நவம்பர் 22ஆம் தேதி வெளியாகும் ‘நிறங்கள் மூன்று’!
"மனிதர்களின் இருண்ட பக்கம் மற்றும் ஆழமான உணர்வுகளை ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் காட்டும்”- நடிகர் சரத்குமார்!
நடிகர் சரத்குமாரின் ஒப்பற்ற நடிப்புத்திறன் அவர் நடிக்கும் படங்களின் தரத்தை இன்னும் ஒருபடி மேலே உயர்த்தும். நடிகர்கள் அதர்வா முரளி மற்றும் ரஹ்மானுடன் இணைந்து இவர் நடித்திருக்கும் ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் நவம்பர் 22 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
படம் குறித்து நடிகர் சரத்குமார் கூறும்போது, ”நான் இத்தனை வருடங்களில் பல இயக்குநர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். அவர்களின் தனித்தன்மையில் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். அந்த வகையில், புதிய காட்சிகளை உருவாக்குவதில் கார்த்திக் நரேன் திறமையானவர். காட்சிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருவதோடு நடிகர்களை வித்தியாசமான பரிமாணத்தில் வெளிப்படுத்த தன்னால் முடிந்தவரை சிறந்ததை கொடுப்பார். மனிதர்களின் இருண்ட பக்கம் மற்றும் ஆழமான உணர்வுகளை ...






