Sunday, November 15

Uncategorized

“18 படங்களில் நடித்தாலும் ‘லப்பர் பந்து’ தான் எனக்கு முதல் படம் போல”_ நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே!

“18 படங்களில் நடித்தாலும் ‘லப்பர் பந்து’ தான் எனக்கு முதல் படம் போல”_ நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே!

Uncategorized
“’லப்பர் பந்து’ எனது திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை படமாக இருக்கும்"_ நடிகர் டிஎஸ்கே நம்பிக்கை! சின்னத்திரை காமெடி ரியாலிட்டி ஷோக்களில் நான்கு முறை டைட்டில் வென்றவர் டி.எஸ் கே. சின்னத்திரையின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சினிமாவிலும் பிசியான காமெடி நடிகராக நடித்து வரும் டிஎஸ்கே சமீப காலமாக வெப் சீரிஸ் பக்கமும் கவனத்தை திருப்பியுள்ளார். வரும் செப்-20ஆம் தேதி ‘லப்பர் பந்து’ வெளியாகவுள்ள நிலையில் அந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், தனது அடுத்த படங்கள், வெப்சீரிஸ் என்ட்ரி குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் டிஎஸ்கே. “’லப்பர் பந்து’ நான் நடிக்கும் 18 ஆவது படம். ஆனாலும் இந்த படத்தில் நடித்த போது இதுதான் எனது முதல் படம் என்பது போல உணர்ந்தேன். அந்த அளவிற்கு இந்த படத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். மிகப்பெரிய அனுபவங்கள் கிடைத்தன. *இயக்குநர் தமிழரசன் நடிப்பு குறித்...
திரைக்கதை எழுதுவதில் தடம் பதிக்கும் சாந்தி பாலச்சந்திரன்!

திரைக்கதை எழுதுவதில் தடம் பதிக்கும் சாந்தி பாலச்சந்திரன்!

Uncategorized
நடிகை சாந்தி பாலச்சந்திரன் திரைக்கதை எழுதுவதிலும் தடம் பதிக்கிறார்! நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபேரர் பிலிம்ஸின் அடுத்த படத்திற்கான கூடுதல் திரைக்கதையை நடிகை சாந்தி எழுதியுள்ளார். எழுத்தாளரும் இயக்குநருமான டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் நடிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. சாந்தி நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் பல விருதுகளை வென்றுள்ளன. 'சூரரைப் போற்று' படத்தின் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்ற ஷாலினி உஷாதேவி இயக்கிய மலையாளத் திரைப்படம் 'என்னென்னும்'-ல் சாந்தி நடித்திருந்தார். இந்தப் படம் கேரள மாநில விருதுகள் 2024 இல் சிறப்பு நடுவர் விருதை வென்றது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற நியூசெட்டல் இன்டர்நேஷனல் ஃபென்டாஸ்டிக் ஃபிலிம் பெஸ்டிவலில் இத்திரைப்படம் சர்வதேச விமர்சகர் விருதையும் வென்றது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட த...
திரையுலகில் 28 ஆண்டுகளைக் கொண்டாடும் சிம்ரன்!

திரையுலகில் 28 ஆண்டுகளைக் கொண்டாடும் சிம்ரன்!

Uncategorized
சிம்ரன் தனது புதிய படமான 'தி லாஸ்ட் ஒன்' ('The Last One') மூலம் திரையுலகில் 28 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார்! *தீபக் பஹா தயாரிப்பில் லோகேஷ் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது 'தி லாஸ்ட் ஒன்'* மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள‌ நடிகை சிம்ரன், திரையுலகில் 28 ஆண்டுகளை வெற்றிகரமாக‌ கொண்டாடும் வேளையில், நாடு முழுவதுமுள்ள தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார். ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் பேனரில் தீபக் பஹா தயாரித்து, சுயாதீன திரைப்படங்களுக்காக‌ புகழ் பெற்ற‌ லோகேஷ் குமார் இயக்கத்தில் வளர்ந்து வரும் 'தி லாஸ்ட் ஒன்', திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது. இதுவரை கண்டிராத வேடத்தில் சிம்ரன் இதில் தோன்றுகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ...
அவ்ராம் மஞ்சுவின் ஃபர்ஸ்ட் லுகை வெளியிட்ட ‘கண்ணப்பா’ குழு!

அவ்ராம் மஞ்சுவின் ஃபர்ஸ்ட் லுகை வெளியிட்ட ‘கண்ணப்பா’ குழு!

Uncategorized
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கண்ணப்பாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிக்கும் அவ்ராம் மஞ்சுவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது! கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்திற்காக குழந்தை தின்னடு கதாபாத்திரத்தில் நடிக்கும் அவ்ராம் மஞ்சுவின் ஃபர்ஸ்ட் லுகை வெளியிட்ட ‘கண்ணப்பா’ குழு! விஷ்ணு மஞ்சுவின் மகனும், பழம்பெரும் நடிகர் மோகன் பாபுவின் பேரனுமான அவ்ராம் மஞ்சு, மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களின் வரிசையில் முன்னிலையில் இருக்கும் ’கண்ணப்பா’ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இதன் மூலம் மஞ்சு குடும்பத்தின் பாரம்பரியத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, குழந்தை கண்ணப்பா அல்லது தின்னடுவாக நடிக்கும் அவ்ராமின் ஃபர்ஸ்ட் லுக் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. கண்ணப்பா, சிவபெருமானின் மதிப்பிற்குரிய பக்தரான பக்த கண்ணப்பாவின் கதையின் பிரமாண்டமான திரை படைப்பாக உருவ...
தங்கலான் _ விமர்சனம்

தங்கலான் _ விமர்சனம்

Uncategorized
தங்கலான் _ விமர்சனம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை பீரியட் பிலிமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் ப.ரஞ்சித். வெள்ளையர் காலத்தில் நடக்கிறது கதை. தங்க வயலில் வேலை செய்ய ஆட்களை தேடுகிறார் வெள்ளை அதிகாரி. ஊரில், ஜமீனிடம் அடிமையாக வாழும் நிலையிலிருந்து மீள.. ஒடுக்கப்பட்ட மக்கள் அங்கே செல்கிறார்கள். அங்கும் அவர்களது நிலை மாறவில்லை. தங்கலான் என்கிற அவர்களது தலைவன் அதன் பிறகு என்ன முடிவெடுக்கிறார் என்பதே கதை. நாயகன் தங்கலானாக அசத்தி இருக்கிறார் விக்ரம். மனைவி மீதான காதல், குழந்தைகள் மீதான பாசம், எதிர்கால சந்ததியினர் மீதான அக்கறை என வாழ்ந்திருக்கிறார் மனிதர். இவரது நடிப்பைக் குறிப்பிட்டுச் சொல்வதானால் ஒவ்வொரு காட்சியையும் சொல்ல வேண்டும். அதி அற்புதம். விக்ரமின் புகழ் கிரீடத்தில் மற்றும் ஓர் ஒளிவீசும் வைரமாக ஜொலிக்கிறது தங்கலான்.  விக்ரமின் மனைவியாக வரும் பார்வதியும் கதாபாத்திர...
ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ படத்தின் முதல் பாடல்!

ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ படத்தின் முதல் பாடல்!

Uncategorized
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படத்தின் முதல் பாடலான 'மக்காமிஷி' வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது* *ஹாரிஸ் ஜெயராஜ் அதிரடி இசையில் பால் டப்பா எழுதி பாடிய உற்சாகமிக்க 'மக்காமிஷி' பாடலுக்கு சாண்டி மாஸ்டர் துடிப்புமிக்க நடன அசைவுகளை வடிவமைத்துள்ளார்* Song Link: https://youtu.be/eF9LRFbkHLQ ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படத்தின் முதல் பாடலான 'மக்காமிஷி', அதன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், எழுதி பாடிய பால் டப்பா மற்றும் நடனம் அமைத்த சாண்டி மாஸ்டர் ஆகியோரால் வெளியிடப்பட்டது. 'மக்காமிஷி' என்றால் என்ன என்று சமூக வலைதளங்களில் சுற்றி வந்த கேள்விக்கு கெத்து, மாஸ், ஸ்டைல் என்று அர்த்தம...
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’

News, Uncategorized
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவாகும் 'யூ ஆர் நெக்ஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது! மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில் முன்னணி நடிகர்களுடன் புதுமுகங்கள் அறிமுகமாகும் 'யூ ஆர் நெக்ஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கியது. ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில், ஷரீஃப் அவர்களது எழுத்து மற்றும் இயக்கத்தில் தயாராகும் படமே 'யூ ஆர் நெக்ஸ்ட்'. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் பல்வேறு  சம்பவங்களை ஹாரர் பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். உள்ளது. இத்திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ்,கன்னடம்,தெலுங்கு, மலையாளம் ...
“அறம் செய்” திரைப்பட இசை வெளியீட்டு விழா

“அறம் செய்” திரைப்பட இசை வெளியீட்டு விழா

News, Uncategorized
"அறம் செய்" திரைப்பட இசை வெளியீட்டு விழா ! Thaaragai cinimas தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் "அறம் செய்". நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது "அறம் செய்". விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது இந்நிகழ்வினில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது.... இயக்குநர் பாலு எஸ் வைத்தியநாதன் ஒரு நாள் போனில் பேசினார். நான் நடிக்க வேண்டும் என்றார், நான் Youtube ல், பேசுவது பற்றித் தெரியுமா என கேட்டேன், தெரியும் சார், தெரிந்து தான் கூப்பிட்டேன் என்றார். மகிழ்ச்சி என்றேன். இவரிடம் உள்ள நல்ல விசயம்...
பிரபு – வெற்றி  நடிக்கும் ‘ஆண் மகன்’!

பிரபு – வெற்றி நடிக்கும் ‘ஆண் மகன்’!

Uncategorized
பிரபு - வெற்றி - கிருஷ்ண பிரியா நடிக்கும் ஆண் மகன்* முதன்மை கதாபாத்திரத்தில் துள்ளல் கலந்த அப்பாவாக இளைய திலகம் பிரபு நடிக்க.. 8 தோட்டாக்கள் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார் கதாநாயகியாக கேரளத்து பைங்கிளி கிருஷ்ண பிரியா அறிமுகம் ஆகிறார் இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர் வி உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை, மற்றும் பலர் நடிக்கின்றனர், கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் இளம் தயாரிப்பாளர் KM சபி மற்றும் பாரூக் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக திரைப்படம் உருவாகிறது! *மகாகந்தன் அறிமுக இயக்குனர்* வெற்றிப்பட இயக்குனர்களான வசந்த் சாய் மற்றும் நந்தா பெரியசாமி அவர்களுடன் பணிபுரிந்த மகா கந்தன் இயக்கத்தில் கத்திரி வெயிலிலும் அதிதி புதிரியாய் தயாராகிறது! *வைரமுத்து - T ராஜேந்தர் - நவ்பல் ராஜா* ஆண்ம...
விவசாயிகளின் வாழ்வியலைச் சொல்ல வரும் ‘பரமன்’!

விவசாயிகளின் வாழ்வியலைச் சொல்ல வரும் ‘பரமன்’!

Uncategorized
விவசாயிகளின் வாழ்வியலைச் சொல்ல வரும் ‘பரமன்’! இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் J சபரிஸ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பரமன்’ விவசாயிகளின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் 'ஜெய்பீம்', 'பரியேறும் பெருமாள்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக நடித்திருக்கிறார். பழ கருப்பையா வில்லனாக நடிக்க, இதுவரை பார்த்திராத ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார். மேலும் ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, சஞ்சய், மது உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமீம் அன்சாரி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை இயக்குநர் சபரிஸே மேற்கொண்டுள்ளார். படத்தின் கதையை இதய நிலவன் எழுதியுள்ளார். பாடல்களை வேல்முருகன், முகேஷ் ஆகியோர் ...