இது உண்மையில் என் பெற்றோரைப் பற்றி… எனது டெல்லி நாட்களைப் பற்றி.. ஞாபகத்தைத் தூண்டியது, காலப்போக்கில் உருவான புதிய நண்பர்கள் காலத்தில் இழந்த நண்பர்கள் என பல நினைவுகளை கிளறிவிட்டுவிட்டது என, டங்கி படத்தின் சமீபத்திய பாடலான நிக்லே தி கபி ஹம் கர் சே பாடல் பற்றி SRK பகிர்ந்திருக்கிறார்!
டங்கி டிராப் 3 நிக்லே தி கபி ஹம் கர் சே பாடல் நேற்று வெளியிடப்பட்டது, இந்த பாடல் இந்தியா முழுதும் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. பாடல் மீதான ரசிகர்களின் அன்பின் வெளிப்பாடு சமீபத்திய #AskSrk அமர்வின்போது கண்கூடாக வெளிப்பட்டது.
சிறந்த எதிர்காலத்தையும் வாய்ப்புகளையும் தேடி வீட்டை விட்டு வெளியேறிய கணத்தையும், அன்புக்குரியவர்களை விட்டுச் சென்ற கணத்தையும் ஒவ்வொருவருக்கும் நினைவூட்டும் வகையில், இந்த பாடல் பார்வையாளர்களுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரும் உணர்வைத் தூண்டும் வகையில், இந்த பாடல் உண்மையில் தங்கள் வீட்டைத் தவறவிட்டு, அதை விட்டு விலகி இருப்பவர்களின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு கீதமாக வந்துள்ளது.
இந்த பாடலின் பெரும் சிறப்பு என்னவெனில், ஜாவேத் அக்தர், ராஜி ஹிரானி, சோனு நிகம், ப்ரீதம் மற்றும் ஷாருக்கான் போன்ற அனைத்து பிரபலங்களின் கூட்டு விருந்தாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
நடிகர் ஷாருக்கான் சோனு நிகம், ப்ரீதம் மற்றும் ஜாவேத் அக்தர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து #AskSrk அமர்வைத் தொடங்கினார். அந்த பதிவில் அவர் எழுதியிருப்பதாவது,
“#Dunki படத்தின் யின் ஆன்மாவை வெளிப்படுத்தும் வரையறுக்கும் Nikle The….பாடலுக்கு #சோனு @ipritamofficial @Javedakhtarjadu ஆகியோருக்கு. நான் இப்போது கொஞ்சம் விலகி இருக்கேன், உங்களுடன் #AskSRK வில் இணைகிறேன் வாருங்கள் வேகமாக ஆரம்பிப்போம்….”
Wanted to thank #Sonu @ipritamofficial @Javedakhtarjadu for the song Nikle The….whuch defines the soul of #Dunki. Me also away right now so let’s do an #ASKSrk for a bit. Let’s start fast fast….
— Shah Rukh Khan (@iamsrk) December 2, 2023
இது வெறும் ஆரம்பம் தான், SRK ரசிகர்கள் பாடல்கள் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தும் போது #AskSrk அமர்வை அன்பு வெள்ளத்தில் மூழ்கடித்தனர். அவர்கள் எவ்வாறு தங்களின் அன்பை வெளிப்படுத்தினார்கள் என்பது இங்கே, –
*சோனு நிகாம் குறித்து*
ஒரு ரசிகர் கேட்கையில், “சார் பாடல் பிடித்திருந்தது. சோனு நிகாமுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது எப்படி இருந்தது ?” என்றார்.
இதற்கு , SRk பதிலளிக்கையில், “சோனுவின் குரல் தங்கம் போன்றது.. #Dunki” என்றார்.
* ஷாருக்கின் பலவீனம்*
ஒரு ரசிகர் கேட்டபோது, “இந்தப் பாடலின் மூலம் எங்களை மிகவும் உணர்ச்சிவசப் படுத்தியுள்ளீர்கள். உங்களின் எமோஷனல் பலவீனம் என்ன? #AskSRK” என்றார்.
அதற்கு பதிலளித்த ஷாருக், “என் குடும்பம் என நினைக்கிறேன்….அது எல்லோருக்கும் தான் அல்லவா. #Dunki” என்றார்.
*பார்வையாளர்களுக்கு அவர்களின் வீட்டை பற்றி நினைவூட்டல்*
ஒரு ரசிகர் கேட்கையில், “சார் இந்தப் பாடலை நீங்கள் முதலில் கேட்டபோது உங்களுக்கும் என்னைப் போல் வீட்டு ஞாபகம் வந்ததா? #AskSRK @iamsrk #Dunki #DunkiDrop3 #NikleThekhiHumGharSe” என்றார்.
அதற்கு பதிலளித்த ஷாருக், ஆம் இது உண்மையில் என் பெற்றோரைப் பற்றி… எனது டெல்லி நாட்களைப் பற்றி.. ஞாபகத்தைத் தூண்டியது, காலப்போக்கில் உருவான புதிய நண்பர்கள் காலத்தில் இழந்த நண்பர்கள் என பல நினைவுகளை கிளறிவிட்டுவிட்டது. மிகவும் உணர்வுப்பூர்வமாகி விட்டேன் #Dunki.
*பாடலுடன் இணைக்கும் அன்பு குறித்து SRK*
ஒரு ரசிகர் கேட்கையில், “#asksrk இந்த நிலையிலும் எப்படி மிக எளிமையானவராக இருக்கிறீர்கள்”
பாடலினால் பெரிதும் ஈர்க்கபட்ட SRK பாடலிலிருந்தே இதற்கு பதிலளித்தார்,
“இசா தர்தி பே ஜன்மெய்ன் ஹைன் இஸ் தர்தி பே மர்னா ஹை…. எப்போதும் கால்களை தரையில் ஊன்றிக் கொண்டே இருப்பது நல்லது… கடினமாக உழைக்க வேண்டும். ”
ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.
இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பரில் வெளியாகிறது.