Saturday, July 18

Tag: rparthiban

சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு பாராட்டு தெரிவித்த ‘டீன்ஸ்’ படக்குழு!

சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு பாராட்டு தெரிவித்த ‘டீன்ஸ்’ படக்குழு!

News
இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய சாகச திரில்லர் திரைப்படம் 'டீன்ஸ்' டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியீடு! உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதை தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட ...
புதுமைப் பித்தன் பார்த்திபன் பிறந்த நாளை எப்படி கொண்டாடினார் தெரியுமா?

புதுமைப் பித்தன் பார்த்திபன் பிறந்த நாளை எப்படி கொண்டாடினார் தெரியுமா?

News
  சமீபத்தில் என் பிறந்த நாள், பொதுவாக நான் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை, காரணம் உருவமாக நான் வெளி வந்த நாளை விட, ஒரு கலைஞனாக பார்த்திபன் என்ற பெயரிட்டு என்னை இந்த திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய திரு பாக்யராஜ் அவர்கள் மூலமாக, நான் பிறந்த பிறகு தான் என் வாழ்க்கையில் சுபிட்சம் தொடங்கியது. 89,90 களில் என் பிறந்த நாளின் போது, மிகப்பெரிய விழாவாக நான் கொண்டாட, அன்றைய செய்திதாள்களில், தினத்தாள்களில் என்னை வாழ்த்தி வந்த விளம்பரங்கள் ஏராளம். நடிகர் சிவகுமார் அவர்கள் என்னிடம் சொன்னார் ‘சில வருடங்களில் இது கொஞ்சம் குறையலாம், குறையும்போது உன் மனம் வருத்தப்டும் வேண்டாமே’ என்றார். அன்றிலிருந்து நிறுத்தி விட்டேன் என் பிறந்த நாள் கொண்டாட்டங்களை. நாம் தினந்தோறும் இறந்து, மறுநாளில் பிறக்கிறோம் அது தான் உண்மை . ஒவ்வொரு உறக்கமும் ஒரு சிறிய மரணம். விடிந்த பின் தான் தெரிகிறது இன்னும் வாழ்க்கை மிச்ச...
பார்த்திபனிடம் உதவி இயக்குநராக சேரத் தகுதியானவரா எஸ்.ஏ.சந்திரசேகர்?

பார்த்திபனிடம் உதவி இயக்குநராக சேரத் தகுதியானவரா எஸ்.ஏ.சந்திரசேகர்?

News
பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்துக்காக திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ஏஸ்.ஏ.சந்திரசேகர், நான் எழுபது படங்களை இயக்கிய கார் பங்களா பேங்க் பேலன்ஸ் என்று செட்டில் ஆகிவிட்டேன். ஆனால் பார்திபன் இயக்கிய ஒத்தசெருப்பு படத்தைப் பார்த்த பிறகு அவரிடம் உதவி இயக்குநராக ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மேடையில் பாராட்ட இதை நான் சொல்லவில்லை. நிஜமாகவே அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்திய படம் இது என்று சத்தியம் செய்யாத குறையாக பாராட்டிப் பேசினார். இரண்டு நாட்களுக்கு முன் எஸ் ஏ.சந்திரசேகர் இயக்கிய கேப்மாரி என்ற படத்தைப் பார்தபோது, மிஸ்டர் பார்த்திபன் இதை சீரியசாக எடுத்துக்கொண்டு எஸ்.ஏ.சியை உதவி இயக்குநராக்கி அவருக்கு நல்ல சினிமா என்றால் என்னவென்று ஏன் சொல்லிக்கொடுக்கக் கூடாது என்று தோன்றியது. ஆனால் பாத்திபன் சார் இதில் உள்ள பேர...
பார்த்திபனைப் பாராட்டிய சரத் குமார்!

பார்த்திபனைப் பாராட்டிய சரத் குமார்!

Uncategorized
ஒத்தசெருப்பு சைஸ் நம்பர் 7. தமிழில் முதல்முறையாக அனைவரும் பாராட்டும் வகையில் மிக பெரிய முயற்சியை திரு பார்த்திபன் எடுத்துள்ளார். தனது எல்லா படைப்புகளிலும் புதுமைக்கு புதிய பாதை வகுக்கும் பார்த்திபன், இந்த படத்தின். வழியாக நலிந்து வரும் சினிமா தொழிலுக்கு ஒரு ஆரோக்கியமான பாதையை தனது பாணியில் காண்பித்ததற்கு பாராட்டுகள். ஏழை தந்தை ஒருவன் நோயாளி குழந்தையுடனும், சமுதாயத்தில் நிலவும் வக்கிரங்களை வலியுடன் எதிர்கொண்டு, பல கேரக்டர்களை அவற்றின் தன்மையை தனி மனிதராக தனது நடிப்பு திறன் மூலமே காட்டி வியப்பில் ஆழ்த்துகிறார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா உலக அளவில் பேசப்படும். முதலில் தமிழ்நாட்டில் பேசப்பட வேண்டும். மனம் திறந்த வாழ்த்துகள்.” என்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான திரு R.சரத்குமார் அவர்கள் கூறினார்....
ஒத்தை செருப்பின் விருது வேட்டை ஆரம்பம்!

ஒத்தை செருப்பின் விருது வேட்டை ஆரம்பம்!

News
தமிழ்த்திரை வரலாறு எழுத முனையும் எவருக்கும் தவிர்க்க முடியாத reference guideஆகத் திகழ்ந்த 'பிலிம் நியூஸ்' ஆனந்தன்,  புகைப்படங்கள் தொடங்கி திரைப்படம் மற்றும் கலைஞர்கள் தொடர்பான அத்தனை தகவல்களையும் ஆவணப்படுத்துவதை தன் வாழ்நாள் தவமாக மேற்கொண்டிருந்தவர். இன்றும் அவரது இடத்தை நிரப்புவதற்கு ஆள் இல்லை. அவரது நினைவைப் போற்றும்வகையில் பிலிம் நியூஸ் ஆனந்தன் பெயரில் வழங்கப்படும் விருது, 'ஒற்றை செருப்பு' படத்துக்காக இயக்குநர் ஆர்.பார்த்திபனுக்கு வழங்கப்பட்டது. பிரசாத் ஸ்டுடியோவில் நடந்த விழாவில் 'பிலிம் நியூஸ்' ஆனந்தனின் புதல்வர் டைமண்ட் பாபு இந்த விருதை பார்த்திபனுக்கு வழங்கினார். எண்ணிலடங்கா விருதுகளையும், ஏராளமான பாராட்டு விழாக்களையும் பெறப்போகும் இந்த ஒத்தை செருப்புக்கு ஆனந்தன் நினைவு விருது சென்ட்டிமெண்ட்டாகவே அமர்க்களமான ஆரம்பம் என்றால் மிகையாகாது. தானே எழுதி இயக்கித் தயாரித...
இம்மாதம் 27ஆம் தேதி வெளியாகும்  ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’!

இம்மாதம் 27ஆம் தேதி வெளியாகும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’!

News
அறிமுக இயக்குனர் சுதர் இயக்கத்தில் '2 Movie Buff ' நிறுவனம் சார்பில் ரகுநாதன் PS தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. இப்படத்தில், கயல்' சந்திரமௌலி, சாட்னா டைட்டஸ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், சாம்ஸ், டேணியல் ஆணி போப், அர்ஜெய் ஆகியோர் நடித்துள்ளனர். SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிடுகிறது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய கயல் சந்திரமெளலி, ‘கயல் படத்திற்கு பிறகு நான் அதிகமாக எதிர்பார்க்கும் படம் எதுவென்று கேட்டால் அது ‘ திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ தான். அது எனக்கு எப்படி ஒரு அறிமுக படமாக கிடைத்ததோ, அதேபோல் என் அண்ணனுக்கு தயாரிப்பில் இது முதல் படம். எதை மூடி காண்பிக்கணுமோ அதை மூடி தான் காட்டணும், எதை மறைக்க வேண்டுமோ அதை மறைத்து தான் ஆக வேண்டும், எதை காண்பிக்க வேண்டுமோ அதை மட்டு...
“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா !

“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா !

News
இன்று வெளியாகியுள்ள “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தினை முன் திரையிடலில் கண்ட விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தினை கொண்டாடி வருகிறார்கள். இயக்குநர் பார்த்திபன் படம் முழுக்க ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே  வரும்படி எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இப்படத்தினை அனைவரும் ஆச்சர்யத்தின் உச்சத்தில் வாய்பிளந்து பாராட்டி வருகிறார்கள். படத்தினை தூக்கி சுமந்து உயிர் தந்திருக்கும் இசையமைப்பாளர் சத்யாவிற்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த ஒற்றைப்படத்தின் மூலம் தன் தரத்தின் அடுத்த உயரத்தை அடைந்திருந்திருக்கிறார் இசையமைப்பாளர் சத்யா. படத்தில் பணிபுரிந்தது பற்றி இசையமைப்பாளர் சத்யா பகிர்ந்து கொண்டது.... பல சாதனைகள் புரிந்து, பலரது பாராட்டுக்களையும் பெற்று வரும் இந்தப்படத்தில் பணிபுரிந்ததை நான் மிகுந்த பெருமையாகவும், எனக்கு கிடைத்த கௌரவமாகவும் கருதுகிறேன். இத்தகையதொரு படத்தில் எனது புதுமையான முயற்சிகள...