Friday, October 23

செம்பியன் மாதேவி _ விமர்சனம்

Loading

செம்பியன் மாதேவி _ விமர்சனம்

கிராமத்து இளைஞனும், பெண்ணும் காதலிக்க.. சாதி காரணமாக ஏற்படும் பிரச்சினைகளை சொல்கிறது செம்பியன் மாதேவி திரைப்படம்.

செம்பியன் என்கிற சிறிய கிராமத்தைக் கதைக்களமாகக் கொண்டு விரிகிறது காட்சிகள். நாயகன் வீராவுக்குச் சொந்தமான கோழிப்பண்ணை இருக்கிறது. அதில் முதியவர் ஒருவர் வேலை பார்க்கிறார். அவரது மகள் மாதேவியை காதலிக்கிறார் வீரா.

சாதி பிரச்சினை காரணமாக, ஆரம்பத்தில் காதலை மறுக்கும் மாதேவி, பிறகு நாயகனின் தூய்மையான அன்பை உணர்ந்து காதலிக்கத் துவங்குகிறார். இருவரும் காதல் வானில் மிதக்கின்றனர். ஒரு கட்டத்தில் ஈருடல் ஓருடலாக.. நாயகி கர்ப்பமாகிறார். தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறார். ஆனால் நாயகன் மறுத்துவிடுகிறார்.

அவர் ஏன் மறுத்தார்? அதன் பிறகு என்ன ஆனது என்பதே செம்பியன் மாதேவி படத்தின் கதை.

வீராவாக வரும் நாயகன் லோகு பத்மநாபன், நிஜமான கிராமத்து மனிதனாகவே வாழ்ந்து இருக்கிறார். காதலுக்காக உருகுவது, சாதியை எதிர்த்து பேசுவது, திருமணம் செய்ய மறுப்பது என ஒவ்வொரு காட்சியிலும் இயல்பாக நடித்து உள்ளார்.

நாயகி மாதேவியாக தோன்றி இருக்கும் அம்சலேகாவும் உண்மையிலேயே கிராமத்து பெண்ணாகவே மாறி இருக்கிறார். பிரச்சினைகளை கருத்தில் கொண்டு காதலை மறுப்பது, பிறகு ஏற்பது… கர்ப்பமான பிறகு தவிப்பது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

மற்றொரு நாயகி கண்ணகியாக வரும் ரெஜினாவும் நன்றாகவே நடித்து உள்ளார்.

கே.ராஜசேகரின் கேமரா படத்துக்கு பலம்.

நாயகனாக நடித்துள்ள லோகு பத்மனாபனே படத்துக்கு இசை அமைத்து இயக்கியும் இருக்கிறார்.

ஏ.டி.ராம் பின்னணி இசை அமைத்து இருக்கிறார். 

இந்த நவீன யுகத்திலும் சாதி கோலோச்சுவதையும் அதற்கான தீர்வு என்ன என்பதையும் சிறப்பாக சொல்லி இருக்கிறது திரைப்படம்.