பசுவைவழிச் சாலை படப்பிடிப்பு நிறைவடைந்தது…

0

 502 total views,  1 views today

சந்தோஷ் கோபால் இயக்கத்தில் உருவாகும் பசுமை வழிச்சாலை படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறது படக்குழு. டில்லி ஆக்ரா ராஜஸ்தான் என்று வடஇந்தியாவின் பல பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியவர்கள், லே லடாக் திபெத் போன்ற ஹிமாலயப் பகுதிகளையும்கூட விட்டுக் வைக்காமல் படமாக்கியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்த சந்தோஷ் குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது என்பதால், இதற்குமேல் எதுவும் விவரமாகச் சொல்லத் தேவையில்லை.

கிஷோர் சமுத்ரகனி பூஜா குமார் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் பசுமை வழிச்சாலை படத்தை சத்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் நிருபமா தயாரித்திருக்கிறார்.
கிறிஸ்டபர் நோலன் இயக்கித்தில் வெளிவந்த டார்க் நைட் ரைடர்ஸ் ஆங்கிலப்படத்தின் படப்பிடிப்பு நடந்த ஜோத்பூர் பகுதியில் பசுவைவழிச் சாலை படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

 

 

Share.

Comments are closed.