Tag: radhakrishnan parthiban
புதுமைப் பித்தன் பார்த்திபனின் டிஜிட்டல் காலண்டர்!
பார்த்திபனின்
மரியாதைமிகு வணக்கமும் 21 வாழ்த்துகளும்!
டிஜிட்டல் வழியே ஒரு டஜன் மாதங்கள் உங்களுடன் கொண்டாட வருகிறேன்.
விடுவேனா என்கிற கொரோனாவிலிருந்து முற்றிலும் தப்பிக்க இன்னும் சில மாதங்களே உள்ளது.
Well....வெல்வோம்!
ப்ரியமுடன்,
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
ட்ரோண்டோ உலகத் தமிழ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்ற “ஒத்த செருப்பு சைஸ் 7“!
இயக்குநர் ராதகிருஷணன் பார்த்திபன் அவர்களை தேடி, வாழ்த்து மழை, தொடர்ந்து குவிந்து வருகிறது. ஆஸ்கர் அகாடமி விருது குழுவின் விமர்சகர்கள் முதல், தியேட்டரில் படம் பார்த்த அடிமட்ட ரசிகர்கர்கள் வரை அனைவரும் பாராட்டிய “ஒத்த செருப்பு சைஸ் 7” திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு பெரும் புரட்சியை, புதிய அலையை ஏற்படுத்தியது. தற்போது இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் பரீட்சார்த்தமான முயற்சியான “ஒத்த செருப்பு சைஸ் 7 “ 2020 ட்ரோண்டோ உலகத்தமிழ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றுள்ளது. ஜீரி விருதான சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த தனி சோலோ நடிப்பு என மூன்று விருதுகளை இப்படம் பெற்றுள்ளது.
நடிகர் , இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இது குறித்து கூறியதாவது...
மனதை தாலட்டும் மற்றுமொரு பாராட்டு. “ஒத்த செருப்பு சைஸ் 7 “ 2020 ட்ரோண்டோ உலகத்தமிழ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றுள்ளது எ...
அமெரிக்க கோல்டன் குளோப்பில் பாராட்டு பெற்ற “பார்த்திபனின் ஒத்த செருப்பு” சைஸ் 7 படம் !
இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தமிழ் சினிமாவின் அடையாளமாக, பல பரிசோதனை முயற்சிகளுக்கு முன் மாதிரியாக, வெற்றியாளராக விளங்குபவர். அவரது சமீபத்திய படமான “ஒத்த செருப்பு சைஸ் 7” ரசிகர்களின் இதயங்களை அள்ளியதோடல்லாமல் Asia and India Book of Records ல் ஒருவரால் இயக்கி, நடித்து தயாரித்து உருவாக்கப்பட்ட படம் என்கிற சாதனைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் கோல்டன் குளோப் ஜீரி மெம்பர்களுக்காக நிகழ்த்தப்பட்ட திரையிடலில் பெரும் பாராட்டை குவித்துள்ளது. மாறுபட்ட முயற்சியாக அனைவரும் இப்படத்தினை பாராட்டியுள்ளனர். மேலும் ஆஸ்கர் அகாடமி குழு நாளை அக்டோபர் 24 அன்று இப்படத்தை பார்க்கவுள்ளது மேலும் தமிழ் சினிமாவுக்கு மேலும் பெருமைகொள்ளும் தருணமாக உள்ளது.
இது பற்றி இயக்குநர் பார்த்திபன் கூறியதாவது...,
நான் முன்பே பலமுறை கூறியது போல் “ஒத்த செருப்பு சைஸ் 7...
பார்த்திபனைப் பாராட்டிய சரத் குமார்!
ஒத்தசெருப்பு சைஸ் நம்பர் 7. தமிழில் முதல்முறையாக அனைவரும் பாராட்டும் வகையில் மிக பெரிய முயற்சியை திரு பார்த்திபன் எடுத்துள்ளார். தனது எல்லா படைப்புகளிலும் புதுமைக்கு புதிய பாதை வகுக்கும் பார்த்திபன், இந்த படத்தின். வழியாக நலிந்து வரும் சினிமா தொழிலுக்கு ஒரு ஆரோக்கியமான பாதையை தனது பாணியில் காண்பித்ததற்கு பாராட்டுகள். ஏழை தந்தை ஒருவன் நோயாளி குழந்தையுடனும், சமுதாயத்தில் நிலவும் வக்கிரங்களை வலியுடன் எதிர்கொண்டு, பல கேரக்டர்களை அவற்றின் தன்மையை தனி மனிதராக தனது நடிப்பு திறன் மூலமே காட்டி வியப்பில் ஆழ்த்துகிறார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா உலக அளவில் பேசப்படும். முதலில் தமிழ்நாட்டில் பேசப்பட வேண்டும். மனம் திறந்த வாழ்த்துகள்.” என்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான திரு R.சரத்குமார் அவர்கள் கூறினார்....
“Oththa Seruppu” – LONGEST REVIEW
Asia Book of Records is a platform where the record holders of all major National ‘Book of Records’ including ‘India Book of Records’, ‘Vietnam Book of Records’, ‘Indo-China Book of Records’, ‘Laos Book of Records’ and ‘Nepal Book of Records’ meet to compare, compete and claim the title of ‘Asia Book of Records’ Holder. Today ‘Asia Book of Records’ is having a strong database of 40,000 entries.
At ‘Asia Book of Records’, we believe working with you to unlock the hidden, untapped genius within you to open the world of new possibilities. Asia Book of Records is registered with the Government of India with RNI no HRENG/2011/40693. Asia Book of Records is affiliated to World Record University and follows International Protocol of Records (IPRs) as per the consensus arrived at the meeting of t...
உலகையே தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பியிருக்கும் பார்த்திபன் – பாரதிராஜா புகழாரம்
ஒற்றை மனிதனாக பார்த்திபன் நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ஒற்றை செருப்பு படத்திற்கான அங்கீகாரம் மற்றும் சான்றளிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. பாரதிராஜா, பாக்கியராஜ் போன்ற சாதனையாளர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், இந்திய சாதனை மற்றும் ஆசிய சாதனைகளை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும் விவேக் பங்கு பெற்று, பார்த்திபனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
பார்த்திபனிடம் உதவியாளராகப் பணியாற்றி இயக்குநரான சாமி பேசும்போது, ஒத்தை செருப்பு படம் நம்மை முழுமையாக ஆட்கொள்ளும் அளவுக்கு இருக்கிறது. ஒரே ஒரு கதாபாத்திரம்தான் என்றாலும், நம் முழு கவனத்தையும் ஈர்த்து தன்னுள் வைத்துக் கொள்கிறது இப் படம். பார்திபனிடம் உதவியாளராகப் பணியாற்றியது குறித்து முன்பு சந்தோஷப் படுவேன். இப்போது சந்தோஷப்படுவது மட்டுமின்றி பெருமைப்படுகிறேன். வசூல் ரீதியாகவும் இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றுத் ...
ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்!
'ராதாகிருஷ்ணன் பார்த்திபன்' என்ற பெயர் தென்னிந்திய சினிமாவில் பல தசாப்தங்களாக கோலோச்சி வரும் மிகவும் கவர்ச்சிகரமான பிராண்டுகளில் ஒன்றாகும். இந்த பிராண்ட் ‘வித்தியாசமான மற்றும் விதிவிலக்கான கற்பனைகள்' மூலம் தன்னைத்தானே எல்லைகளுக்கு அப்பால் பல சமயங்களில் கொண்டு சென்றிருக்கிறது. நட்சத்திர அந்தஸ்து மற்றும் உச்சநிலை தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் பலரும் ரசிகர் கூட்டத்தை திரையரங்குகளுக்கு இழுத்துக் கொண்டிருந்த போதிலும், அவர் தனியொரு மனிதராகவே தனது தனித்துவமான கதை மற்றும் வித்தியாசமான சினிமாக்கள் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார். பல்துறை வித்தகரான அவர் "ஒத்த செருப்பு சைஸ் 7" என்ற அவரது முத்திரை பதிக்கப்பட்ட படத்தின் மூலம் நம்மை கவர்ந்திழுக்கிறார். தவறாமல் பார்த்து விட வேண்டும் என்ற சினிமா ஆர்வலர்களின் பட்டியலில் இந்த படம் ஏற்கனவே முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தணி...
உலக சாதனைப் படமாக உருவாகும் பார்த்திபனின் ஒத்த செருப்பு!
பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே இயங்கும் 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் அறிமுக விழா மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. புதுமைப்பித்தன் பார்த்திபன் நிகழ்த்திய இந்த விழாவில் புதுமைகளை தமிழ் சினிமாவில் புகுத்தும் முயற்சியில் தொடர்ந்து இயங்கும் உலக நாயகன் கமல்ஹாசன், ஹாலிவுட் தரத்தில் தமிழ் சினிமாவிலும் படங்களை கொடுப்பது சாத்தியம் என்பதை நிரூபித்த இயக்குனர் ஷங்கர், திரைக்கதை வித்தகரும், பார்த்திபனின் குருநாதருமான பாக்யராஜ் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த...


