Sunday, November 29

Author: admin

பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் சிபி  சக்ரவர்த்தி – ஸ்ரீ வர்ஷினி சிபி!

பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் சிபி சக்ரவர்த்தி – ஸ்ரீ வர்ஷினி சிபி!

News
'டான்' படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி - ஸ்ரீ வர்ஷினி சிபி திருமணத்திற்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்! எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'டான்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்ரவர்த்திக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் இந்த மாதம் ஐந்தாம் தேதி ஈரோட்டில் திருமணம் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்திற்குப் பின் சிபி சக்கரவர்த்தியும் அவரது மனைவி ஸ்ரீ வர்ஷினி சிபியும் இன்று மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். 'டான்' படத்திற்கு பத்திரிகையாளர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த சிபி, அடுத்த படத்திற்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு தேவை என்றார். வெளியூரில் திருமணம் நடந்ததால் யாரையும் அழைக்க ம...
பிறந்தநாளில் புதிய படத்தை அறிவித்த கௌதம் கார்த்திக்!

பிறந்தநாளில் புதிய படத்தை அறிவித்த கௌதம் கார்த்திக்!

News
பிறந்தநாளில் புதிய படத்தை அறிவித்த கௌதம் கார்த்திக்! இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான 'கடல்' படத்தின் மூலம் நமக்கு கதாநாயகனாக அறிமுகமான கௌதம் கார்த்திக், தொடர்ந்து தமிழில் பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பத்து தல' மற்றும் 'ஆகஸ்ட் 16, 1947' ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது. தற்போது கௌதம் கார்த்திக் 'கிரிமினல்' மற்றும் 'மிஸ்டர் எக்ஸ்' என இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில், இப்போது இவர் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கௌதம் கார்த்திக்கின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இப்புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். எளிய மக்களின் வாழ்வியலையும் அதிகாரத்திற்கு எதிரான அரசியலையும் அழுத்தமாக பதிவு செய்யும் இயக்குநர் ராஜு முருகன் இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். இவரி...
மையல்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை சம்ரித்தி தாரா!

மையல்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை சம்ரித்தி தாரா!

News
'மையல்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை சம்ரித்தி தாரா! மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் 'மையல்’ படத்தில் வலுவான கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எமோஷனல் டிராமாவாக உருவாகி இருக்கும் தனது முதல் படத்திலேயே இதுபோன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி என்கிறார் சம்ரித்தி. எந்த சினிமா பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரித்தி சினிமா மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ’ படத்தில் தனது பணி அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட சம்ரித்தி, “இந்தப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே புகழ்பெற்றவர் நடிகை சம்ரித்தி. மாத்ருபூமி மிஸ் க்ரிஹலக்ஷ்மி ஃபேஸ் கேரளா 2019 மற்றும் ஸ்ட...
பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளில், ரெட் ஃபிளவர் திரைப்படம் !!

பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளில், ரெட் ஃபிளவர் திரைப்படம் !!

News
பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளில், ரெட் ஃபிளவர் திரைப்படம் !! ஹங்கேரிய இசைக்குழுவின் பங்கேற்பில், ல், ரெட் ஃபிளவர் திரைப்படம் !! ரெட் ஃபிளவர் திரைப்படத்திற்காக, ஹங்கேரிய இசைக்குழுவுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் ராமின் பிரமாண்ட இசைக்கோர்ப்பு பணிகள் தீவிரம் !! தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் "ரெட் ஃபிளவர்" !! விக்னேஷ் நடிப்பில், இறுதிக்கட்டத்தை எட்டிய "ரெட் ஃபிளவர்" திரைப்படம் !! ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் K மாணிக்கம் தயாரிப்பில், நடிகர் விக்னேஷ் நடிப்பில், எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களத்தில், புதுமையான அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகும் "ரெட் ஃபிளவர்" திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்காலத்தை தத்ரூபமாக காட்டும் வகையில் இதன் VFX பணிகள் தற்போது உலகமெங்கும் பிரம்மாண்டமாகத் நடந்து வருகிறது இந்நிலையில், தற்போது ஹங்கேரிய இசைக்குழுவுடன் இசையமைப...
நன்கொடை வழங்குவதற்காக அம்மா அனாதை இல்லத்திற்கு சென்ற, சாய் துர்கா தேஜ் !

நன்கொடை வழங்குவதற்காக அம்மா அனாதை இல்லத்திற்கு சென்ற, சாய் துர்கா தேஜ் !

News
நன்கொடை வழங்குவதற்காக அம்மா அனாதை இல்லத்திற்கு நேரில் சென்ற, சாய் துர்கா தேஜ் ! சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், அவரது மாமா, ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் போலவே சமூக அக்கறை மிக்க உதவிகள் வழங்குவதில் பெயர் பெற்றவர். இரு தெலுங்கு மாநிலங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நிவாரணப் பணிகளில் சாய் துர்கா தேஜ் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறார். ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தலா ரூ. 10 லட்சம், என மொத்தம் ரூ.20 லட்சத்தை அவர் வழங்கியுள்ளார், கூடுதலாக, அவர் மேலும் ஐந்து லட்சங்களை அம்மா அறக்கட்டளை மற்றும் பிற அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். அவர் உறுதியளித்த தொகையை நன்கொடையாக வழங்க விஜயவாடாவிற்கு நேரில் வருகை தந்தது, அவரது கருணை மனதை காட்டுவதாக, ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். விஜயவாடாவை பாதித்த சமீபத்திய வெள்ளத்தைத் தொடர...
250 நாட்களாக தொடந்து உணவு வழங்கி வரும் நடிகர் புகழ்!

250 நாட்களாக தொடந்து உணவு வழங்கி வரும் நடிகர் புகழ்!

News
பசி என்று யார் வந்தாலும் அவர்களுக்கு என்னுடைய அலுவலகத்தில் உணவு வழங்கப்படும் என்று நடிகர் புகழ் அவர்கள் நடிகர் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் உறுதி ஏற்றிருந்தார். அதனை நிறைவேற்றும் விதமாக தினமும் தன்னுடைய அலுவலகத்தில் 50 நபர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். கடந்த 250 நாட்களாக தொடந்து உணவு வழங்கி வரும் நிலையில் இன்று 251 வது நாளை எட்டியுள்ளது. ஆண்டின் 365 நாட்களும் தனது அலுவலகத்தில் தான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தினமும் 50 நபர்களுக்கு கண்டிப்பாக உணவு வழங்கப்படும், அது ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை, பண்டிகை நாட்களாக இருந்தாலும் சரி எல்லா நாட்களிலும் உணவு வழங்கப்படும் அதில் எந்த தடையும் இருக்காது அதற்கான ஏற்பாடுகளை தான் செய்துள்ளதாகவும், வரும் காலங்களில் இந்த உதவி மேலும் பலருக்கு சென்றடையும் வண்ணம் விரிவுபடுத்த தன்னுடைய வெற்றிக்கு மக்களின் ஆதரவை என்றும் நாடியிருப்பதாக நடிகர் புகழ் தெ...
ஹிப் ஹாப் தமிழா ஆதி தயாரிப்பாளராக அறிமுகமாகும் ‘கடைசி உலகப் போர்’!

ஹிப் ஹாப் தமிழா ஆதி தயாரிப்பாளராக அறிமுகமாகும் ‘கடைசி உலகப் போர்’!

News
“கடைசி உலகப்போர்” திரைப்பட   முன் வெளியீட்டு நிகழ்ச்சி! ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் "கடைசி உலகப்போர்".  மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம். ராப் பாடகராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது… என்னோட மகள் கல்லூரியில் புதிதாக அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறார், ...
‘சுயம்பு’ படத்தில் நடிகை சம்யுக்தா கேரக்டர் லுக்!

‘சுயம்பு’ படத்தில் நடிகை சம்யுக்தா கேரக்டர் லுக்!

News
நடிகை சம்யுக்தா பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘சுயம்பு’ படத்தில் இருந்து கேரக்டர் லுக்கை படக்குழு வெளியிட்டது! தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் தென்னிந்திய திரையுலக ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார் நடிகை சம்யுக்தா. தற்போது பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், பிக்சல் ஸ்டுடியோ தயாரிப்பில், நிகில் நடிப்பில் பான்-இந்திய திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘சுயம்பு’ படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார் சம்யுக்தா. அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ‘சுயம்பு’ படத்தில் இருந்து அவரது கேரக்டர் லுக்கை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரில் தைரியம் மிக்க வீராங்கனையாக கேடயத்துடன் வில் அம்பு ஏந்தியபடி இருக்கிறார் சம்யுக்தா. நிகிலின் 20வது படமான இதில் அவர் ஒரு போர் வீரனாக நடிக்கிறார். தாகூர் மது வழங்கும் இப்படத...
இயல்பான தோற்றத்தால் ரசிகர்களின் ஆர்வத்தை கவரும்நடிகை சங்கீதா கல்யாண் குமார்!

இயல்பான தோற்றத்தால் ரசிகர்களின் ஆர்வத்தை கவரும்நடிகை சங்கீதா கல்யாண் குமார்!

News
நடிகை சங்கீதா கல்யாண் குமார், வெளிவரவிருக்கும் ‘பராரி’ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளார்! ‘பக்கத்து வீட்டு பெண்’ என்ற உணர்வை சில நடிகைகளே பார்வையாளர்களுக்கு தருவார்கள். இதில் நடிகை சங்கீதா கல்யாண் குமாரும் ஒருவர். சந்தானம் நடிப்பில் வெளியான ‘80ஸ் பில்டப்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் ராஜு முருகனின் தயாரிப்பில் எழில் பெரியவாடி இயக்கிய 'பராரி' படத்தில் தனது இயல்பான தோற்றத்தால் ரசிகர்களின் ஆர்வத்தை கவர்ந்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது. டிரெய்லரில் அவரது அற்புதமான திரை இருப்பு, நடிப்பு ஆகியவை கவனம் ஈர்த்துள்ளது. படம் வெளியான பிறகு நிச்சயம் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை. பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷனை பட்டப்படிப்பாக முடித்த இவர் திரைப்படங்கள் மற்றும் ஊடகங்கள் பற்றிய விசாலமான பார்வையைப் பெற்றிரு...
ரஹ்மானின் நட்பும் மனித நேயமும் இன்று வரை குறையவில்லை..”- பாபு ஆண்டனி

ரஹ்மானின் நட்பும் மனித நேயமும் இன்று வரை குறையவில்லை..”- பாபு ஆண்டனி

News
“நடிகர் ரஹ்மானின் நட்பும் மனித நேயமும் இன்று வரை குறையவில்லை..”- பாபு ஆண்டனி மீண்டும் நேருக்கு நேர் மோதும் 'எவர்கிரீன் ஸ்டார்' ரஹ்மான் - 'பவர்ஸ்டார்' பாபு ஆண்டனி ! தென்னிந்திய சினிமாவில் இன்றும் எவர்கிரீன் ஹீரோவாக இருப்பவர் நடிகர் ரஹ்மான். மலையாள சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின் தமிழ் தெலுங்கு படங்களிலும் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் பாபு ஆண்டனி. அதன் பின் 1990 - களில் மலையாளத்தில் காதாநாயகனாக, ஆக்க்ஷன் ஹீரோவாக நடித்து ரசிகர்களால் பவர் ஸ்டார் என்று போற்றப்பட்டார். இவர் கதாநாயகனாக மலையாளத்தில் நடித்த கடல், பாக்ஸர், சந்தா, பரண கூடம், நெப்போலியன், தாதா, ராஜதானி உள்ளிட்ட ஏராளமான படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. இன்றும் மலையாளத்திலும் பிற மொழிகளிலும் நாயகனாகவும் வில்லனாகவும் குணசித்திர நடிகராக நடித்து கொண்டிருக்கிறார், பாபு ஆண்டனி . பல வருடங்களுக்கு பிறகு 'எவர்கிரீன் ஸ்டார் ' ரஹ...