
ரெட்ரோ ‘நாயகனுக்கு வைர மோதிரம் பரிசளிப்பு!
சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்தர் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்தி வேலன்!
2 டி என்டர்டெய்ன்மென்ட் - ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'ரெட்ரோ' திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, நூறு கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்திருக்கிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையிலும் , படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிப்பதற்காக படக் குழுவினர் பிரத்யேக நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திரையுலகினரும், படக் குழுவினரும், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 'ரெட்ரோ' படத்தை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் விநியோகம் செய்த சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளரான ...