ட்ரெண்டிங்கில் #1 இடத்தைப் பெற்ற ‘யாஷ் 19′!

0

 29 total views,  1 views today

ராக்கிங் ஸ்டார் யாஷ், மிகவும் எதிர்பார்க்கப்படும், தனது அடுத்த படமான ‘யாஷ் 19’  படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை, டிசம்பர் 8, 2023 அன்று அறிவிக்க உள்ளார்.*

தற்போது ‘யாஷ் 19’ என்று அழைக்கப்படும் தனது அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை, டிசம்பர் 8, 2023 அன்று வெளியிடவுள்ளார் ராக்கிங் ஸ்டார் யாஷ் !!

யாஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ஆரம்பமானது!!, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு டிசம்பர் 8, 2023 அன்று வெளியாகிறது!!

‘கே.ஜி.எஃப்’ – I & II, படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ராக்கிங் ஸ்டார் யாஷ் இந்தியாவில் திரை ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். படத்தின் அனைத்து அம்சங்களிலும் வெளிப்படும் அவரது ஈடுபாடு, படத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு மேலும் தனது பன்முக திறமையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் விதம் என,  ரசிககர்கள் கொண்டாடும் நட்சத்திரமாக  கொடி நாட்டினார். ஆனால் ‘கே.ஜி.எஃப்: பார்ட் 2’ இன் மாபெரும் வெற்றிக்கு பிறகு, ஒரு வருடத்திற்கும் மேலாக, அவர் எந்த படத்தையும் அறிவிக்காதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தற்போது தனது மில்லியன் கணக்கான ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், ஒரு அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

பெரும் காத்திருப்புக்குப் பிறகு, யாஷ் இப்போது தனது அடுத்த படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடத் தயாராகி வருகிறார், இது அவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நடிகர் யாஷ் அடுத்து தான் நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை  விரைவில் வெளியிடவுள்ளார்.  தற்போதைக்கு இப்படம் ‘யாஷ் 19’ என்று குறிப்பிடப்படுகிறது. சமூக ஊடகங்களில், ராக்கிங் ஸ்டார் யாஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் இணைந்து, ஒரு கூட்டுப் பதிவில், படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை டிசம்பர் 8, 2023 அன்று காலை 9:55 மணிக்கு அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

சமூகவலைத்தள பதிவு இங்கே :

https://x.com/TheNameIsYash/status/1731540492666696161?t=Gc8QyVS7iFWWtzSL-jXl9Q&s=08

https://www.instagram.com/p/C0azQlWrLlD/?igshid=MzRlODBiNWFlZA==

ஆக்சன் களத்தில் உச்சத்தை தொட்ட யாஷ்,  திரையில் புதுவகையான அனுபவம் தரும்,  மாபெரும் படைப்புகளை, தேர்வு செய்வதில், திரைப்படங்கள் குறித்து தெளிவான தொலைநோக்குப் பார்வை கொண்டவர்  என்பது குறிப்பிடதக்கது.

படத்தின் அறிவிப்பு தேதியை வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்பாக, சூப்பர் ஸ்டார் யாஷ் சமூக ஊடகங்களில் தனது புரஃபைல்  படத்தை ‘லோடிங்’ என மாற்றினார். ராக்கிங் ஸ்டார் தனது  புரஃபைல்  படத்தை  மாற்றியதால், சமூக ஊடகங்களில் #Yash19 ட்ரெண்டிங்கில் #1 இடத்தைப் பெற்றது.

மிகப்பெரும் எதிர்ப்பார்ப்புடன், பரபரப்பாக வெளியான, வெகு சில அறிவிப்புகளில் ஒன்றான “யாஷ் 19” அறிவிப்பை ரசிகர்கள் கொண

Share.

Comments are closed.