Uncategorized
ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டம் தொடரும் – விஷால்
ஆர்கே நகர் சட்டமன்ற இடைதேர்தலில் நான் போட்டியிட மனு தாக்கல் செய்தது எனது சுயசிந்தனையின் உந்துதலால் எடுத்த முடிவே... ஆர்கே நகர் மக்களுக்கு மக்கள் பணியாற்றவே இந்த முடிவை எடுத்தேன். ஆனால் பவர் பாலிடிக்ஸ் என்னும் ஆதிக்க அரசியல் சக்திகளால் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு என் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு நேர்ந்த அநீதிக்கு மக்கள் மன்றமே சாட்சி. ஆர்கே நகரில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், என்னுடைய மக்கள் பணிகளும் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டமும் தொடரும்.
நான் சிலரை ஆதரிப்பதாக செய்தி பரப்பப்படுகிறது. நான் யாரையும் ஆதரிப்பதாக இதுவரை சொல்லவில்லை. அப்படி ஒரு முடிவை எடுக்கவே இல்லை.
எனது போராட்டத்தில் என்னுடன் துணை நின்ற எனது ரசிகர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். அதேபோல் எனக்காகவும் நீதிக்காகவும் குரல் கொடுத்த அனைத்து தலைவர்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவ...
‘மன்னர் வகையறா’ தமிழக ரைட்ஸை கைப்பற்றிய ‘சினிமா சிட்டி’..!
விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் இந்தப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை நல்ல விலை கொடுத்து சினிமா சிட்டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அரவிந்த்சாமி - த்ரிஷா நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘சதுரங்க வேட்டை-2’ படத்தையும் இந்த நிறுவனம் தான், தமிழகம் முழுக்க வெளியிட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது. காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் பூபதி பாண்டியன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி), சாந்தினி என ஒரு மாபெரும் ...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (நன்றி) அறிக்கை – 5.12.17
தமிழ் திரையுலக்கிற்கு பலவித நன்மைகளை செய்து வரும் தமிழக அரசு மேலும் ஒரு பேருதவியை செய்திருக்கிறமைக்கு தமிழ் திரையுலகின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். கடந்த மாதம் எங்களது தமிழ் திரையுலகில் உள்ள அத்தனை அமைப்புகளும் தலைவர் திரு.விஷால் அவர்கள் தலைமையில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தோம். அதில், திரையரங்க நுழைவு கட்டனத்தினை முறைப்படுத்தி உயர்த்தி வழங்குதல். திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை முறைப்படுத்துதல் அடங்கிய மனுவினை அளித்தோம். மனு அளித்த உடனே தமிழக அரசு திரையரங்கு நுழைவு கட்டனத்தினை முறைப்படுத்தி உயர்த்தி வழங்கியது. தற்போது எங்களது மற்றொரு கோரிக்கையான திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டண வசதியை முறைப்படுத்தி (corporation municipality special grade - car-rs.20, bike-rs.10, Municipalities car-rs.15, bike-rs.7, village panchayat car-rs.5, b...
2.0 Audio Launch – Sneak Peek
https://www.youtube.com/watch?v=UtVHAk3d6Oo&feature=youtu.be
நிவின் பாலியின் படப்பிடிப்பு தளத்திற்கு ‘சர்ப்ரைஸ் விசிட்’ அடித்த சூர்யா, ஜோதிகா
தென்னிந்தியாவின் இளம் ஹீரோக்களில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர் நிவின் பாலி. மொழி எல்லைகளை தாண்டி அவரது ரசிகர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது அனைவரும் அறிந்ததே. அவரது அடுத்த படமான 'காயம்குளம் கொச்சுண்ணி' படத்தை '36 வயதினிலே' புகழ் ரோஷன் ஆண்டிரூஸ் இயக்குகிறார். 'பீரியாடிக் ஆக்ஷன்' படமான இந்த படத்தை பெரும் பொருட்செலவில் 'ஸ்ரீ கோகுலம் மூவிஸ்' சார்பாக திரு. கோகுலம் கோபாலன் தயாரிக்கின்றார்.
மலையாள சினிமா வரலாற்றில் மிக அதிக பொருட்ச்செலவில் உருவாக்கப்படும் படம் இது தான் என கூறப்படுகிறது. இந்த படம் பிற மொழி ரசிகர்களிடையேயும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. முதல் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே இப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கடந்த இரண்டு மாத காலமாக மங்களூரில் இப்படத்தின் படப்பிடிப்பு இடை விடாமல் நடந்து வருகின்றது. இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறை காலத்தில் பிரம்மாண்...
ரசூல் பூக்குட்டி கதாநாயகனாக நடிக்கும் “ஒரு கதை சொல்லட்டுமா”.
கலை துறையில், இந்தியாவிலிருந்து உலக அளவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர்கள் மிக சிலரே. அந்த மிக சிலரில் முக்கியமானவர், ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி. இவரது சவுண்ட் டிசைன்கள் உலக பிரசித்தி பெற்றவை . தற்பொழுதைய பரபரப்பு செய்தி, ரசூல் பூக்குட்டி நடிகர் அவதாரம் எடுத்திருப்பது தான். பிரசாத் பிரபாகரன் இயக்கும் இந்த படத்தில் திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலக புகழ் பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்ய விரும்பும் கனவோடு இருக்கும் ஒரு சவுண்ட் டிசைனராகவே ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார். இந்த படத்தை 'Palm Stone Multimedia' ராஜிவ் பனகல் தயாரித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பிரம்மாண்ட படங்களோடு தொடர்புள்ள தயாரிப்பு நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இயக்குனர் பிரசாத் பிரபாகரன் பேசுகையில், ''இந்த படம் இதுவரை யாரும் செய்யாத முயற்ச...
பிருந்தா சாரதியின் ‘மீன்கள் உறங்கும் குளம்’
இயக்குநரும் வசனகர்த்தாவுமான பிருந்தா சாரதியின் 'மீன்கள் உறங்கும் குளம்' என்ற ஹைகூ கவிதை நூல் நேற்று (25.10.17) சண்டக்கோழி - 2 படப்பிடிப்பு இடைவேளையில் வெளியிடப்பட்டது.
நடிகர் விஷால் நூலை வெளியிட இயக்குநர் என். லிங்குசாமி பெற்றுக்கொள்கிறார். இந்நூலை தமிழ் ஹைகூ நூற்றாண்டு வெளியீடாக டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் கவிஞர்கள் பிறைசூடன், அறிவுமதி, பதிப்பாளர் மு.வேடியப்பன் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்...


