Success of Meesaya Murukku Album Felicitation by Think Music
அவ்னி சினிமேக்ஸ் சுந்தர் சி தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி எழுதி, இசையமைத்து நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'மீசைய முறுக்கு'. அந்த படத்தின் பாடல்கள் வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பல்வேறு ஆன்லைன் தளங்களில் பல சாதனைகளை செய்து வந்தது. தற்போது அவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 150 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. அந்த வெற்றிக்கு முக்கிய காரணமான இசைக்கலைஞர்களை கவுரவிக்க சென்னை சத்யம் சினிமாஸில் விழா நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் குஷ்பூ, சத்யம் சினிமாஸ் தலைவர் ஸ்வரூப் ரெட்டி, திங்க் மியூசிக் துணை தலைவர் சந்தோஷ் குமார், பிரீத்தா ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒரு தயாரிப்பாளராக இங்கு வந்திருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். சுந்தர் சி கலகலப்பு 2 சென்சார் பணிகளில் பிஸியாக இருப்பதால் வர முடியவில்லை. ஓய்வில்லாமல் இரவு பகலாக உழைப்பை மட்டுமே ...






