Sunday, September 20

Tag: sarath kumar

பிரம்மாண்டமாக உருவாகும் சரத்குமாரின் 171வது திரைப்படம்!

News
https://youtu.be/lBoe3yDdHvQ?si=yvYH1NM4_K1GMFhX சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது திரைப்படத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணி; பி. எல். தேனப்பன் – பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் இணைந்து வழங்குகிறார்கள்! சென்னை: தமிழ் திரைப்பட உலகில் முக்கிய அறிவிப்பாக, சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது திரைப்படத்தை ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் பி. எல். தேனப்பனுடன், இணை தயாரிப்பாளராக பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்த கூட்டணி இன்று சரத்குமாரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், பி. எல். தேனப்பனின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தயாரிப்பாளரான அனுப் மோகன் தல...
சரத்குமார் நடிப்பில் உருவான 150 வது திரைப்படம் “தி ஸ்மைல் மேன்”!

சரத்குமார் நடிப்பில் உருவான 150 வது திரைப்படம் “தி ஸ்மைல் மேன்”!

News
“தி ஸ்மைல் மேன்” (The Smile Man) திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு ! மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் - பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “தி ஸ்மைல் மேன்” (The Smile Man). இப்படம் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். தயாரிப்பாளர் சலீல் தாஸ் பேசியதாவது…. இது தயாரிப்பில் என் முதல் தமிழ்ப்படம், முழுமையான ஒத்துழைப்பு தந்த என் குழுவினருக்கு நன்றி. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி. திரைக்கதை எழுத்தாளர் கமலா ஆல்கெமிஸ் பேசியதாவது… எங்க செட்லயே உற்சாகமான நபர் சரத்குமார் சார் தான். பவுண்ட் ஸ்க்ரிப்ட் வாங்கி வைத்துக்கொண்டு, எல்லாவற்றையும் குறித்து வைத்துக்கொண்டு,...
சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

News
ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்! 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது அடுத்த திரைப்படத்திற்காக பிரம்மாண்ட கூட்டணியை அமைத்துள்ளார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மற்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்திற்காக இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் பொன்ராம் முதல் முறையாக கை கோர்த்துள்ளார். கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த, நகைச்சுவையும் சண்டை காட்சிகளும் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் திருவிழாவாக உருவாகும் இப்படத்தை பெரும் பொருட்செலவில் புதிய நிறுவனமான ஸ்டார் சினிமாஸ் பேனரில் முகேஷ் டி. செல்லையா தயாரிக்கிறார். புதுமுக...
சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ முதல் கட்ட படப்பிடிப்பு  நிறைவு!

சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

News
M360° ஸ்டுடியோஸ் ரோஷ் குமார் வழங்கும், பி திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது! தனித்துவமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் நடிகர்கள் சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் தங்களது சிறந்த நடிப்புத்திறன் மற்றும் பன்முகத்தன்மையை பல படங்கள் மூலம் நிரூபித்துள்ளனர். இதன் மூலம் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் கதாநாயகர்களாக வலம் வருகிறார்கள். இப்போது இருவரும் அறிமுக இயக்குநர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சமரன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இதனை M360° ஸ்டுடியோஸின் ரோஷ் குமார் தயாரித்துள்ளார். முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், புதிய ஷெட்யூல் விரைவில் தொடங்கும் என்றும் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்...
பரபரக்கும் திரில் பயணம்,  வெளியானது “போர் தொழில்” டீசர்!

பரபரக்கும் திரில் பயணம், வெளியானது “போர் தொழில்” டீசர்!

News
குற்ற விசாரணை பின்னணியில், ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான திரில்லர், “போர் தோழில்,” திரைப்படம் ஜூன் 9 அன்று திரைக்கு வர உள்ளது. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான டீசரை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். கொலையாளியை தேடும் சவால் மிகுந்த, திரில் பயணத்தை அழகாக காட்டுகிறது டீசர். வன்முறை மிகுந்த இருண்ட உலகில், ஒவ்வொரு மூலையிலும் எதிர்பாராத ஆபத்து பதுங்கியிருக்கும் நிலையில், ஒரு பிரகாசமான ஆனால் இளகிய இதயம் கொண்ட ஒரு புதிய இளம் காவலதிகாரி தனது வாழ்வில், மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறார். அவரது முதல் விசாரணையில் பணியில் வெற்றிபெற, அவருக்கு எதிர்தன்மை கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மூத்த காவலருடன் இணைய வேண்டும். ஒன்றாக, அவர்கள் தங்கள் வேறுபாடுகளைக் கடந்து, ஒரு சைக்கோ கொலையாளியை வேட்டையாடும் பயணத்தில் ஈடுபடுகிறார்கள்., சரத்குமார், அசோக் செல்வன் முதன்மை பாத்திரங்களி...
புத்தகங்களை இலவசமாக வழங்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்!

புத்தகங்களை இலவசமாக வழங்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்!

News
தன்னிடம் உள்ள புத்தகங்களை இலவசமாக வழங்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தன்னுடைய இல்லத்தில் உள்ள நூலகத்திலிருந்து புத்தகங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் முன்முயற்சியை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தொடங்கியுள்ளார். தங்களுக்கு பிடித்த புத்தகங்களை மக்களே தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்: நான் படித்த, எனக்கு அன்பளிப்பாக வந்த மற்றும் என் தந்தையார் எனக்காக விட்டு சென்ற சுமார் 6,000 புத்தகங்களை தினமும் எடுத்து படிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. இந்த புத்தகங்களை பொக்கிஷமாக வைத்திருப்பதை விட, அதை பிறருடன் பகிர்ந்து கொள்வது தான் அதிகமான மகிழ்ச்சி தரும் என்று நான் எண்ணினேன். இறைவன் ஒரு தனி மனிதனிடம் அதிகமான செல்வத்தை தருகிறான் என்று சொன்னால், அது பொருட்ச்செல்வமாக இருக்கலாம், அறிவு செல்வமாக இருக்கலாம், அதை பிறருடன் பகிர...
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு !

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு !

News
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழவேட்டரையர் பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் குறித்தும் தான் நடிக்கும் மற்ற படங்கள் குறித்தும் இன்று பத்திரிகை ஊடக நண்பர்களோடு கலந்துரையாடினார் நடிகர் சரத்குமார். இந்நிகழ்வில் சரத்குமார் கூறியதாவது... பலராலும் பல காலம் முயற்சி செய்த பொன்னியின் செல்வனை, பல கஷ்டத்திற்கு பிறகு மணிரத்னமும், லைகா புரொடக்‌ஷனும் இணைந்து உருவாக்கியுள்ளனர். பல பெரிய நடிகர்களை ஒருங்கிணைத்து இந்த படத்தை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கியுள்ளார்கள். முழு நாவலையும், கதாபாத்திரங்களையும் எடுக்க நினைத்தால் அது பல பாகங்களாக போகும். மணிரத்னம் அதை சரியாக சு...
சரத்குமார் சுஹாசினி நடிக்கும் படம்  பூஜையுடன் துவங்கியது !

சரத்குமார் சுஹாசினி நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது !

News
சரத்குமார் நடிக்கும் புதிய படம் பூஜையுடன், இன்று இனிதே துவங்கியது ! திருமலை பாலுச்சாமி இயக்கத்தில், M360°STUDIOS சார்பில்  ரோஷ் குமார் தயாரிக்கிறார் ! M360°STUDIOS சார்பில் தயாரிப்பாளர் ரோஷ் குமார் தயாரிக்கும், இன்னும் பெயரிடப்படாத திரைப்படத்தின் பூஜை இன்று துவங்கியது. இயக்குநர் திருமலை பாலுச்சாமி படத்தினை எழுதி, இயக்குகிறார். இப்படத்தில் சரத்குமார் மற்றும் சுஹாசினி மணிரத்னம் முதன்மை பாத்திரங்களில், மண் சார்ந்த முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.   படம் குறித்து M360°STUDIOS சார்பில் தயாரிப்பாளர் ரோஷ் குமார் கூறியதாவது... இந்த கதை முழுக்க, முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும், இந்த காலகட்டத்திற்கு தேவையான கருத்துகளை உணர்த்தும் விதமாகவும் அமைந்துள்ளது. இந்த கதையை இயக்குநர் எழுதி முடித்த பின், இந்த மண் சார்ந்த கதாபாத்திரத்திற்கு, சரியான நபராக எனக்கு தோன்றியது ...
பார்த்திபனைப் பாராட்டிய சரத் குமார்!

பார்த்திபனைப் பாராட்டிய சரத் குமார்!

Uncategorized
ஒத்தசெருப்பு சைஸ் நம்பர் 7. தமிழில் முதல்முறையாக அனைவரும் பாராட்டும் வகையில் மிக பெரிய முயற்சியை திரு பார்த்திபன் எடுத்துள்ளார். தனது எல்லா படைப்புகளிலும் புதுமைக்கு புதிய பாதை வகுக்கும் பார்த்திபன், இந்த படத்தின். வழியாக நலிந்து வரும் சினிமா தொழிலுக்கு ஒரு ஆரோக்கியமான பாதையை தனது பாணியில் காண்பித்ததற்கு பாராட்டுகள். ஏழை தந்தை ஒருவன் நோயாளி குழந்தையுடனும், சமுதாயத்தில் நிலவும் வக்கிரங்களை வலியுடன் எதிர்கொண்டு, பல கேரக்டர்களை அவற்றின் தன்மையை தனி மனிதராக தனது நடிப்பு திறன் மூலமே காட்டி வியப்பில் ஆழ்த்துகிறார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா உலக அளவில் பேசப்படும். முதலில் தமிழ்நாட்டில் பேசப்பட வேண்டும். மனம் திறந்த வாழ்த்துகள்.” என்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான திரு R.சரத்குமார் அவர்கள் கூறினார்....