” உள்ளங்கையில் ஒலகம் சுத்துது. எவ்வளவு போட்டாலும் எங்க பத்துது” இப்படி ஒரு கலக்கலான பாடலை பாடி விஜய் விஷ்வா தனது நண்பர்களுடன் பாடி ஆடிய காட்சி ஒன்று கே.வி.மீடியா நிறுவனம் தயாரிக்கும் “பிரம்ம முகூர்த்தம்” படத்திற்காக கேசவ் நடன பயிற்சியில் படமாக்கப்பட்டது.
விஜய் விஷ்வா, சோனி, மனோஜ், ஆர். சுந்தர்ராஜன், அனுமோகன், முத்துக்காளை, முல்லை கோதண்டம், சாம்ஸ், இன்னும் பலர் நடிக்கின்றனர்.
முகமது ஜாபர் வசனத்தையும், ஈ.ஜெ.நவ்சாத் ஒளிப்பதிவையும், ஸ்ரீசாஸ்தா இசையையும், ப்ரியன் படத்தொகுப்பையும், பம்மல் ரவி சண்டைப் பயிற்சியையும், கேசவ் நடன பயிற்சியையும், சினேகன் மற்றும் சி-பாலமுருகன் இருவரும் பாடல்களையும் கவனிக்கின்றனர்.
சென்னையில் படப்பிடிப்பு வெளியூரில் வளர்ந்துவரும் இதன் மற்ற பாடல் காட்சிகள் குலுமணாலியில் படமாக்கப்பட உள்ளன.
கே.வி.மீடியா சார்பில் ” பிரம்ம முகூர்த்தம்” திரைப்படத்தை பி.எஸ்.என்.தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, எழுதி டி.ஆர்.விஜயன் தனது இரண்டாவது இயக்கத்தில் உருவாக்கி வருகிறார்.