தோட்டம்’ படத்தின் டைட்டில் வீடியோ வெளியானது!
கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'தோட்டம்' படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி உள்ளது!
கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவாகியுள்ள தோட்டம் - தி டிமேன் ரிவீல்ட் படத்தின் டைட்டில் வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மலையாள திரைப்படமான தோட்டம் படத்தின் தலைப்பு இன்று யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது இன்றைய இந்திய சினிமாவின் மிகவும் விறுவிறுப்பான அறிவிப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது. ரிஷி சிவகுமார் எழுதி இயக்கும் தோட்டம் திரைப்படம், தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆக்சன் நடிகர் ஆண்டனி வர்கீஸ் (Pepe) ஆகியோரின் முதல் பிரம்மாண்டமான ஆன்-ஸ்கிரீன் கூட்டணியை உருவாக்குகிறது. அதிரடி, ஆக்சன் மற்றும் உணர்ச்சி கலந்த இந்த திரைப்படம், கீர்த்தி சுரேஷை இதுவரை கண்டிராத அவதாரத்தில் காட்ட...









