Sunday, November 29

Author: admin

முருங்கைக்காய் பிரியாணி!

முருங்கைக்காய் பிரியாணி!

News
தலை வெட்டியான் பாளையம் பட நாயகனும், குக்ட் (Cookd) குழுவினரும் இணைந்து சுவைபட தயாரித்த முருங்கைக்காய் பிரியாணி! தலை வெட்டியான் பாளையம் எனும் அசல் நகைச்சுவை இணைய தொடரின் நாயகனான அபிஷேக் குமார் இணையதள பிரபலமான குக்ட் சமையல் கலைஞர்களுடன் இணைந்து முருங்கைக்காய் பிரியாணி எனும் சாகச சமையலை சுவைபட தயாரித்த காணொளி பிரபலமாகி இருக்கிறது. யூட்யூபில் 2.7 மில்லியன் சந்தாதாரர்களுடன் சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் டிஜிட்டல் சமையல் தொடர்பான ஸ்டார்ட் அப் நிறுவனம் குக்ட் . இந்த யூட்யூப்பில் பிரபலங்கள் கலந்து கொள்ளும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், சமையல் வகைகள், சமையல் தயாரிப்புகள் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் ஏராளமான அம்சங்களை கலவையாக தயாரித்து வழங்கி வருகிறது. தலை வெட்டியான் பாளையம் - ப்ரைம் வீடியோவில் இடம்பெற்றுள்ள அசல் தமிழ் நகைச்சுவை இணைய தொடர். பார்வையாளர்களின் மனதை...
ZEE5 தமிழுக்கான அதிக சந்தாதாரர்களைப் பெற்று சாதனை!

ZEE5 தமிழுக்கான அதிக சந்தாதாரர்களைப் பெற்று சாதனை!

News
டிமான்ட்டி காலனி 2 திரைப்படம், செப்டம்பர் 27ஆம் தேதி உலக டிஜிட்டல் பிரீமியருக்கு முன்னதாக, ZEE5 தமிழுக்கான அதிக முன் சந்தாதாரர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது! டிமான்ட்டி காலனி 2 திரைப்படம், திரையரங்கில் பெற்ற மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, இப்போது இந்தியாவின் முன்னணி உள்நாட்டு ஸ்ட்ரீமிங் தளமான ZEE5 இல், அதன் டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகி வருகிறது. பிடிஜி யுனிவர்சல் பாபி பாலச்சந்திரன், ஞானமுத்து பட்டரை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் தயாரிப்பில்,  அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள  இத்திரைப்படத்தில், அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும், முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ZEE5 தமிழில் வெளியாவதற்கு முன்னதாகவே, புதிய சாதனையைப் படைத்துள்ளது. டிடி ரிட்டர்ன்ஸ், காதர் பாட்ஷா, அயோத்தி & அகிலன் போன்ற முந்தைய வெற்றிப்படங்களைத் தாண்டி,  அத...
90s கிட்ஸ்’ன் காதல் கதை “செல்லக்குட்டி”!

90s கிட்ஸ்’ன் காதல் கதை “செல்லக்குட்டி”!

News
90s கிட்ஸ்'ன் காதல் கதையான "செல்லக்குட்டி" திரைப்படம் அக்டோபர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தொண்ணூறுகளில் பிறந்தவர்களின் பள்ளி, கல்லூரி வாழ்க்கை, நட்பு மற்றும் காதலை பிரதிபலுக்கும் வண்ணம், சுவாரஸ்யமான திருப்பங்களுடன் படத்தின் கதை அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஶ்ரீ சித்ரா பௌர்ணமி ஃபிலிம் சார்பில் திரு. V. மணிபாய் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை திரு. சகாயநாதன் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் திரு.சிற்பி பின்னணி இசை அமைக்க, இசையமைப்பாளர் T.S. முரளிதரன் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். திரு. ஓம்பிரகாஷ் சண்டைப்பயிற்சி அளிக்க, திரு,பாபி ஆண்டனி நடனப்பயிற்சி அளித்திருக்கிறார்....
காம்தார் நகருக்கு காந்தக் குரலோன் பெயர்!

காம்தார் நகருக்கு காந்தக் குரலோன் பெயர்!

News
26.09.2024 வணக்கம், காம்தார் நகருக்கு காந்தக் குரலோனின் பெயர் வைத்தது ஆகப் பொருத்தமான செயல். நாம் கடந்து வரும் நண்பர்கள் பிரிந்து போனதும் அவர்களைச் சுற்றிய நினைவுகளையும் சேர்ந்து கடந்துவிடுகிறோம். அப்படியில்லாமல் கடந்துபோன நிகழ்வுகளை மீட்டுத் திரும்பவும் வைத்துக்கொள்வதில் இருக்கிறது நம் பேரன்பு. அப்படி நம்மிடையேயும், காற்றோடும் இவ்வுலகின் அலையோடும் கலந்து நிற்பவர் இசைக் குரலோன் பத்மஸ்ரீ பத்ம விபூஷன் எஸ். பி. பி . அவர் வாழ்ந்த காம்தார் நகருக்கு எஸ். பி பாலசுப்பிரமணியன் சாலை என்று பெயரிட. அறிவித்துள்ள தமிழக அரசுக்கும்...மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகின் சார்பில் நன்றிகள். தமிழ்த் திரையுலகிற்கு முதல்வர் அவர்கள் செய்துவரும் நலன்களும்... திரைத்துறையினரின் மீது கொண்டுள்ள அன்பும்... அவர்களுக்காக முன்னின்று செய்யும் ஆக்கமிகு செயல்கள...

மெய்யழகன் _ விமர்சனம்

Reviews
மெய்யழகன் _ விமர்சனம் நடிப்பு: கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி, சுவாதி, ஸ்ரீ ரஞ்சனி, இளவரசு மற்றும் பலர் தயாரிப்பு : 2D என்டர்டைன்மெனட் சூர்யா ஜோதிகா இசை: கோவிந்த் வசந்தா ஒளிப்பதிவு: மகேந்திரன் ஜெயராஜ் இயக்கம்: சி. பிரேம் குமார் பிஆர்ஓ : ஜான்சன் காதல் காட்சிகள் இல்லாமல், டூயட் பாட்டுகள் இல்லாமல், அதிரடி சண்டை காட்சிகளும் இல்லாமல் தரமான ஒரு படத்தை சுவைபட தர முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார். தஞ்சை மாவட்டத்தின்  நீடாமங்கலத்தில் இருக்கும் தங்கள் பாரம்பரிய வீட்டையும்,  சொத்துக்களையும் குடும்ப தகராறு காரணமாக இழந்து சென்னையில் குடியேறுகிறது அரவிந்த்சாமியின் குடும்பம். சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தங்கை உறவு முறையில் உள்ள ஒரு பெண்ணின் திருமணத்திற்கு பிறந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அரவிந்த்சாம...

சட்டம் என் கையில் _ விமர்சனம்  

Reviews
  சட்டம் என் கையில் _ விமர்சனம் துவக்கத்திலிருந்து இறுதிவரை இப்படி ஒரு விறுவிறுப்பான படத்தை பார்த்து எவ்வளவு காலம் ஆயிற்று? ஒரே இரவில் நடக்கும் அட்டகாசமான அதிரடி த்ரில்லர் சட்டம் என் கையில். ஏற்காடு மலை... இரவு நேரம்...  ஏதோ சிந்தனையுடனும், ஒருவகை  பரபரப்புடனும் மது அருந்தியபடி காரை ஓட்டிக்கொண்டு வருகிறார் சதீஷ். காரிருள் நேரத்தில் எதிரே வந்த பைக் மீது சற்றும் எதிர்பாராமல் கார் மோதுகிறது. பைக் ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்திலேயே மரணடைகிறார். பயத்தில் என்ன செய்வது என்று புரியாத நிலையில் இறந்தவரின் உடலை உடலை தனது கார் டிக்கியில் ஏற்றி பயணத்தைத் தொடர்கிறார் சதீஷ். இடையில் போலீஸ் செக் போஸ்ட்... திடீரென டென்ஷன் ஆனால் வார்த்தைகள் குளறி வாய் திக்குவது சதீஷ்க்கு ஏற்படும் வழக்கம். இன்ஸ்பெக்டர் விசாரிக்கும் போது சதீஷுக்கு வாய் திக்குவதால் இன்ஸ்பெக்டர் திக்குவாயன் என்று  சொல்ல ...
சொகுசுக் கப்பலில் வெளியான “பன் பட்டர் ஜாம்” படத்தின் செகண்ட் லுக் !

சொகுசுக் கப்பலில் வெளியான “பன் பட்டர் ஜாம்” படத்தின் செகண்ட் லுக் !

News
நடுக்கடலில் சொகுசுக் கப்பலில் வெளியான “பன் பட்டர் ஜாம்” படத்தின் செகண்ட் லுக் !! பிக்பாஸ் ராஜு கதாநாயகனாக அறிமுகமாகும் Gen Z தலைமுறை திரைப்படம் "பன் பட்டர் ஜாம்" ! Rain Of Arrows Entertainment சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆத்யா பிரசாத் & பவ்யா திரிகா நடிப்பில், இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “பன் பட்டர் ஜாம்'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது லுக், நடுக்கடலில் கோர்டிலியா குரூஸ் சொகுசுக்கப்பலில், வெளியிடப்பட்டது. தமிழ் திரை வரலாற்றில் முதல் முறை, ஒரு சொகுசுகப்பலில் ஒரு திரைப்படத்தின் போஸ்டர் வெளியாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது. இந்நிகழ்வில் படக்குழுவினர்...
அக்டோபர் 6 முதல் பிக்பாஸ் சீசன் 8

அக்டோபர் 6 முதல் பிக்பாஸ் சீசன் 8

News
"ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.." பிக்பாஸ் சீசன் 8, அக்டோபர் 6 முதல் ! தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது. சமீபத்தில் மிகப்புதுமையான முறையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில், மக்கள் முன்னிலையில் மக்கள் கைகளால் வெளியிடப்பட்ட இந்த பிக்பாஸ் சீசன் 8ன் அசத்தலான ப்ரோமோ, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மிகப்பெரும் புகழைப்பெற்று, மக்களின் மனங்களில் இடம்பிடித்த நிகழ்ச்சி, பிக்பாஸ். கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன், கோலாகலமாக அறிவிக்கப்பட்டது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கும், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் அசத்தலான ப்ரோமோ, வரவேற்பைப் பெற்ற ...
உன்னி முகுந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான மார்கோ படத்தின் போஸ்டர்!

உன்னி முகுந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான மார்கோ படத்தின் போஸ்டர்!

News
உன்னி முகுந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான மார்கோ படத்தின் போஸ்டர்! உன்னி முகுந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு 'மார்கோ' படத்தின் 2வது அசத்தலான போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. பான்-இந்தியன் நட்சத்திரமான உன்னி முகுந்தன், தயாரிப்பாளர் ஷரீப் முகமதுவின் கியூப்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அவரது வரவிருக்கும் பன்மொழி திரைப்படமான 'மார்கோ' படத்தில் கொடூரமான மற்றும் இரக்கமற்ற வில்லனாக நடித்துள்ளார். படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் செப்டம்பர் 22ம் தேதி அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ளது. 'மார்கோ' படத்தில் உன்னி முகுந்தன் வில்லனாக நடித்து இருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டை இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மார்கோ படம் இந்திய சினிமாவை அதன் இணையற்ற அதிரடி மற்றும் வன்முறை ...
திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டுமாம்?

திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டுமாம்?

News
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் பத்திரிகையாளர்களின் சந்திப்பு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று 24-09-2024 காலை 11 மணியளவில் தேனாம்பேட்டையில் DR.MALIGAI NO.2 POES ROAD, 3RD STREET உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கீழே உள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. *தயாரிப்பாளர்கள் கவனத்திற்கு :* நாம் ஏற்கனவே பேசி ஒப்புக்கொண்டபடி, திரைப்படங்களை OTT யில் கீழ்கண்ட முறையில் திரையிட அனுமதிக்க வேண்டும் 1, பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் கழித்தும். அதுக்கு அடுத்து வரிசையில் உள்ள நடிகர்களில் படம் 6 வாரங்கள் கழித்தும் OTT யில் திரை இடும்படி கேட்டுக்கொள்கிறோம். 2, தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தான் திரையிடப்பட வேண்டும். 3, சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழகத்தில் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது *அரசாங்க ...