Friday, October 24

கம்பி கட்ன கதை _ விமர்சனம்

Loading

கம்பி கட்ன கதை _ விமர்சனம்

இலவசமாக பலரையும் வெளிநாடு அனுப்ப இருப்பதாகக் கூறும் நட்டி நட்ராஜிடம் ஏகப்பட்ட கூட்டம் சேர்கிறது.

அவர்களிடம் வெளிநாடு செல்ல மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும் என்று சொல்லி குறிப்பிட்ட டாக்டரிடம் அனுப்பி வைக்கிறார்.

மருத்துவ சான்றிதழில், அவர்களுக்கு இருக்கும் பல நோய்களை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் தகுதி இல்லை என்று சொல்லி எல்லோரையும் நிராகரிக்கிறார்.

கிடைக்கும் பணத்தை டாக்டருடன் பங்கிட்டு கொள்கிறார்.

இப்படி வித்தியாசமான, புதுமையான திருட்டுகளில் ஈடுபட்டாலும் எந்தவித போலீஸ் வழக்கிலும் நட்டி நட்ராஜ் சிக்கவில்லை.

வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற assignment நட்டிக்கு கிடைக்கிறது.

வழக்கம்போல் அதைதானே ஆட்டையை போட எண்ணி, வைரத்தை கைப்பற்றி கொண்டு வந்து ஓர் இடத்தில் புதைத்து வைக்கிறார்.

சற்று இடைவெளி விட்டு வந்து பார்த்தால், அந்த இடத்தில் அரசியல்வாதியான முத்துராமன் கோவில் ஒன்று கட்டி விடுகிறார்.

வைரம் புதைக்கப்பட்ட இடம் தெரியாமல் தடுமாறும் நட்டி, சாமியாராக மாறி, அரசியல்வாதி முத்துராமனையும் கைக்குள் போட்டுக்கொண்டு அந்த கோயிலிலேயே ஆசிரமம் ஒன்றை ஆரம்பித்து தன் சித்து விளையாட்டுக்களை நடத்துகிறார்.

நட்டி நடராஜன் குட்டு வெளிப்பட்டதா?
வைரக் கல்லை அவரால் கைப்பற்ற முடிந்ததா? என்பதுதான் கம்பி கட்ன கதை.

கிட்டத்தட்ட சதுரங்க வேட்டை பாணியிலான வேடம்தான் நட்ராஜுக்கு.

இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற முகத்தை வைத்துக்கொண்டு எல்லோரையும் மிகச்சுலபமாக ஏமாற்றி காரியம் சாதிக்கும் வேடத்தை அசத்தலாக செய்திருக்கிறார் நட்டி.

படம் முழுவதும் வரும் பலமான ரோலில் நட்டிக்கு இணையாக தனி ஆவர்த்தனம் நடத்தி கவனம் ஈர்த்திருக்கிறார் சிங்கம் புலி.

நாயகிகள் ஸ்ரீ ரஞ்சனி, ஷாலினி இருவருக்கும் பெரிதாக வேலை இல்லை என்றாலும் ஏற்றுக்கொண்ட வேடத்தை நிறைவாகவே செய்திருக்கின்றனர்.

சதீஷ் செல்வத்தின் பின்னணி இசை படத்துக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.

எம் ஆர் எம் சாய் சுரேஷின் வண்ணமயமான ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

முருகானந்தம், ஜாவா சுந்தரேசன், கோதண்டம் ஆகியோர் நடத்தும் காமெடி கலாட்டா வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும்.

மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற முடிவுடன் நகைச்சுவை படம் எடுத்த இயக்குனர் ராஜ நாதன் பெரியசாமி தன் முயற்சியில் சிறப்பான வெற்றியை பெற்றுவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

மதிப்பெண் 3/5