Wednesday, November 18

Uncategorized

Karthikeyan DK: From Pattukottai to the Screen!

Karthikeyan DK: From Pattukottai to the Screen!

Uncategorized
Karthikeyan DK: From Pattukottai to the Screen Hailing from Pattukottai, Karthikeyan DK, popularly known as Dee Kay, is steadily making his presence felt in the world of Tamil entertainment. His journey has taken him from the popular television space to increasingly prominent roles on screen. He first caught the attention of audiences through shows such as Kana Kaanum Kaalangal and Heart Beat, before expanding his horizons into the world of OTT. His appearance in ZEE5’s Aindham Vedham gave him another opportunity to showcase his versatility and connect with a wider audience. A naturally handsome actor with a classic screen presence, Karthikeyan has a look that reminds many of the younger Kamal Haasan—particularly the combination of charm, expressive features and effortless style. It...
ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் ‘நிஞ்ஜா’

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் ‘நிஞ்ஜா’

Uncategorized
ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!* இயக்குநர் முருகு, ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து முழுமையான ரொமாண்டிக் காமெடி குடும்ப பொழுதுபோக்குப் படத்தை இயக்குகிறார். தஞ்சாவூரில் 20 நாட்கள் நடைபெறும் முதல் கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களான ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சீன் ரோல்டன் இணையும் ‘நிஞ்ஜா’ திரைப்படம் புதிய பரிமாணத்தில் உருவாகிறது. இந்த கூட்டணி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதலில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஜி.வி. பிரகாஷ் குமார், தற்போது இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘லவ் டுடே’, ‘பார்க்கிங்’ உள்...

வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள்!

Uncategorized
தமிழ் திரைப்படத் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள்* *மரியாதைக்குரிய தமிழ்நாடு அரசிற்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கும்,* பொருள்: செப்டம்பர் 1 முதல் திரைப்படப் படப்பிடிப்புகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்து சுகமான தீர்வு காண தமிழ்நாடு அரசுக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களுக்கும் வேண்டுகோள். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தற்போது எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிகள் மற்றும் பல்வேறு சிரமங்களை திரைப்படத் தொழிலாளர்களின் அமைப்பான ஃபெப்சி (FEFSI) நன்கு உணர்ந்து வருகிறது. தயாரிப்பாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு எப்போதுமே மாற்றுக் கருத்து இருந்தது இல்லை. சமீபத்தில் திரையரங்க உரிமையாளர்களுடன் ஏ...
நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் ‘சொடக்கு’!

நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் ‘சொடக்கு’!

Uncategorized
  " சினிமாவை வித்தியாசமாக செய்ய நினைக்கிறவர்களுக்கு இது சரியான நேரம்.".சொடக்கு” டைரக்டர் காமராஜ் மனோன்மணி !! தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி பிலிம் புரொடக்‌ஷன்ஸ் கூட்டு முயற்சியில், அதிரடி திரில்லர் படம் ஒன்றை தயாரிக்கிறார்கள். மாஸ்டர்பீஸ் நிறுவனம் வழங்கும் இப்படத்திற்கு #சொடக்கு என்று பெயர் வைத்துள்ளார்கள்! இதன் டைரக்டர் காமராஜ் மனோன்மணி கூறும் போது.. சினிமாவை வித்தியாசமாக செய்ய நினைக்கிறவர்களுக்கு இதுதான் சரியான நேரம். இந்த சமயத்தில் என்னுடைய 'சொடக்கு' படம் வருவது பெரிய பிளஸ். இது த்ரில்லர் படம். 'சொடக்கு' டைட்டில் மாதிரியே தனி வித்தியாசம் காட்டும். எங்க படம் வீட்டுச் சாப்பாடு மாதிரி. உடம்பை உற்சாகம் படுத்தும் . ருசிக்க ருசிக்க சுவை தரும். ‘சொடக்கு’ போடுகிற நேரத்தில் ஒருவருடைய வாழ்க்கையே மாறும். அப்படி ஒரு நேரத்தில் ஒருவர் வாழ்க்கை...
200 கோடி வசூலைத் தாண்டி சாதனையைத் தொடரும் “விஸ்வநாத் & சன்ஸ!

200 கோடி வசூலைத் தாண்டி சாதனையைத் தொடரும் “விஸ்வநாத் & சன்ஸ!

Uncategorized
“விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு* *200 கோடி வசூலை தாண்டிய “விஸ்வநாத் & சன்ஸ்” – சூர்யாவின் தொடரும் வெற்றிப் பயணம்* மீண்டும் 200 கோடி கிளப்பில் சூர்யா – “விஸ்வநாத் & சன்ஸ்” புதிய வசூல் சாதனை சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியான இப்படம், வெளியான குறுகிய காலத்திலேயே இந்த வசூல் மைல்கல்லை எட்டியுள்ளது. குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் மனதை நெகிழவைக்கும் தருணங்களை மையமாகக் கொண்ட முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக வெளிவந்த “விஸ்வநாத் & சன்ஸ்”, அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதி...
ஜெயராம் – சிம்ரன் நடிக்கும்  ஃபேமிலி ரோம் காம் திரைப்படம்

ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் ஃபேமிலி ரோம் காம் திரைப்படம்

Uncategorized
ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை ! ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. தேஜாவு, வித்தைகாரன் படங்களை தயாரித்த White Carpet Films சார்பில் K. விஜய் பாண்டி மற்றும் Redacted Studios சார்பில் Shanjan G. ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். The Show People சார்பில் ஆர்யா இப்படத்தை வழங்குகிறார். ‘ராட்சசி’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய SY கௌதம்ராஜ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். இவ்விழாவினில் திரைத்துறையிலிருந்து தயாரிப்பாளர் Fivestar கதிரேசன், Drumsticks Productions தயாரிப்பாளர் விவேக், Shanthi Talkies தயாரிப்பாளர் அருண் விஷ்வா, இயக்குநர் H வினோத், நடிகர் நட்டி ஆகியோர், Ston...
மொத ராத்திரி’ – திரை விமர்சனம்

மொத ராத்திரி’ – திரை விமர்சனம்

Uncategorized
‘மொத ராத்திரி’ - திரை அலசல் திரைத்துரைக்கு கே.பாக்யராஜ் தந்துவிட்டுச் சென்ற அந்த அசல் ஹியூமர் ஃபார்முலாவை, இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்ப ரீ-பேக் செய்து தந்து அசத்தியிருக்கிறது இந்தத் திரைப்படம். கதைக்களம் துபாய் மாப்பிள்ளையான நாயகன் ரிஷிகாந்திற்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால், இந்தத் திருமணத்தில் அவருக்குத் துளியும் நாட்டம் இல்லை. இன்னொரு பக்கம், மணப்பெண்ணாக வரும் அனிஷ்மாவுக்கோ வேறு ஒரு திட்டம்—முதல் இரவு நடப்பதற்குள் காதலனோடு எஸ்கேப் ஆக வேண்டும்! ஆனால், அவர் நம்பியிருக்கும் காதலனோ ஒரு விவஸ்தை இல்லாத லூசுப் பையன் என்பதுதான் கதையின் அல்டிமேட் ட்விஸ்ட். இந்தச் சுழலுக்குள் சிக்கிக் கொள்ளும் அந்த ‘முதல் இரவு’ சுபமாக முடிந்ததா, இல்லையா என்பதைத்தான் படம் முழுக்க வயிறு குலுங்கப் பேசுகிறது திரைக்கதை. நடிகர்களின் பெர்ஃபார்மன்ஸ் ரிஷிகாந்த்: தனக்குக் கொடுத்த பாத்...
வதந்திகளுக்கு வேடன் விளக்கம்!

வதந்திகளுக்கு வேடன் விளக்கம்!

Uncategorized
  சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.* பொதுவாக தனிப்பட்ட முறையில் பரவும் இதுபோன்ற தகவல்களுக்கு நான் பதிலளிப்பதில்லை. ஆனால், தற்போது சமூக ஊடகங்களில் என்னைப் பற்றிய தவறான தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருவதால், இதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவுகள் பரிமாறும் ஒரு ரெஸ்டாரெண்ட் செயினை தொடங்கப் போவதாகவும், அது தொடர்பாக நான் அறிக்கை வெளியிட்டதாகவும் சில சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இதுபோன்ற எந்த அறிக்கையையும் நான் வெளியிட்டதில்லை. சவூதி அரேபியாவிலோ அல்லது வேறு எந்த வளைகுடா நாட்டிலோ ஹோட்டல், ரெஸ்டாரெண்ட் அல்லது உணவு சார்ந்த தொழில் தொடங்கும் எந்தத் திட்டமும் எனக்கு இல்லை. இது தொடர்பாக எந்த நிறுவனத்துடனும் கூட்டாண்மை, விண்ணப்பம் அல்லது த...
காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படம் ‘கிட்டி’!

காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படம் ‘கிட்டி’!

Uncategorized
*நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் 'முருகா' அசோக் கதையின் நாயகனாக நடிக்கும் கிட்டி* ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் திருமாறன் தயாரித்து நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் அக்டோபர் இரண்டாம் தேதி உலகெங்கும் வெளியாகும் படம் கிட்டி. 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் போல தமிழ் சினிமாவில் பரபரப்பான திரைக்கதை உள்ள திரைப்படங்கள் வருவது வெகு கடினம் ஆகிவிட்டது. ஒரு சில கமர்சியல் படங்களை பார்த்த ரசிகர்களுக்கும் ஒரு விறுவிறு திரைக்கதை அம்சம் உள்ள படங்களை பார்க்க வேண்டும் என்கிற ஆவல் ஒரு வருடத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை நிச்சயமாக மனதிற்குள் தோன்றும் . அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விறுவிறு திரை கதையுடன் பரபர கதைகளைத்துடன் வரப் போகும் படம் தான் கிட்டி. நாட்டில் நம்மை சுற்றி எவ்வளவு குற்றங்கள் நடந்தாலும் யார் செய்...
‘ராம் அண்ட் லீலா’: விமர்சனம்

‘ராம் அண்ட் லீலா’: விமர்சனம்

Uncategorized
‘ராம் அண்ட் லீலா’: விமர்சனம் காதல், நகைச்சுவை இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து, திரையரங்கை அதிரவைக்கும் இளமைத் துள்ளலோடு களம் இறங்கியிருக்கிறது இந்த 'ரோம்காம்' விருந்து. கதைக்களம் & சுவாரஸ்யத் திருப்பம் மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு சாதாரணக் காதல் கதை போலத் தோன்றினாலும், விளம்பரப் படங்களிலோ அல்லது டிரெய்லரிலோ துளியும் கசியவிடாத அந்த 'மாபெரும் ரகசியத் திருப்பம்' தான் படத்தின் அசல் மாஸ்! அந்த எதிர்பாராத ட்விஸ்ட், கதையின் திசையையே தலைகீழாக மாற்றி, பார்வையாளர்களைச் சீட்டின் நுனிக்கே கொண்டுவந்து நிறுத்துகிறது. கதாபாத்திரங்களின் கெமிஸ்ட்ரிரியோ ராஜ்: தனக்கே உரித்தான இயல்பான பாடி லாங்குவேஜ் மற்றும் நச்சென்ற டைமிங் காமெடியால் அத்தனை காட்சிகளிலும் தட்டித் தூக்குகிறார்.வர்திகா ஜைன்: புதுமுகமாக களம் கண்டிருந்தாலும், தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் துடிப்பான நடிப்பால் மிகக் கச்சிதமாகப் பயன்படுத்த...