தோழமை108-துவக்க விழா
நம் நாடு இயற்கைப் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்குப் பல நிலைகளில் உதவிகள் புரிய போதிய மனித வளம் இல்லாமல் தவித்துக்கொண்டிருப்பதை நாம் அறிவோம்.இந் நிலையில் நம் சமூகத்தைக் காக்க 108 அவசரச் சேவை ஒரு புதிய திட்டத்தை இன்று அடையாறு, பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆரம்பித்துள்ளது. இதன் முதல் முயற்சியாக, அடையாறு,பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், 'நமது தோள்கள்' அறக்கட்டளையும்,108 ஆம்புலஸ் அவசர சேவையும் இணைந்து முதல் கட்டமாக சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு முதலுதவிக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'தோழமை 108' என்கிற குழுவை தொடங்கியுள்ளது.
10.08.2017 (வியாழக்கிழமை) பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்நடை பெற்ற இவ்விழாவில் சென்னை மாவட்ட ஆட்சியர் திரு.அன்புச்செல்வன் அவர்களும், திரைப்பட நடிகர் திரு.ஆரி அவர்களும்,வழக்கறிஞர் திரு.அலெக்ஸ் சுதாகர் (செயலர் மனித உரிமை...






