Sunday, October 25

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே _ விமர்சனம்

Loading

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே _  விமர்சனம்

தற்போதைய இளம் தலைமுறை தாங்கள் நினைத்ததையே சரி என செயல்படுவதால் ஏற்படும் விளைவுகளை ‘அடல்ஸ் ஒன்லி’ படமாக கொடுத்து இருக்கிறார்கள்.

இளம் பெண்களிடம் தியேட்டர் இருட்டில் அத்து மீறும், மதுரை இளைஞன்தான் நாயகன். மதுரையைச் சேர்ந்த அவன், ஆன்லைன் மூலம் நட்பான மாயவரத்துப் பெண்ணைத் தேடி காம வெறியோடு வருகிறான்.

அவன் வந்த நேரம் நாயகியின் பெற்றோர் யாரும் வீட்டில் இல்லை. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.
நாயகன் செந்தூர் பாண்டியன் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார். பெண்களிடம் காமத்துடன் நடந்துகொள்வது, செக்ஸூக்காக அதீத ஆர்வத்துடன் காத்திருப்பது, படபடப்பது என காம இளைஞனை கண் முன் நிறுத்துகிறார்.

நாயகி பிரீத்தி கரண் சிறப்பான தேர்வு. தன்னைத் தேடி வந்த இளைஞனை கூட்டிக் கொண்டு பைக்கில் ஊர் சுற்ற ஆசைப்படும் அப்பாவிப் பெண்ணாக வருகிறார். அதே நேரம், நாயகன் தன்னிடம் அத்துமீறும்போது அவரது பதிலடியும் சிறப்பு.

நாயகனுக்கு நண்பனாக வருகிற சுரேஷ் மதியழகனும் சரியான தேர்வு. நாயகியின் தோழிகள் எடுக்கும் ஜாலி வீடியோவில் சிக்கும் காட்சியில் அப்பாவித்தனத்தை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார்.

எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, தமிழ்ச்செல்வி, பிக்பாஸ் பூர்ணிமா, அபிஷேக் ராஜு,ஷிவானி கீர்த்தி, மாலிக், நாகராஜ், மினு வாலண்டினா இதர கதாபாத்திரத்தில் தோன்றுபவர்களும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

பைக் காட்சிகளை சிறப்பாக ஒளிப்பதிவு செய்து அசத்தி இருக்கிறார் ஒளிப்பதிாளர் உதய் தங்கவேல்.

இசை, எடிட்டிங் ஓகே ரகம்.
அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என்று படம் முழுதும், ஆபாசத்தைத் திணித்து இருக்கிறார் இயக்குநர். அதைக் கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.