மகாமுனியின் எட்டு வருட தவம்!

0

Loading

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யாஇந்துஜாமஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யாநாயகிகள் மஹிமா நம்பியார்இந்துஜாதயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜாஇயக்குநர் சாந்தகுமார்இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது

“2010ல் மெளனகுரு என்ற படம் வெளியானதுநான் அந்தப் படத்தை மூன்றாவது வாரத்தில்தான் பார்த்தேன்அதில் ஒரு விபத்து காட்சி இடம் பெறும்அதைக் கண்டு நான்பெரிதும் வியந்தேன்.

அதன் பின்பு நான் இயக்குநர் சாந்தகுமாரை சந்தித்தேன்இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதற்கான எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டேன்அவருடன் வேலை செய்யவிருப்ப்ப்பட்டு இருவரும் இணைந்தோம்.

இந்தக் கதையை எழுதுவதற்கு அவருக்கு எட்டு வருடங்களானதுஆனால்அது மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறதுநாங்கள் முதலில் வேலை செய்யத் துவங்கியபோதுஅவருடைய மகன் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார்இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்இந்தப் படத்தின் மொத்தக் குழுவினரும் கடின உழைப்பைவெளிப்படுத்தியுள்ளனர்..” என்றார்.

கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது

நான் இந்தப் படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளேன்இயக்குநர் சாந்தகுமாரும்இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியும் இந்த வாய்ப்பை எனக்களித்தனர்நான்இதுவரையிலும் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளேன். 44 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன்நான் எழுதிய பாடலான காஞ்சிப் பட்டுடுத்தி’ என்ற பாடலைசாவித்திரி என்பவர் பாடியிருந்தார்.

நான் பாடல் எழுத  வந்தபோது இசையமைப்பாளர் தமன் எங்கம்மாவும் நல்லா பாடுவாங்க ஸார்.. நல்ல தமிழ்ப் பாட்டு பாடியிருக்காங்கஇந்தப் பாட்டைக்கேட்டிருக்கீங்களா?’ என்று சொல்லி காஞ்சிப் பட்டுடுத்தி’ என்ற பாடலைப் பற்றிச் சொன்னார்அப்போது இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி அந்தப் பாடலை எழுதியவரேஇவர்தான்’ என்று சொன்னார்இந்தப் படம் மத்தியமாநில அரசு விருதுகளை வெல்லும் என்று நம்புகிறேன்..” என்றார்.

இசையமைப்பாளர் தமன் பேசும்போது

நான் இதுவரையிலும் 11 வருடங்களில் 110 படங்களுக்கு இசையமைத்துள்ளேன்ஆர்யா எனக்களித்த ஊக்கத்தைவிடவும் வேறு யாரும் எனக்கு அளித்ததில்லைஅவருடன்வேலை செய்வதில் எனக்கு மிகவும் விருப்பம்அவருடன் பல படங்களில் பணியாற்றியிருக்கிறேன்அவருக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இயக்குநர் சாந்தகுமார் தமிழ்ச் சினிமாவில் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தவர்அது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அதுவும் வெற்றி பெற்றதுவெற்றியின்பின்னால் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கும்போதுஇவர் அதைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லைஅதைவிட்டு விலகி வந்துவிட்டார்அது எனக்கு மிகவும்கவலையளித்தது.

அச்சமயத்தில் ஞானவேல்ராஜா ஸார் இவருடன் இணைந்து ஒரு படம் செய்ய இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்அதிலும் ஆர்யா இதில் நாயகனாகநடிக்கப் போகிறார் என்பதைக் கேட்டு மேலும் சந்தோஷப்பட்டேன்.

ஆர்யா இந்தப் படத்தில் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார்இந்துஜாமகிமா மற்றும் படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்…” என்றார்.

படத் தொகுப்பாளர் சாபு ஜோஸப் பேசும்போது,

 “பத்து வருடங்களுக்கு முன்னால் நான் ஆண்டனியிடம் வேலை செய்து கொண்டிருக்கும்போது சில்லுன்னு ஒரு காதல்’ படத்தின் சுவரொட்டியை கொண்டு வந்தார்கள்.அதைக் கண்டவுடன் இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீனுடன் ஒரு படத்திலாவது வேலை செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் என்னுள் உதித்தது.து இந்தப் படத்தின் மூலமாக நிறைவேறியுள்ளதுஇங்கே மேடையில் உள்ள அனைவருமே இங்கே இருப்பதற்கு தகுதியானவர்கள்ஒத்துழைப்பு வழங்கிய எனதுஉதவியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.

நடிகை ரோகிணி பேசும்போது

என்னை இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது மிகவும் மகிழ்ந்தேன்இந்தப் படத்திற்கு ஒரு போட்டோ ஷூட் நடத்தினார்கள்அந்த போட்டோ ஷூட்டிற்குஇரண்டுவிதமான லுக்குகளை மேற்கொண்டார்கள்ஒரு போட்டோ ஷூட்டுக்கே இத்தனை தூரம் மெனக்கெடுகிறார்களே என்று வியந்தேன்.

நான் இந்தப் படத்தில்தான் முதல் முறையாக ஆர்யாவுடன் நடித்திருக்கிறேன்அவர் மிகவும் சிறப்பான நடிகர்ஒரு காட்சியை நான்குவிதமான வித்தியாசமான கோணத்தில்படமாக்கினார்கள்அந்தக் காட்சிகளில் நான்கு முறையும் ஆர்யா கண்ணீர்விட்டு அழுதார்அவருடைய இந்த அர்ப்பணிப்புத் தன்மையுடனான நடிப்பு என்னை மிகவும்கவர்ந்தது.

இயக்குநர் சாந்தகுமார் தான் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே அனைத்தையும் செய்தார்இப்படிப்பட்ட ஒரு இயக்குநரைப் புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கிடைத்ததுஅவருக்கு பெரும் பாக்கியம்தான்…” என்றார்.

ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் பேசும்போது,

 “இது எனது முதல் படம்இப்படிப்பட்ட ஒரு படம் என் முதல் படமாக அமைந்ததை எனக்குக் கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன்இயக்குநருக்கும்தயாரிப்பாளருக்கும்எனது நன்றிகள். 57 நாட்களில் 47 லொகேஷன்களில் படப்பிடிப்பு நடந்ததுஇது எனது உதவியாளர்களின் உதவியால்தான் சாத்தியமானது…” என்றார்.

நடிகை இந்துஜா பேசும்போது,

சாந்தகுமார் ஸாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்அவர் ஒரு தூய்மையான படைப்பாளிஇது ஒரு வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாத ஒரு அனுபவம்எனது அடுத்தநன்றி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்குமூன்றாவது நன்றி ஆர்யாவுக்குஅவருடன் நடிப்பது எனக்கு மிகவும் எளிதாக இருந்த்துமஹிமா ஒரு அழகான க்யூட்டான நடிகைஇந்தப் படத்தில் ஒரு தைரியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்…” என்றார்.

நடிகை மஹிமா நம்பியார் பேசும்போது,

 “இந்த மகாமுனி படத்தில் ஒரு பங்காக நானும் இருந்ததை நினைத்துப் பெருமையடைகிறேன்இந்த வாய்ப்பை விட்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் நிச்சயமாகவருத்தப்பட்டிருப்பேன்நானே என்னை இந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நினைத்து பார்த்ததில்லைஆனால்சாந்தகுமார் ஸார் அப்படியொரு கதாபாத்திரத்தைஎனக்கு வழங்கியிருக்கிறார்அவருக்கு எனது நன்றிஇது என்னுடைய கேரியரில் மிகச் சிறந்த கதாப்பாத்திரங்களில் ஒன்று.

இந்தச் சமயத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஸாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தில் வேலை செய்வது எனக்கு மிகவும்வசதியாக இருந்தது.

இந்தப் படத்திற்கு டப்பிங் பேசும் சமயத்தில் ஜெயசுதா மேடம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன் ஆர்யா எதைப் பற்றியும்கவலைப்படாத மனிதராகத்தான் எனக்குத் தெரிந்தார்ஆனால் இந்தப் படத்தில் அவருடன் நடித்த பின்பு அவர் ஒரு கடினஅர்ப்பணிப்புத் தன்மையுடன் கூடிய நடிகர்என்பது தெரிந்தது.

ஒரு காட்சியைப் படமாக்கும்போது 10 நிமிடங்களுக்கு முன்பாக நான் தயாராக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்ஆனால் ஆர்யா அரை மணி நேரத்திற்கு முன்பாகவேதயாராக நிற்பார்.

இந்தப் படத்தினால் அவருக்குக் கிடைக்கப் போகும் அனைத்து பாராட்டுக்களுக்கும் தகுதியானவர் ஆர்யா. இயக்குநர் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள்.

நடிகர் ஆர்யா பேசும்போது,

 “இந்தப் படத்தின் டீஸருக்கும், காட்சி முன்னோட்டத்திற்கும் கிடைத்த ரெஸ்பான்ஸ், எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது.

சாந்தகுமாரிடம் ‘இந்தப் படத்தின் கதையைத் தயார் செய்ய எதுக்கு எட்டு வருஷம் எடுத்துக்கிட்டீங்க?’ என்று கேட்டேன். அதுக்கு அவர் ‘ஞானவேல்ராஜா ஸார்கிட்ட அட்வான்ஸ் வாங்கி அதுல ஒரு பைக் வாங்கினேன்.அந்த பைக்லயே இந்தியாவைச் சுத்திப் பார்க்க போயிட்டேன். இப்போ அடுத்து சைக்கிளும் வாங்கப் போறேன்’னாரு.. ‘ஒரு பைக் வாங்கியே அடுத்தப் படத்தைத் தயார் செய்ய எட்டு வருஷமாச்சுன்னா.. அடுத்து சைக்கிள் வாங்கினா என்னா ஆகும்.. நீங்க அடுத்து பிளைட்டுதான் ஸார் வாங்கணும்’னு சொன்னேன்.

இந்தப் படத்தின் முழுக் கதையையும் சாந்தகுமார் என்னிடம் சொல்லவில்லை. முதலில் ‘மகா’ கதாபாத்திரத்தின் பகுதியை மட்டுமே சொன்னார்.

பிறகு ‘முனி’ கதாபாத்திரத்தை கடைசியாக உங்களிடமிருந்து வெளிக் கொண்டு வருகிறேன் என்று சொன்னார். இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

இயக்குநர் சாந்தகுமார் மிகுந்த அர்ப்பணிப்புத் தன்மையுடைய இயக்கநர். அது எப்படியெனில் இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் அத்தனை பேருக்குமே ஒரு வரலாற்றையே தயார் செய்து வைத்திருந்தார்.

நாயகிகள் இந்துஜா, மஹிமா மற்றும் சக நடிகர்கள் அனைவருமே சிறப்பாக நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதால் அது எனக்கும் ஒரு எனர்ஜியை அளித்த்து. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரும் மிகவும் அருமையாக பணியாற்றியிருக்கிறார்.

இப்படியொரு வாய்ப்பைக் கொடுத்தமைக்காக இயக்குநர் சாந்தகுமார் ஸாருக்கு எனது நன்றிகள்.

இயக்குநர் சாந்தகுமார் பேசும்போது, 

“ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும்போது எவ்வளவு நேரம் வேலை செய்தோம்ன்றது எல்லாருக்குமே தெரியும். ஆனால் இது மாதிரியான ஸ்கிரிப்ட் வேலை செய்யும்போது அப்படியிருக்க முடியாது.

இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்யும்போது எனது தனிப்பட்ட வாழ்க்கையும் அதில் கலந்திருக்கிறது. இதனால் எனது மனைவிக்கும், தயாரிப்பாளருக்கும் மட்டும்தான் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது தெரியும்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஸார்கிட்ட அவ்வப்போது ஸ்கிரிப்ட் எந்த நிலைமையில் இருக்கிறது என்பதைச் சொல்லிக் கொண்டேயிருந்தேன். இந்த நிறுவனத்தை நான் தேர்ந்தெடுத்தமைக்குக் காரணம் அது ஞானவேல்ராஜா ஸாருக்காகத்தான். அவர் எந்தவிதமான அழுத்த்த்தையும் எனக்குக் கொடுக்கவில்லை.

அவர் அவ்வப்போது ‘ஸ்கிரிப்ட் வேலை முடிஞ்சிருச்சா?’ என்று கேட்பார். நான் ‘இல்லை’ என்பேன். அவர் அதற்கு வருத்தமும் பட்டதில்லை.

அவர் என்னிடம் காட்டிய பொறுமையும் புரிதலும் என்னை நெகிழ வைத்தது. எனக்குக் கிடைத்த இந்தக் குழு மிகச் சிறந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.

 

 
Share.

Comments are closed.