நடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து நடிக்கிறார் !
மூத்த நடிகர் விஜய்குமார் அவர்களின் பேரனும் நடிகர் அருண் விஜய் அவர்களின் மகனுமாகிய அர்னவ், நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார், எனும் செய்தி வெளியாகியதிலிருந்தே, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இப்படத்தில் முதன்மை பாத்திரமான அர்னவிற்கு தந்தையாக அவரது தந்தை நடிகர் அருண் விஜய் நடிக்கிறார்.
இது குறித்து இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது...
இந்த கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடிப்பாரா எனும் பெரும் சந்தேகத்துடன் தான் முதலில் அவரை அணுகினேன். அவர் இந்தப்படத்தில் அர்னவிற்காக மட்டுமென்றால் நான் நடிக்க மாட்டேன் என முதலிலேயே கூறிவிட்டார். நான் திரைக்கதையை கூறிய பிறகு அந்த கதாப்பாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒப்பந்தமாவதற்கு முன்னால் தனது கதாப்பாத...
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களின் பேரனும் நடிகர் அருண் விஜயின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்து தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரிக்க, ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், மற்றும் RB Films S.R.ரமேஷ் பாபு, இணை தயாரிப்பு செய்கின்றனர். இப்படத்தை இயக்குபவர் சரோவ் சண்முகம். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார். மேகா படத்தொகுப்பு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பை அமரன் செய்கிறார் மற்றும் உடை வடிவமைப்பை வினோதினி பாண்டியன் மேற்கொள்கிறார்.
படம் குறித்து சரோவ் சண்முகம் கூறியதாவது...
குழந்தைகளை மையப்படுத்திய குடும்ப படங்கள் ஹாலிவுட்டை ஒப்பிடும்போது நம் தமிழ் சினிமாவில் மிகவும் அரிதானவை. நடிகர் சூர்யா அவர்களின் ...
அந்த வகையில் இயக்குநர் அறிவழகன் - அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து பெரும் பொருட்செலவில் படத்தை தயாரிக்கவுள்ளார் 'ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்' விஜய ராகவேந்திரா. 'செக்கச்சிவந்த வானம்', 'தடம்' ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியால் சக்சஸ் நாயகனாக வலம்வரும் வரும் அருண் விஜய், இந்தப் படத்திற்காக பக்காவாக தயாராகி நடிக்கிறார். ஹீரோயினாக ரெஜினா கஜண்ட்ரா நடிக்க, மற்றுமொரு நாயகியாக ஸ்டெபி பட்டேல் அறிமுகமாகிறார். நடிகர் பகவதி பெருமாள் படத்தில் முக்கிய வேடமேற்றிருக்கிறார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
அருண் விஜய்யை வைத்து 'குற்றம் 23' என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய அறிவழகன், இம்முறை ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்குகிறார். பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாராகிறது. அறிவழகன் இயக்கத்தில் உருவான படங்களில் இது...
பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே இழுத்து வரும் திரில்லரான 'குற்றம் 23' படத்தை யாரால் மறக்க இயலும்? மருத்துவக் குற்றம் பற்றிய, தென்னிந்தியாவின் முதல் படம் என்று வெகுவாகப் பாராட்டப்பட்ட இப்படம், ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத நிறைவான அனுபவத்தைத் தந்து, வசூலிலும் பரபரப்பைக் கிளப்பியது. இப்படத்தின் இயக்குநர் அறிவழகனும், நாயகன் அருண் விஜயும் இப்போது மீண்டும் இணைகின்றனர். தற்காலிகமாக 'ஏவி 31' என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவத்துக்காக விஜய் ராகவேந்திரா தயாரிக்கிறார். சம்பிரதாயமான பூஜையுடன் இன்று (9-12-2019) துவங்கிய படப்பிடிப்பில், படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பங்கு பெற்றனர்.
இது குறித்து தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா கூறியதாவது...
"என் நீண்ட கால நண்பரான அருண் விஜயின் கடின உழைப்பையும், சீரான வளர்ச்சியையும், நான் நன்கறிவ...
நடிகர் அருண் விஜய் என்றுமே தன் ரசிகர்களையும், வலைப்பூ வாசிகளையும், ட்விட்டரில் தீவிரமாக இயங்குபவர்களையும் வசீகரிக்கத் தவறுவதேயில்லை. இதோ இன்னும் ஒரு திகைப்பூட்டும் தோற்றத்தில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் அருண் விஜய். ஆம்... 'அக்னி சிறகுகள்' படத்தில் அவர் ஏற்றிருக்கும் ரஞ்சித் என்ற வேடத்தின் தோற்றம்தான் இப்போது அனைவரின் பேசு பொருளாகவும் ஆகியிருக்கிறது.
இது குறித்து 'அக்னி சிறகுகள்' படத்தின் இயக்குநர் நவீன் கூறியதாவது...
அருண் விஜய் எப்போதுமே உணர்ச்சிகள் பக்கம் சாய்ந்திராத, பேய் மனப்பான்மை கொண்ட அசாதாரமான மனிதர். மேலும் அவர் பிடிவாதமான மற்றும் கடினமான உறுதி கொண்டவர். அருண் விஜய் மற்றும் விஜய் ஆன்டனி இருவருமே 'அக்னி சிறகுகள்' படத்தில் ஏற்றிருக்கும் வேடங்களில் வன்முறையை சந்திக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள்தான் என்றாலும் இருவருக்குமிடையே நியாயங்கள் வேறுபடும்" என்றார்.
அப்...
தமிழ் திரையுலகில் எப்போதுமே வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்தால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகும். அப்படியொரு வெற்றிக் கூட்டணியை மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளார்கள். ஆம், அறிவழகன் - அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார் 'ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்' விஜய ராகவேந்திரா. 'செக்கச்சிவந்த வானம்', 'தடம்' ஆகிய படங்களின் வெற்றியால் சக்சஸ் நாயகனாக வலம் வரும் அருண் விஜய், இந்தப் படத்துக்காக தற்போது தயாராகி வருகிறார். இன்னும் ஒருசில நாட்களில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கவுள்ளது. படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்கள் தேர்வில் தற்போது தீவிரமாக பணிபுரிந்து வருகிறார் இயக்குநர் அறிவழகன்.அருண் விஜய்யை வைத்து 'குற்றம் 23' என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய அறிவழகன், இம்முறை ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்கவுள்ளார். பெர...
தமிழ் சினிமாவில் சமீபமாக வெகு நேர்த்தியான படங்களால் வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்திற்கு “சினம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 எனும் மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். இப்படம் குற்றம் 23ல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு வடிவத்தில் போலீஸ் கதையை சொல்வதாக இருக்கும் என்கிறது படக்குழு.
சினம் எனும் வலிமை மிகுந்த தலைப்பு பற்றி அருண் விஜய் கூறியதாவது...
எப்போதும் எந்தவொரு விஷயத்திலும் , எந்தவொரு தொழிலும் கோபம் எனும் பண்பு எதிர்மறையானதாகவே அடையாளப்படுத்தப்படும். கோபத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பலவற்றை கடந்தே பலரும் வந்திருப்போம். ஆனால் இந்தச்சினம...