Sunday, November 29

Author: admin

ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்!

ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்!

News
தமிழ் திரையுலகின் நம்பிக்கை அளிக்கும் இளம் நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் துருவ் விக்ரமின் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்நிகழ்விற்காக துருவ் விக்ரமின் ரசிகர்கள் சென்னையில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்க வளாகத்தில் திரண்டனர். இதனை தொடர்ந்து ரசிகர்கள், துருவ் விக்ரமுடன் இணைந்து, அவரது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். அத்துடன் செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்தனர். இந்த கொண்டாட்டத்தின் அடுத்த கட்டமாக சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் முதன்முதலாக இணைந்து நடித்த 'மகான்' திரைப்படம் தனிப்பட்ட காட்சியாக ( Private Show) திரையிடப்பட்டது. இதனை ரசிகர்களுடன் இணைந்து துருவ் விக்ரம் உற்சாகமாக பார்வையிட்டார். பிறந்த நாளன்று துருவ் விக்ரம் ரசிகர்களை சந்தித்து கொண்டாடியது... ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.‌ இந்நிகழ்வை அகில இந்திய சீயான் விக்ரம் நற்பணி மன்ற தலைவரும், மே...
‘தில் ராஜா’ வெல்லும் ராஜாவாக இருக்கும்!

‘தில் ராஜா’ வெல்லும் ராஜாவாக இருக்கும்!

News
'தில் ராஜா' பத்திரிகையாளர் சந்திப்பு ! GOLDEN EAGLE STUDIOS சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள திரைப்படம், “தில் ராஜா”. வருகிற 27 ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசியதாவது… அனைவரையும் இங்கு ஒன்றாகப் பார்ப்பது மிகப்பெரிய சந்தோசம் தருகிறது. தில் ராஜா படத்தில் நான் நடித்த பாடல் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள், ஆனால் இனி நடிப்பேனா எனத் தெரியவில்லை. படம் முடித்த பின்னர் புரமோசனுக்கு மாஸாகா பாடல் கேட்டார்கள். ஹுயூமரா காமெடியாக இருக்க ஆள் வேண்டும் என்று சொன்னார்கள், ஆள் தேடித் தேடி கடைசியில் என்னையே நடிக்க வைத்து விட்டார்க...
அதிநவீன வசதிகளை கொண்ட மெய்நிகர் தயாரிப்புக் கூடம் தொடக்கம்!

அதிநவீன வசதிகளை கொண்ட மெய்நிகர் தயாரிப்புக் கூடம் தொடக்கம்!

News
சென்னையில் உள்ள ஏ ஆர் ஆர் (ARR) ஃப்லிம் சிட்டியில் யூஸ்ட்ரீம் (uStream) என்ற பெயரில் அதிநவீன வசதிகளை கொண்ட மெய்நிகர் தயாரிப்புக் கூடம் தொடக்கம்! சென்னையில் உள்ள ஏ ஆர் ஆர் (ARR) ஃப்லிம் சிட்டியில் யூஸ்ட்ரீம் (uStream) என்ற பெயரில் அதிநவீன வசதிகளை கொண்ட மெய்நிகர் தயாரிப்புக் கூடம் (Virtual Production Studio) இந்தியா மற்றும் உலகெங்கும் இருந்து வந்திருந்த 500க்கும் மேற்பட்ட திரையுலகப் பிரமுகர்கள் முன்னிலையில் செப்டம்பர் 22 அன்று தொடங்கப்பட்டது. முழுமையான தொழில்நுட்பப் பணிகளை வழங்கும் uStream, ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் மற்றும் தொழில்துறை முன்னோடி ஸ்ரீதர் சந்தானம் கூட்டணியில் உருவாகியுள்ளது. இந்திய சினிமாவின் புதிய யுகத்தை வரவேற்க வழிவகுப்பதாய் இது வடிவம் எடுத்திருக்கிறது. தொடக்க விழாவில் தொழில்துறை தலைவர்களின் கருத்தாழம் மிக்க உரைகள் இடம்பெற்றன. சிஜி ப்ரோவைச் சேர்ந்த...
உற்சாகமூட்டும் புதிய சுயாதீன பாடல் ‘டாக்ஸிக் காதல்’.!

உற்சாகமூட்டும் புதிய சுயாதீன பாடல் ‘டாக்ஸிக் காதல்’.!

News
  இசையமைப்பாளர் அருண் ராஜ் மற்றும் ‘பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரன் இணைந்து வெளியிட்டுள்ள உற்சாகமூட்டக்கூடிய புதிய சுயாதீன பாடல் ‘டாக்ஸிக் காதல்’.! ஆத்மாவை வருடும் உணர்ச்சிகரமான இசை படைப்புகளால் பரவலாக அறியப்படும் தமிழ்நாட்டின் பிரபல இசையமைப்பாளர் அருண்ராஜ், ‘பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரனுடன் இணைந்து, சமீபத்தில் அவர்களின் புதிய பாடலான ‘டாக்ஸிக் காதல்’-ஐ வெளியிட்டுள்ளனர். அதீத எதிர்பார்ப்புகள் நிறைந்த இந்த பாடல், நவீன காதல் உறவுகளின் சிக்கல்களை உணர்ச்சிகரமான மெலோடிகள் மற்றும் தைரியமான பாடல்வரிகளின் கலவையால் விவரிக்கிறது. ‘டாக்ஸிக் காதல்’ என்ற இந்த பாடல், காதல் சில நேரங்களில் ஏற்படுத்தக்கூடிய இருண்ட, தீவிரமான மற்றும் மாறும் உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்துகிறது. தடம், எறும்பு, பிஸ்ஸா-3, பைரி போன்ற வெற்றி பெற்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் இதயங்களை வென்ற...
சமுத்திரக்கனி நடிக்கும் ‘திரு.மாணிக்கம்’!

சமுத்திரக்கனி நடிக்கும் ‘திரு.மாணிக்கம்’!

News
சமுத்திரக்கனி நடிக்கும் 'திரு.மாணிக்கம்'! சமீபகாலமாக தமிழ் சினிமா சந்தித்திருக்கும் மாபெரும் ஒரு சவால்தான் OTT மற்றும் SATELLITE வியாபாரம். கடந்த வருடங்கள் போல் இல்லாமல் மிகக் கடினமான சூழ்நிலையில் தமிழ்த் திரைப்படங்கள் இந்த வியாபாரத்தில் போராடிக் கொண்டிருக்கிறது. ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய பிறகே OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம் முடிவாகும் என்ற சூழல் இப்போது உருவாகியுள்ளது. இந்த காலக் கட்டத்தில் திரைக்கு வரும் முன்னரே திரு.மாணிக்கம் திரைப்படத்தை பார்த்து இதயம் கரைந்து இந்தப் படம் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற படமாகவும் மனதை நெகிழவைக்கும் படமாகவும் இருக்கும் என்பதை உணர்ந்து ஜீ தமிழ் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் OTT மற்றும் SATELLITE உரிமையை வாங்கி உலகமெங்கும் வெளியிடவிருக்கிறார்கள்... மிக விரைவில் வெள்ளித் திரைக்கு வரவிருக்கிற திரு.மாணிக்கம் படத்தில் சமுத்திரக்கனி, ப...
தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீம் செய்யப்படும்‘கியாரா கியாரா’!

தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீம் செய்யப்படும்‘கியாரா கியாரா’!

News
ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘கியாரா கியாரா’ இந்தியில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது! ~ கரண் ஜோஹர் மற்றும் குனீத் மோங்கா தயாரிப்பில் உருவான, "கியாரா கியாரா" சீரிஸில், ராகவ் ஜூயல், கிருத்திகா கம்ரா மற்றும் தைர்யா கர்வா ஆகியோர் நடித்துள்ளனர் ~ ZEE5 தளத்தில் வெளியான கியாரா கியாரா சீரிஸ் பெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த சீரிஸின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப்பதிப்புகளை வெளியிட்டுள்ளது. கிருத்திகா கம்ரா, ராகவ் ஜூயல் மற்றும் தைரிய கர்வா ஆகியோரின் நடிப்பில், வித்தியாசமான கதைசொல்லல் மற்றும் தனித்துவமான நடிப்பிற்காகக் கொண்டாடப்படும், இந்த அற்புத சீரிஸ், தற்போது அதன் பல மொழி வெளியீட்டின் மூலம், புதிய பார்வையாளர்களை வசீகரிக்கத் தயாராக உள்ளது. குனீத் மோங்கா கபூரின் சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் கரண் ஜோஹரின் தர்மா என்டர்டெயின...
லப்பர் பந்து _ விமர்சனம்

லப்பர் பந்து _ விமர்சனம்

Reviews
லப்பர் பந்து: விமர்சனம் இன்னும் ஒரு கிரிக்கெட் படமா என்று ஆரம்பத்தில் சற்று அயற்சி தோன்றினாலும் இது முற்றிலும் மாறுபட்ட ரசிக்கத் தகுந்த கிரிக்கெட் படமாக மலர்ந்திருக்கிறது. ஜாலி பிரெண்ட்ஸ் கிரிக்கெட் குழுவின் தலைவன் காளி வெங்கட். தனது ஊரில் உள்ள இந்த கிரிக்கெட் குழுவில் விளையாட வேண்டும் என்பது சிறு வயது முதலே ஹரிஷ் கல்யாண் ஆசை. ஹரிஷ் கல்யாண் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை காரணம் காட்டி அவரது கிரிக்கெட் ஆசையில் மண்ணை போடுகிறார்  வைஸ் கேப்டன். இதேபோல் மற்றொரு ஊரில் உள்ள கிரிக்கெட் குழுவில் விளையாடும் அட்டக்கத்தி தினேஷ் கெத்து என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். கைக்குட்டையை சுருட்டி பேட்டின் கைப்பிடியை சுற்றி கெத்து காட்டுவதில் துவங்கி, மட்டையை சுழற்றி பந்தை அடிப்பது வரை கெத்து காட்டுவது இவரது ஸ்பெஷாலிட்டி. கெத்துவின் மனைவிக்கோ கணவன் கிரிக்கெட் விளையாட செல்வது பிடிக்காது. ஆயினு...
கோழிப்பண்ணை செல்லதுரை _ விமர்சனம்

கோழிப்பண்ணை செல்லதுரை _ விமர்சனம்

Reviews
கோழிப்பண்ணை செல்லதுரை _ விமர்சனம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வசிக்கும்  நடுத்தர குடும்பம். திருமணத்தை மீறிய உறவு காரணமாக குடும்பத்தை விட்டு வெளியேறுகிறார் குடும்பத்தலைவி. இதனால் வெறுப்படைந்த குடும்பத்தலைவர், இரண்டு பிள்ளைகளையும் நிர்க்கதியாக விடுகிறார். அந்த பிள்ளைகள்... பதினோரு வயது சிறுவன், எட்டு வயது சிறுமி... இருவரும் தூரத்து சொந்தமான பெரியப்பாவிடம் அடைக்கலமாகிறார்கள். பெரியப்பாவின் கோழிப்பண்ணையில் வேலை பார்த்து, தங்கையை கல்லூரிவரை படிக்கவைக்கிறான் அண்ணன். பிரிந்து சென்ற தாய், தந்தையை ஒரு நாள் சந்திக்கறான். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை. தென் மேற்கு பருவகாற்று படத்தில் விஜய் சேதுபதியை அடையாளம் காட்டியதுபோல இந்த படத்தில் ஏகனை அடையாளம் காட்டி இருக்கிறார் சீனு ராமசாமி. முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பு. வாழ்த்துகள். ஜெயசுதா, பிரிகிடா சகா...
ABC Talkies Welcomes Sakshi Agarwal as New Advisory Board Member!

ABC Talkies Welcomes Sakshi Agarwal as New Advisory Board Member!

News
ஏபிசி டாக்கீஸ் சாக்ஷி அகர்வாலை புதிய ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், நிறுவனத்தின் பிராந்திய விளம்பரத் தூதராகவும் நியமித்துள்ளது சுயாதீன திரைப்பட இயக்குனர்களுக்கு ஆதரவளிக்கும் வெளிப்படையாக அணுகக் கூடிய ஓடிடி (OTT) திரைப்பட ஸ்ட்ரீமிங் தளமான ஏபிசி டாக்கீஸ், முன்னணி நடிகையும் மாடலுமான சாக்ஷி அகர்வாலை தனது ஆலோசனைக் குழுவில் இணைத்துக் கொண்டதாக மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இதற்கு மேலாக, சாக்ஷி அகர்வால் பிராந்திய விளம்பரத் தூதராகவும் செயல்படுவார், இளம் திறமைகளை ஆதரிக்க ஏபிசி டாக்கீஸ் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல் படுவதை மேலும் வலுப்படுத்துவார். தென்னிந்திய திரைப்படத்துறையில் பிரபலமான நடிகையும் மாடலுமான சாக்ஷி அகர்வால், பல்வேறு திறமைகளைக் கொண்டவர். அவர் ஆலோசனைக் குழுவில் இணைந்தது, சினிமாவில் படைப்பாற்றல் மற்றும் புதுமையை ஊக்குவிக்க ஏபிசி டாக்கீஸ் முன்னணி தொழில்முனைவோர்களுடன் இணைந்து செயல்படும் எண்...
சாரா கலைக்கூடம் தயாரிக்கும் ‘ஆகக்கடவன’!

சாரா கலைக்கூடம் தயாரிக்கும் ‘ஆகக்கடவன’!

News
சாரா கலைக்கூடம் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'ஆகக்கடவன'! புதுமுகமான ஆதிரன் சுரேஷ் கதை நாயகனாக நடித்துள்ளார். இவர் நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியில் வந்த சில குறும்படங்களிலும் அட்டக்கத்தி, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் நடித்துள்ளனர். இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவரான தர்மா, திரைப்படக் கல்லூரியில் இவர் இயக்கிய ஒரு குறும்படம் 3 மாநில விருதுகளை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ஒளிப்பதிவு லியோ வெ ராஜா, இசை சாந்தன் அன்பழகன், படத்தொகுப்பை ...