக்காக எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் ஷியாம் தீபாவை தொடர்பு கொண்டதுதான் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய தி...
கரிகாடன் :அறிமுகம் தலைப்பு டீசர் வெளியீடு!

கரிகாடன் :அறிமுகம் தலைப்பு டீசர் வெளியீடு!

Uncategorized
கரிகாடன் :அறிமுகம் தலைப்பு டீசர் வெளியீடு! பிற மொழிகளின் உயிர்த் துடிப்பான திரைப்படைப்புகள் தமிழில் வெளியாகி வெற்றி பெறுவது இப்போது சகஜமாகி வருகிறது. அந்த வகையில் கன்னடத்தில் இருந்து தமிழில் வெளியாகவிருக்கும் படம் தான் 'கரிகாடன்'. ஆக்ஷனும் அமானுஷ்யமும் நிறைந்த ஒரு பரபரப்பான திரைப்படமாக 'கரிகாடன் ' உருவாகியுள்ளது. இப்படத்தில் காடா நடராஜ்,நிரிக்ஷா ஷெட்டி,குழந்தை ரித்தி, மஞ்சு சுவாமி,யாஷ் ஷெட்டி, கோவிந்த கவுடா,திவாகர், கிலாடி சூர்யா, டி.ராகேஷ் பூஜாரி,விஜய் சந்தூர், சந்திரபிரபா,கரிசுப்பு, கிரி,பாலராஜாவாடி, மாஸ்டர் ஆர்யன் மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கில்லி வெங்கடேஷ். இசை: அதிஷய் ஜெயின், மற்றும் ஷஷாங்க் சேஷகிரி, ஒளிப்பதிவு: ஜீவன் கவுடா, எடிட்டிங் தீபக் சி.எஸ், கலை ரவி, கவுடல்லி சாஷி, நடனம் ராம்கிரண். ரித்தி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பி...

‘ராஜ புத்திரன்’ படத்தை கண்டு மகிழ்ந்த ஆதரவற்ற முதியவர்கள்

Uncategorized
அதுல்யா முதியோர் இல்லத்தில் இருக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்காக பிரபு, வெற்றி, கிருஷ்ண பிரியா, கோமல் குமார் மற்றும் பிரபலங்கள் நடிக்கும் "ராஜபுத்திரன்" படத்தை தயாரித்த கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் K.M. சபி , இணை தயாரிப்பாளர்கள் K.கோதர் ஷா மற்றும் T.பாருக்கு ஆகியோர்கள் சென்னை சாலிகிராமம் பரணி ஸ்டுடியோவில் பிரத்யேக காட்சி ஏற்பாடு செய்து உணவு , வேஷ்டி , சேலை கொடுத்து வந்திருந்த அனைவர்களையும் கெளரவப் படுத்தினார்கள். "ராஜபுத்திரன் " திரைப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ளார், ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்ய ஏ ஐ எஸ் நெஃபல் ராஜா இசை அமைக்க மே 30 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வர இருக்கிறது. @idiamondbabu...
‘மையல்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் சம்ரிதி தாரா.

‘மையல்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் சம்ரிதி தாரா.

Uncategorized
கேரளா பல திறமையான நடிகர்களைத் தமிழ் சினிமாவுக்குக் கொடுத்து வருகிறது...அந்த வரிசையில் நடிகை சம்ரிதி தாரா! தமிழ் சினிமா ரசிகர்கள் திறமையை வெளிப்படுத்தும் நடிகர்களை எப்போதும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றனர். அந்த வகையில், மொழிகளைக் கடந்து நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிப்பதில் நடிகை சம்ரிதி தாரா ஆர்வமாக உள்ளார். மே 23 அன்று உலகம் முழவதும் வெளியாக இருக்கும் 'மையல்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் சம்ரிதி தாரா. மலையாளத்தில் சமீபத்தில் வெளியான 'பரனு பரனு பரனு செல்லன்' திரைப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, "தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. அது 'மையல்' படம் மூலம் நடந்திருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் A.P.G. ஏழுமலை கதை பற்றி சொன்னபோது என் கதாபாத்திரத்தின் ஆழம் புரிந்து கொண்டேன்...
தமிழில் அறிமுகமாகும் HIT 3′ புகழ் கோமலி பிரசாத்!

தமிழில் அறிமுகமாகும் HIT 3′ புகழ் கோமலி பிரசாத்!

Uncategorized
'HIT 3' புகழ் கோமலி பிரசாத் தமிழில் அறிமுகமாகிறார்! பல வகையான கதாபாத்திரங்களில் தனது முத்திரையைப் பதித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் கோமலி பிரசாத். அவரது சமீபத்திய ஹிட் படம் 'HIT 3'. இதில் அவரது ASP வர்ஷா கதாபாத்திரம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சவாலானது. இந்தப் பயணம் இனிமையானதாகவும் அதே சமயம் அட்வென்சராகவும் இருந்ததாக சொல்கிறார் கோமலி. "இந்த பவர்ஃபுல்லான ஆக்‌ஷன் பேக்ட் கதாபாத்திரம் பார்த்து ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு என்னை கண்கலங்க வைத்து விட்டது. இதேபோன்று இன்னும் பல கதாபாத்திரங்கள் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் அதிகமாகி இருக்கிறது" என்றார். நானியுடன் இணைந்து நடித்திருப்பது மற்றுமொரு மறக்க முடியாத அனுபவம். அவர் ஒரு திறந்த புத்தகம் என்கிறார். "அவர் நடிகர் மட்டுமல்ல. எல்லாத் துறைகள் பற்றியும் அவருக்குத் தெரியும். சில ஆக்‌ஷன் மூவ்ஸூம் எனக்கு சொல்லித் தந்தார். பெரிய இன்ஸ...