சிவகார்த்திகேயனின் மூன்றாவது தயாரிப்பு “வாழ்” 

0

 200 total views,  1 views today

கனா, NNOR வெற்றிகளைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், தனது தந்தையின் பிறந்த நாளன்றுதனது மூன்றாவது தயாரிப்பான “வாழ்” திரைப்படத்தின்பர்ஸ்ட் லுக்கை  வெளியிட்டார். 

அருவி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அருண் பிரபுபுருஷோத்தமன் எழுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாழ்’  திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான சில மணிநேரத்திலேயே சமூக வலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. ப்ரஸ்ட் லுக்கில் ஒரு மாபெரும் இயற்கை சூழ் குகையின்ஒளி வீச்சில் படத்தின் கதாநாயகனின் நிழல்  நின்றுகொண்டிருப்பது போல இருந்தது குறிப்பிடதக்கது.

படத்தின் தலைப்பை வெளியிட்ட இரண்டு வாரமே ஆன இவ்வேளையில் வாழ் படகுழுவினர் திடீரென சமூகவலைதளங்களில் படபிடிப்பு நிறைவு என்று குறிப்பிட்டு படம்தொடர்ப்பான  சில புகைப்படங்களையும் தகவல்களையும் வெளியிட்டுள்ளது. 

படக்குழுவினர் 2018 தொடக்கத்திலிருந்து இத்திரைப்படத்தில் பணி புரிந்து வருகின்றனர். 2019 ஜனவரியில் தொடங்கி ஜூலை வரை 75 நாட்கள் நூற்றிக்கும் மேற்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழு இப்போது முழு முனைப்புடன் போஸ்ட்ப்ரொடக்ஸன்ஸ் மற்றும் இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்டுவருகிறது. 

பெரிய மலைத்தொடர்கள், பெரும் குகைகள், ஆர்ப்பரிக்கும்ஆற்றுப்பாதைகள், துப்பாக்கி ஏந்திய வெளி நாட்டு ராணுவவீரர்கள்  என வெவ்வேறு சூழல்களில் படக்குழுவினர்படப்பிடிப்பு நடத்தும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்வெளியாகியுள்ளது.

‘அருவி’யைப் போலவே, முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும்இப்படத்திற்காக, படக்குழு இதுவரை சினிமா கேமராவில்பதிவாகாத பல இடங்களுக்கு சென்று படப்பிடிப்புநடத்தியுள்ளதாக கூறப்படுக்கிறது. 

‘வாழ்’ திரைப்படத்திற்கான ஒளிப்பதிவை ஷெல்லியும், படதொகுப்பை ரேமண்ட் டெர்ரிக் க்ராஸ்டாவும், இசையைப்ரதீப்குமாரும், கலை இயக்கத்தை ஶ்ரீராமனும்செய்கிறார்கள். 

முன்னதாக 2018ல், இப்படத்தின் இசைக் கோர்வைசேகரிப்புக்காகவும், இசைப் பதிவிற்காகவும் படக்குழுடல்லாஸ், சின்சினாட்டி,  இஸ்தான்புல் என உலகின் பலநகரங்களுக்குச் சென்றது குறிப்பிடதக்கது. வெவ்வேறுநாட்டினைச் சேர்ந்த பல இசை  கலைஞர்களின் பங்களிப்பு இப்பட்டத்தில்ட்டிபதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தில் பல பாடல்கள் இருப்பதாகவும் கூடுதல் தகவல்.

‘வாழ்’ திரைப்படத்தின் நடிகர்கள் யார், படத்தின் இசைவெளியீடு எப்போது என்னும் தகவல்கள் வரும் வாரங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 
Share.

Comments are closed.

CLOSE
CLOSE