![]()
கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப், பங்கஜ் ஆகியோர் இணைந்து, Infiniti Film Ventures சார்பில் தயாரிக்கும் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். முன் தயாரிப்புப் பணிகள் மும்மரமாக நடந்து வரும் இப்படத்தில் நாயகியாக நடிக்க ஸ்ரீதிவ்யா ஒப்பந்தமாகியிருப்பது தயாரிப்பு நிறுவனம் சார்பில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அல்லு சிரிஷ் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத் தக்கது.
விஜய் மில்டன் கதை எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார் கதிர்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பை துவக்கி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

