Sunday, September 20

Tag: Dhanush

“அசுரன் படத்தில் நடித்தது மிகப் பெரிய கொடுப்பினை” – தனுஷ்

“அசுரன் படத்தில் நடித்தது மிகப் பெரிய கொடுப்பினை” – தனுஷ்

News
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன் .இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி S தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது . நடிகர் தனுஷ் பேசியதாவது, "அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. வெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்தக் கதாபாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. வேற எந்த நடிகருக்கும் அது கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்தப்படம் ஒரு முக்கியமான படமாக கண்டிப்பாக  இருக்கும் மிகவும் மகிழ்ச்சியுடன் நான் நடித்த படம் இது . வெற்றிமாறனும் அவர் டீமும் எனக்கு நல்ல ப்ளாட்பார்ம் கொடுத்திருக்காங்க. மஞ்சுவாரியாரின் டேலண்ட் எனக்குப் பிட...
தனுஷ் நடிக்கும் “பட்டாஸ்”!

தனுஷ் நடிக்கும் “பட்டாஸ்”!

News
"ஒரு புகைப்படம் 1000 விஷயங்களை சொல்கிறது" என்ற ஒரு பிரபலமான மேற்கோள் உள்ளது. அது எப்போதுமே சினிமாவில் மிகச்சிறந்த நிரூபிக்கப்பட்ட கோட்பாடாக இருந்து வருகிறது. படத்தின் முதல் தோற்றம் படம் எதை பற்றியது, எப்படிப்பட்டது என பார்வையாளர்களை தயார்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மிகப்பெரும் அளவில், உச்சத்தில் இருந்தபோது, தனுஷ் நடிக்கும் 39வது படத்தின் பெயர் "பட்டாஸ்" எனவும், அதன் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது நகரத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் டிஜி தியாகராஜன் கூறும்போது, “இந்த மாபெரும் கொண்டாட்ட சந்தர்ப்பத்தில் எங்கள் ‘தயாரிப்பு எண் 34'ன் முதல் தோற்றத்தையும் தலைப்பையும் வெளியிட முடிவு செய்தபோது, தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு ஆடம்பரமான விருந்து தேவை என்பதை நாங்கள் உணர்ந்தோம். ‘தனுஷ் ர...
தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் செய்த இரத்த தானம்!

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் செய்த இரத்த தானம்!

News
நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா , செயலாளர் B .ராஜா ஆகியோர் தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று சென்னையில் உள்ள ACS மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது . இந்த முகாமில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றங்கள் , கேரளா , கர்நாடக , ஆந்திரா , மும்பை போன்ற பகுதிகளில் இருந்து ரசிகர்கள்  கலந்துகொண்டனர் .   தமிழ்நாட்டில் ஒரே இடத்தில இவ்வளவு ரசிகர்கள் இணைந்து இரத்ததானம் செய்வது இதுவே முதல்முறை . இந்த இரத்ததான முகாமை , தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு , T .G தியாகராஜன் , தனுஷின் பெற்றோர் கஸ்தூரி ராஜா & விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா , S .வினோத் குமார் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவங்கி வைத்தனர் . இந்த விழாவில் பேசிய கலைப்புலி S தாணு " 1500  க்கும் மேற்பட்ட  ரசிகர்கள் இணைத்து ரத்த...
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம்!

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம்!

News
ஒய்நாட் ஸ்டுடியோஸ் தனது 18வது படைப்பாக இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கும் புதிய தமிழ் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மன்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதில் பெருமிதம் கொள்கிறது. ஒரு காங்ஸ்டர்-திரில்லர் வகையைச் சார்ந்த இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடிக்க, இப்படம் முழுவதுமே இங்கிலாந்தில் படமாக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில் இத்திரைப்படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்கள், தொழிட்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரையிலேயே வெளியிடப்பட உள்ளது. கார்த்திக் சுப்பாராஜ் எழுதி இயக்கும் இப்படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பாக எஸ் சஷிகாந்த் தயாரிக்க, இணை தயாரிப்பாளராக சக்கரவர்த்தி ராமசந்திரா இணைகிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். கலை வினோத்...