பிரத்தியேக சேகரிப்புகளை வெளியிடும் ‘ராதே ஷ்யாம்’ படத்தயாரிப்பாளர்கள்!

0

Loading

பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ படத்தின் தயாரிப்பாளர்கள் NFT பிரத்தியேக சேகரிப்புகளை வெளியிட உள்ளனர்!

மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரமாண்டமான படமான ‘ராதே ஷ்யாம்’ விரைவில் உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு பன்மொழி ரசிகர்கள் மத்தியில் வெகுவாக உள்ள நிலையில், அதை பூர்த்தி செய்யும் முயற்சிகளில் ஒன்றாக ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட NFT பிரத்தியேக சேகரிப்புகளை அதன் தயாரிப்பாளர்கள் வெளியிட உள்ளனர்.

இந்தத் தொகுப்பில் பிரபாஸின் டிஜிட்டல் ஆட்டோகிராஃப், திரைப்படத்தின் 3டி அனிமேஷன் டிஜிட்டல் ஆர்ட் மற்றும் திரைப்படத்தில் பிரபாஸ் ஓட்டும் நவீன காரில் இருப்பது போன்ற பிரத்யேக 3டி அனிமேஷன் ஆகியவற்றின் இதுவரை யாரும் கண்டிராத படங்கள் உள்ளன.

இந்த NFTகள் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ராதே ஷ்யாம்’-ன் நினைவுச்சின்னங்களை ரசிகர்கள் தங்களுக்குப் சொந்தமாக்கி கொள்ள அனுமதிக்கும் முயற்சியாகும். உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் இந்த டிஜிட்டல் சேகரிப்புகளை சொந்தமாக வைத்திருக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

NFT சேகரிப்பாளர்களில் தேர்ந்தெடுக்கப்படும் 100 அதிர்ஷ்ட வெற்றியாளர்கள், பிரபாசை சந்திக்கும் பிரத்யேக வாய்ப்பைப் பெறுவார்கள். எனவே, ஒரு ரசிகர் அதிக NFTகளை வாங்கினால், அந்த நபரின் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ரசிகர்கள் NFTகளை இந்திய ரூபாயில் வாங்கலாம்.

https://ngagen.com/uvcreations

பழம்பெரும் நடிகர் அமிதாப் பச்சன் சூத்ரதாரியாக குரல் கொடுத்திருக்கும் இப்படத்தில் முதல்முறையாக, பிரபாஸ் ஒரு தனித்துவமான பாத்திரத்தில் நடிக்கிறார். இத்தாலி, ஜார்ஜியா மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்ட அழகிய காட்சிகள், சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இடையேயான கெமிஸ்ட்ரி ஆகியவை இப்படத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் குல்ஷன் குமார் மற்றும் டி-சீரிஸ் வழங்கும் ‘ராதே ஷ்யாம்’, ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகி உள்ளது. கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். பூஷன் குமார், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம் 2022-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி வெளியாகிறது.

Share.

Comments are closed.