பெங்களூர் மெட்ரோவில் ஒரு நட்சத்திர பிறந்தநாள் கொண்டாட்டம்!
பெங்களூர் மெட்ரோவில் முதன்முறையாக ஒரு நட்சத்திர பிறந்தநாள் கொண்டாட்டம் – ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்களின் வரலாற்றுச் சாதனை !
“பெங்களூர் மெட்ரோவில் பிறந்தநாள் கொண்டாட்ட மரியாதை பெற்ற முதல் நடிகர் – ராக்கிங் ஸ்டார் யாஷ் !!
பெங்களூர் நகரம் இதுவரை கண்டிராத ஒரு வரலாற்று நிகழ்வை சமீபத்தில் கண்டது. இந்திய சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படைப்புகளில் ஒன்றாக உருவாகிக் கொண்டிருக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தின் மையமாக திகழும் நடிகர் யாஷ் உடைய பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்கள் பெங்களூர் மெட்ரோவை முழுமையாக ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்ட மேடையாக மாற்றியுள்ளனர்.
வரும் ஜனவரி 8 அன்று நடிகர் யாஷ் பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், நகரத்தின் உயிர்நாடியாக விளங்கும் பெங்களூர் மெட்ரோ, முதன்முறையாக ஒ...






