Tuesday, November 17

Uncategorized

“எஸ்.பி.பி. க்ளாசிக்ஸ்” இசை நிகழ்ச்சி

“எஸ்.பி.பி. க்ளாசிக்ஸ்” இசை நிகழ்ச்சி

Uncategorized
பின்னணிப் பாடகர் பத்மபூஷன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் "லஷ்மன் ஸ்ருதி" இசைக்குழுவில் கலந்து கொண்டு பாடும் "எஸ்.பி.பி க்ளாசிக்ஸ்" என்னும் பிரம்மாண்டமான மெல்லிசை நிகழ்ச்சி வரும் 18.3.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. ஒரு பாடகர் மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடும்போது அதற்காக அரங்கம் நிரம்பி வழிகிறதென்றால் இன்றைக்கும்  அது எஸ்.பி.பி அவர்கள் பாடும் ஒரு நிகழ்ச்சியாகவே இருக்கின்றது. பல தலைமுறை தாண்டி இன்றைய இளைஞர்கள் வரை அனைவரையும் தன் குரலால் வசீகரித்து இதயம் குளிரப் பாடி மகிழ்ச்சியைக் கொடுப்பவர். தான் பாடத்துவங்கி 52 ஆண்டுகளைக் கடந்தும்  திரையில் தன் குரலால் பன்மொழிகளில் ஆதிக்கம் செய்து வருபவர். பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர், மேடைப்பாடகர் என்று பன்முகங்களைக் கொண்டு பணியாற்றும் திறமை கொண்டவர்....