Uncategorized
ஆண்களும் பெண்களும் சமம் அல்ல ; குடிமகான் விழாவில் நகைச்சுவை நடிகர் சதீஷ் அதிரடி பேச்சு!
சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ‘குட்டி தாதா’ என்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ். N இந்தப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார்
விஜய் சிவன் கதாநாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடித்துள்ளார். பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, விஜய் டிவி புகழ் கேபிஒய் ஹானஸ்ட் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர நாளைய இயக்குனர்கள் சீசன்-6 டீமில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் இதில் நடித்துள்ளனர்.
பாலுமகேந்திராவிடம் சீடராக பணியாற்றிய மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு தனுஜ் மேனன் இசையமைத்துள்ளார். ஷிபு நீல் BR படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
கடந்த மாதம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர...
கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை சொல்லும் படம் “இன் கார்”!
Inbox Pictures சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”. கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா இப்படத்தை வழங்குகிறார். மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
இயக்குநர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது…
"இன் கார்" படம் என் வாழ்வில், என் உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தின் பாதிப்பால் உர...
தக்ஸ் – திரைப்பட விமர்சனம்
தக்ஸ் திரைப்பட விமர்சனம்
ஆழமான காதல் கதையை அழகியல் மதிப்பீடு மிக்க 'ஹே சினாமிகா' என்ற பெயரில் படமாக்கி இயக்குநராக அறிமுகமான டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, 'தக்ஸ்' என்ற தனது இரண்டாவது படத்தில் அடிதடி ஆக்ஷன் கதையை குமரி மாவட்ட பின்னணியில் உருவாக்கியிருக்கிறார்.
நாகர்கோவில் பகுதியில் பெரும் புள்ளியாக வலம் வரும் பி.எல்.தேனப்பனிடம் கணக்கு வழக்குகளை பராமரிக்கும் பணியைச் செய்து வருகிறார் நாயகன் ஹிர்து ஹாரூன். தேனப்பன் செய்த கொலைக்காக அவரைப் பழி வாங்கக் காத்திருக்கும் நண்பனுடன் சேர்ந்து தேனப்பனின் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தனது காதலியுடன் ஆஸ்த்ரேலியாவுக்கு செல்லத் திட்டமிடுகிறார் நாயகன்.
இதற்கிடையில் காதலிக்கு தொந்தரவு செய்த ஒருவனைக் கொலை செய்துவிட்டு சிறைக்குச் செல்கிறார். சிறையில் இருக்கும் பாபி சிம்ஹா, மூனீஸ் காந்த் உள்ளிட்ட வேறு சிலரும் தப்பிக்கத் திட்டமிடுகிறவர்கள்தான்.
இவர்...







