Uncategorized
பழிவாங்குதலின் பரிமாணங்களைக் காட்டும் ‘கங்கணம்’
பழிவாங்குதலின் பரிமாணங்களைக் காட்டும் 'கங்கணம்'
ஒரு செயலில் உறுதியாக செயல்படுத்தியே தீர வேண்டும் என்று நிற்பதைக்' கங்கணம் கட்டிக்கொண்டு' நிற்பதாகச் சொல்வார்கள்.
கங்கணம் என்பது ஒரு விரதக் கயிறு.கோவில் விழாக்களுக்கு விரதம் இருப்பவர்கள் கட்டிக் கொள்வார்கள். கங்கணம் என்பது விரலி மஞ்சளை மஞ்சள் கயிற்றில் கட்டி அத்துடன் வெற்றிலை ஒன்றை மடித்துச் சேர்த்துக் கட்டி அதை வலது கையில் கட்ட வேண்டும் .உள்ளே உள்ள பொருட்கள் தெரியாமல் அதன் மேல் மஞ்சள் துணியால் கட்டிக்கொள்வர்.இதைக் காப்பு என்றும் சொல்வார்கள் .இப்படிக் காப்பு கட்டி விட்டால் அவர்கள் நினைத்த காரியத்திற்கு எந்தத் தடையும் இல்லாமல் இறையருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.எனவேதான் காரிய உறுதிபாட்டைக் கூறும் போது 'கங்கணம் கட்டிக் கொள்வது' என்று கூறுவார்கள்.
அப்படிப்பட்ட 'கங்கணம்' என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி உள்ளது.
இப்படத்தின் கதையில் கதாநாயக...
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே _ விமர்சனம்
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே _ விமர்சனம்
தற்போதைய இளம் தலைமுறை தாங்கள் நினைத்ததையே சரி என செயல்படுவதால் ஏற்படும் விளைவுகளை ‘அடல்ஸ் ஒன்லி’ படமாக கொடுத்து இருக்கிறார்கள்.
இளம் பெண்களிடம் தியேட்டர் இருட்டில் அத்து மீறும், மதுரை இளைஞன்தான் நாயகன். மதுரையைச் சேர்ந்த அவன், ஆன்லைன் மூலம் நட்பான மாயவரத்துப் பெண்ணைத் தேடி காம வெறியோடு வருகிறான்.
அவன் வந்த நேரம் நாயகியின் பெற்றோர் யாரும் வீட்டில் இல்லை. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.
நாயகன் செந்தூர் பாண்டியன் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார். பெண்களிடம் காமத்துடன் நடந்துகொள்வது, செக்ஸூக்காக அதீத ஆர்வத்துடன் காத்திருப்பது, படபடப்பது என காம இளைஞனை கண் முன் நிறுத்துகிறார்.
நாயகி பிரீத்தி கரண் சிறப்பான தேர்வு. தன்னைத் தேடி வந்த இளைஞனை கூட்டிக் கொண்டு பைக்கில் ஊர் சுற்ற ஆசைப்படும் அப்பாவிப் பெண்ணாக வருகிறார். அதே நேரம், நாயகன் தன்...
திரையரங்குகளில் மீண்டும் வெளியாகும் ‘கோ’!
ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவான ‘கோ’ திரைப்படம் மார்ச் 1, 2024 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது!
இந்திய ஜனநாயகம் உலகளவில் எப்போதும் உற்றுநோக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது. மேலும் அந்த ஜனநாயகத்தை கட்டமைக்கும் தேர்தல்கள் மிகப்பெரிய நிகழ்வாகவும் இருக்கிறது. இந்த தேர்தல் அரசியல் ஜானரில் வெளியாகும் திரைப்படங்கள் அரிது. ஆனால், அப்படியான படங்கள் வெளியானால் மொழி மற்றும் பிராந்தியங்களுக்கு அப்பால் அவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரித்த ’கோ’ திரைப்படம் கடந்த 2011ல் வெளியாகி விமர்சன ரீதியாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது. அதன் கதைக்களத்திற்காக மட்டுமல்லாமல், அரசியல் அரங்கில் செல்வாக்கு செலுத்துவதிலும் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவதிலும் இளைஞர்களின் சக்தி எவ்வளவு முக்கியமானது என்பதை அந...
வில்லனாக அறிமுகமாகும் தமிழ் பாரதி!
தமிழ் சினிமா உலகில் புதிய வில்லனாக அறிமுகமாகிறார் தமிழ் பாரதி!
கழுமரம் என்கின்ற திரைப்படத்தின் மூலம் தன் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும், யார் இவர் என்று கேட்கும் அளவிற்கு ஒரு புதிய முகம் வில்லத்தனம் செய்திருக்கிறது.
கத்தியின்றி, இரத்தமின்றி, தன் நடிப்பால் பார்ப்பவர்களை எரிச்சல் ஊட்டும் வகையில் கதாநாயகனுக்கு இடையூறு செய்யும் கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
யார் இவர் ?இதற்கு முன் இவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்ற நமது கேள்விக்கு அவரிடமே பதில் கேட்டரிந்தோம்.
அவர் பேச்சில் சுவாரசியம் தழும்பியது. சிரித்த முகத்தோடு பேசத் தொடங்கிய தமிழ் பாரதி தான் ஒரு சின்னத்திரை இயக்குநர் என்பதை பதிவு செய்தார். பைரவி, கிருஷ்ணா காட்டேஜ், காத்து கருப்பு, என் தோழி என் காதலி என் மனைவி, அம்மு, கனா காணும் காலம், அஞ்சறைப்பெட்டி, சுவை தேடி, சூரிய புத்திரி, எனப் பல்வேறு தொடர்களில் பணியாற்றிய ...
தாய் மீதும் பெண்கள் மீதும் மரியாதை ஏற்படுத்தும் படம் ‘பர்த் மார்க்’!
”’பர்த் மார்க்’ சாதாரண விஷயம் கிடையாது!”- இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன்!
ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'பர்த் மார்க்'. 'பர்த் மார்க்' திரைப்படம் ஜெனி என்ற மிர்னா கதாபாத்திரத்தைச் சுற்றி நகரக்கூடிய கதை. படத்தில் ஏழு மாத கர்ப்பிணியாக மிர்னா நடித்துள்ளார். படப்பிடிப்பு 36 நாட்கள் நடந்துள்ளது.
படம் குறித்து இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் கூறியிருப்பதாவது, "'பர்த் மார்க்’ நிச்சயம் புது அனுபவம் உங்களுக்குக் கொடுக்கும். நம் வாழ்விலும் ‘பர்த் மார்க்’ என்பது சாதாரண விஷயம் கிடையாது. இதுவரை பார்த்துச் சலித்த கதைகளைப் போல இல்லாமல் புதிதாக எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அப்போது தான் சுகப்பிரசவம் பற்றி விக்ரம் ஒரு விசயத்தைக் கூறினார். அதைப்பற்றி படிக்கும்போது நிறைய சுவாரஸ்யமான வி...
கோலிவுட்டில் ஒரு புதிய ‘ஸ்டார்’ நடிகை!
கோலிவுட்டில் ஒரு புதிய 'ஸ்டார்' நடிகையாக உருவாகி இருக்கிறார் மேகா ஷெட்டி!
தனது நேர்த்தியான வசீகரத்தாலும் பன்முகத் திறனாலும் பார்வையாளர்களைக் கவரும் திறன் கொண்ட நடிகைகள் மிகக் குறைவு. அப்படியான நடிகைகள் திரையில் பார்வையாளர்கள் எளிதில் தங்களுடன் தொடர்புப்படுத்திக் கொள்ளும்படியான பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரங்களை சிரமமின்றி நடிப்பார்கள். தமிழ் மொழியின் மீதான அவர்களின் தேர்ச்சி ரசிகர்களுக்குப் பிடித்திருப்பது மட்டுமல்லாமல், அவர்களது தொடர் முயற்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது. தமிழ் அல்லாது வேறு மொழிகளில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த ஜோதிகா, நஸ்ரியா மற்றும் பலர் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றியை ருசித்திருக்கிறார்கள். இந்த வரிசையில் தமிழ் சினிமாவுக்கான புதுவரவாக நடிகை மேகா ஷெட்டி இணைந்துள்ளார்.
கன்னட சினிமாவில் இருந்து வந்த மேகா ஷ...
‘சிரோ’ படப்பிடிப்பு நிறைவு!
மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!
மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர் தனது 'புரொடக்ஷன் நம்பர் 2' ஃபேண்டஸி கதையான 'சிரோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தப் படத்தில் 'பதினெட்டாம் படி' மற்றும் 'வாலாட்டி' போன்ற பிளாக்பஸ்டர் மலையாளத் திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பிற்காக அங்கீகாரம் பெற்ற அக்ஷய் ராதாகிருஷ்ணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சர்டிஃபைட் கமர்ஷியல் பைலட்டான நடிகை பிரார்த்தனா சாப்ரியா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். ரோகினி, 'போர் தோழில்' புகழ் லிஷா சின்னு, 'சூப்பர் டீலக்ஸ்' புகழ் நோபல் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படக்குழுவினரின் சரியான திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்பு காரணமாக திட்டமிட்ட 45 நாட்களுக்குள் படப்பிடிப்பு வெற்றிகரமாக முட...
ஷார்ட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகும் ‘நவயுக கண்ணகி’
கோமதி துரைராஜ் தயாரிப்பில் ஷார்ட்பிளிக்ஸ் வெளியீடாக உருவாகி உள்ள படம் ‘நவயுக கண்ணகி’. இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ். பெங்களூருவை சேர்ந்த இவர் குறும்படங்களின் பின்னணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை தமிழில் இயக்கியுள்ளார்.
படத்தின் மைய கதாபாத்திரத்தில் பவித்ரா தென்பாண்டியன் நடிக்க, முக்கிய வேடங்களில் விமல் குமார், டென்சில் ஜார்ஜ், தென்பாண்டியன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் இரண்டு பாடல்களை சின்மயி மற்றும் சைந்தவி இருவரும் பாடியுள்ளனர் பாடல்களுக்கு ஆல்வின் இசை அமைத்துள்ளார் கெவின் பின்னணி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தர்மதீரனும், கலையை மோகன்குமார் தங்கராஜும் கவனித்துள்ளனர்.
ஷார்ட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் ‘நவயுக கண்ணகி’ நாளை டிசம்பர் 24ம் தேதி வெளியாகிறது. இப்படத்தை பத்திரிகையாளர்களுக்கு போட்டு காண்பித்தனர். படத்தின் இறுதி காட்சி...
உருவ கேலியை விமர்சிக்கும் படம் “மதிமாறன்”!
"மதிமாறன்" திரைப்பட இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா
ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”. இம்மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
இவ்விழாவினில்…
தயாரிப்பாளர் நவீன் சீதாராமன் பேசியதாவது…
இது நிஜமா கனவா என அறியமுடியவில்லை. நான் மிகவும் எமோஷனாலாக இருக்கிறேன். நான் ஹாலிவுட்டில் வேலை செய்திருந்தாலும் இங்குத் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் மேடையில் இருப்பது பெருமையாக இருக்கிறது. அண்ணன்கள் தான் தம்பிகளைக் கஷ்டப்பட்டு பெயர் வாங்க வைப்ப...

