காதலையும் நட்பையும் பற்றிப் பேசும் காமெடி ஆக்ஷன் படம் ‘கும்பாரி’!
ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் விஜய் விஷ்வா, நலீப் ஜியா , மஹானா சஞ்சீவி , ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி குமாரி ,காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் கெவின் ஜோசப்.
ஒளிப்பதிவாளராக பிரசாத் ஆறுமுகம், இசை அமைப்பாளர்களாக ஜெயபிரகாஷ், ஜெய்சன் பிரித்திவி ஆகியோர், படத்தொகுப்பாளராக டி.எஸ்.ஜெய், நடன இயக்குநராக ராஜுமுருகன்,சண்டை இயக்குநராக மிராக்கல் மைக்கேல் ,கலை இயக்குநராக சந்தோஷ் பாப்பனாங்காடு, பாடல் ஆசிரியர்களாக வினோதன், அருண் பாரதி, சீர்காழி சிற்பி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
ஆதரவற்ற ஒருவனும் அனாதைச் சிறுவனும் சிறு வயதிலிருந்து நட்பு கொள்கிறார்கள...