அமரம்: திரைப்பட விமர்சனம்
அமரம்: திரைப்பட விமர்சனம்
கூலிக்காக கொலை செய்தபவர்களை துணை பாத்திரங்களாக திரைப்படங்களில் பார்த்திருந்தாலும், பணத்துக்காக கொலை செய்பவனசெய்பவனை கதாநாயகனாக்கி தனது முதல் படத்தைத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் திருஅருள் கிருஷ்ணா.
திருஅருள் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘அமரம்’ திரைப்படம், மலைக்கிராம மக்களின் பிழைப்புக்கான போராட்டம், அதிகாரவர்க்கத்தின் அரசியல் மற்றும் வன்முறையை மையப்படுத்திப் பேசுகிறது.
கதைச் சுருக்கம்
மலையடிவாரத்தில் எவ்வித இலக்கும் இன்றி முரட்டுத்தனமாக வாழும் அருகன் (ராஜன் தேஜஸ்வர்), சூழலின் கட்டாயத்தால் அப்பகுதி அதிகார வர்க்கத்திற்காகக் கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். இவர் ஷர்மிளா பாரதியின் (ஐரா அகர்வால்) தந்தையைக் படுகொலை செய்ய, பழிவாங்கும் நோக்கில் ஷர்மிளா அக்கிராமத்தை அடைகிறார். அவருடன் அரசியல் சக்திகளும் இணைய, அதன்பின் நடக்கும் அதிர்...
