நடிகர் உதயா தயாரிப்பில் “டூப்ளிகேட்”

0

 546 total views,  1 views today

Jaeshan studios  சார்பில்  சமீபத்தில் பத்திரிக்கை, ஊடகம், மக்களின் பாராட்டை பெற்ற “உத்தரவு  மாகாராஜா” படத்தை தொடர்ந்து,  மிக பிரம்மாண்டமாக நடிகர் உதயா தயாரிக்கும் horror/ thriller படம் டூப்ளிகேட். இப்படத்தை இயக்குநர் திரு சசி மற்றும் சுசீந்திரன் உதவியாளராக பணியாற்றிய திரு சுரேஷ் குமார் அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இப்படத்தின் சிறப்பம்சமாக…… திரைக்கதையில் ஒரு பெண், ஒரு கார், ஒரு இரவு இதனிடையே நடக்கும் ஒரு கதை.

      இத்திரைப்படத்தில்  dubsmash-ல் புகழ் பெற்ற மிருநாலினி ரவி நடிக்கிறார். இவர் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ், சுசீந்திரன் இயக்கும் சாம்ப்பியன் மற்றும் c.v.குமார் தயாரிப்பில் ஜாங்கோ ஆகிய படங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் முன்ணனி கதாநாயகன் நடிக்க உள்ளார். அதன் அறிவிப்பு மிக விரைவில் வெளிவர இருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவு L.K.விஜய், எடிட்டிங் ராட்சசன் புகழ் சான் லோகேஷ், இசை “உத்தரவுமகாராஜா” படத்தை இசையமைத்த நரேன் பாலகுமார், கலைஇயக்குனர் ராம்,   சண்டை பயிற்சி சரவணன். P.R.O நிகில் படத்தின் இணை தயாரிப்பு மணிகண்டன் சிவதாஸ் அவர்கள்.

            முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. படம் ஏப்ரலில் வெளியிட நடிகர் உதயா திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் first look teaser வரும் வியாழன் 7/02/2019 அன்று வெளியிட உள்ளனர்.

 

 

Share.

Comments are closed.