Sunday, November 29

Author: admin

‘ரோஜா மல்லி கனகாம்பரம் ‘எனும் திரைப்படத்தின் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு!

‘ரோஜா மல்லி கனகாம்பரம் ‘எனும் திரைப்படத்தின் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு!

News
இயக்குநரும், நடிகருமான கே. பி. ஜெகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ரோஜா மல்லி கனகாம்பரம் 'எனும் திரைப்படத்தின் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு பூஜையுடன் திருச்செந்தூரில் தொடங்கியது* 'புதிய கீதை', 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கவிருக்கும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை குடும்பங்கள் கொண்டாடி மகிழ்ந்த 'மாயாண்டி குடும்பத்தார்' எனும் வெற்றி படத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கான தொடக்க விழா மற்றும் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு நேற்று திருச்செந்தூர் அருகே உள்ள சாஸ்தா கோவிலில் நடைபெற்றது. மேலும் இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் ...
ஸ்வீட் ஹார்ட் _ விமர்சனம்

ஸ்வீட் ஹார்ட் _ விமர்சனம்

Reviews
ஸ்வீட் ஹார்ட் _ விமர்சனம் சிறு வயதில் தன் தந்தையை விட்டுவிட்டு தன்னுடைய தாயார் வேறொருவருடன் வாழ சென்று விட்டதை கண் முன் பார்த்த சிறுவன் ரியோ, வளர்ந்த பிறகு குடும்பம் குழந்தைகள் உறவுகள் என பலவற்றிலும் நம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார். ரியோ ராஜும் கோபிகா ரமேஷும் காதலிக்கிறார்கள். தேவையின்றி திருமணத்தை தள்ளிப் போடுவதாக நினைக்கும் ரியாவை பிரிவதற்கு முடிவு செய்கிறார் கோபிகா. இருவரும் பிரிந்த ஓரிரு மாதங்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பது கோபிகாவுக்கு தெரிய வருகிறது. கர்ப்பத்தை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகள் நடைபெறுகின்றன. குழந்தை வேண்டாம் என்பது ரியோவின் நிலைப்பாடு. குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார் கோபிகா. இறுதியில் நடந்தது என்ன என்பதை இக்கால இளைய சமுதாயத்திடம் ஏற்படும் பிரச்சனைகளை தொட்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ்.சுகுமார். யார் யாரோ தயாரிக்கும்...

City of dteams _ ஆங்கிலப்பட விமர்சனம்

Reviews
Cast: Ari Lopez, Renata Vaca, Alfredo Castro, Paulina Gaitán, Jason Patric, Diego Calva Directed By : Mohit Ramchandani Music By : Lisa Gerrard Produced By : Rufus Parker City of dteams _ ஆங்கிலப்பட விமர்சனம் அமெரிக்கா என்றதும் அந்த நாட்டின் செல்வ செழிப்பும், வளமான வாழ்க்கையும்தான் நினைவுக்கு வரும். பூலோக சொர்க்கம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் இருண்ட பக்கத்தை அப்பட்டமாக படம் பிடித்து காட்டுகிறது சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஆங்கில படம். 14 வயது சிறுவன் ஆரி லோபஸ் கால்பந்தாட்ட வீரனாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறான். ஆனால் அந்தக் கனவு எப்படி சிதைக்கப்பட்டு, அவன் வாழ்க்கை சின்னாபின்னம் ஆகிறது என்பதை ரத்தமும் சதையுமாக சொல்லும் படம் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ். சிறுவன் ஆரி லோபஸ் ஹியூமன் ட்ராபிக்கிங் கும்பலால் அமெரிக்காவுக்கு கடத்தி வரப்படுகிறான். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்...
மண் சார்ந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவான ‘வெட்டு’ திரைப்படம்!

மண் சார்ந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவான ‘வெட்டு’ திரைப்படம்!

News
"வெட்டு" படத்தின் இசை விழாவில், இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, கஸ்தூரிராஜா, அம்மா ராஜசேகர், நடிகர்கள் ராகின் ராஜ், சேலம் வேங்கை அய்யனார், பிரேம்நாத், ரவிமரியா, முத்துக்காளை, கிங்காங், விஜய் கணேஷ், கராத்தே ராஜா, காஜா செரிப், நடிகைகள் வனிதா விஜயகுமார், விஜி சந்திரசேகர், சுந்தரா டிராவல்ஸ் ராதா மற்றும் திரையுலக பிரமுகர் கலந்து கொண்டனர்! ஸ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் சார்பில், சேலம் வேங்கை அய்யனார் தயாரிப்பிலும், பிரேம்நாத் இணைத் தயாரிப்பிலும் உருவாகியுள்ள படம் "வெட்டு"! மதுரையை சார்ந்த அம்மா ராஜசேகர், நடன இயக்குனராக தமிழில் பல படங்களுக்கு பணிபுரிந்து, தெலுங்கு திரையுலகில் 300 படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். கோபி சந்த் நடிப்பில் ரணம் என்ற பெயரில் முதல் படம் தெலுங்கில் இயக்கி, மெகா ஹிட் கொடுத்தவர். தொடர்ந்து தனது இயக்கத்தில் 12வது படமாக தனது 17 வயது மகன் ராகின் ராஜை ஆக்ஷன் ஹீரோ...
இம்மாதம் 27ஆம் தேதி வெளியாகும் “எம்புரான்” திரைப்படம்!

இம்மாதம் 27ஆம் தேதி வெளியாகும் “எம்புரான்” திரைப்படம்!

News
மோகன்லால்- பிரித்திவிராஜின் “எம்புரான்” திரைப்படம், மார்ச் 27, 2025-ல், உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகிறது ! மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், “லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “எம்புரான்” திரைப்படம், வரும் 2025 மார்ச் 27-ஆம் தேதி, உலகம் முழுவதும் 4000 -க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர்-இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆன்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். 2019-ல் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற லூசிபர் படத்தின் தொடர்ச்சியாக, அதிரடி ஆக்சன் கதைக்களத்தில், இந்த வருடத்தின் மிகப்பெரிய திரைப்படங்களுள் ஒன்றாக “எம்புரான்” த...
அமெரிக்க நாட்டில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படம்  சிட்டி ஆப் ட்ரீம்ஸ்!

அமெரிக்க நாட்டில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படம்  சிட்டி ஆப் ட்ரீம்ஸ்!

News
அமெரிக்க நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படம்  சிட்டி ஆப் ட்ரீம்ஸ்! செய்தியாளர்களுக்கான திரையிடலின் போது,  இதன் தயாரிப்பாளர் RufusParker பேசுகையில், இந்திய நாட்டை பற்றி வெளிநாடுகளில் படமாகவோ டாக்குமெண்ட்ரிகளாகவோ காட்டும்பொழுது அதை ஒரு வறுமையின் சின்னமாகவும் பசிக்கொடுமையில் குழந்தைகள் தவிப்பதாகவும் குடிசை பகுதி பிச்சைக்காரர்கள், என்று பிரபல இயக்குனர்களும் சரி டாக்குமெண்ட்ரி எடுப்பவர்களும் சரி உலக நாடுகளுக்கு அதை தான் படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள். அதே சமயம் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளை பார்க்கும்பொழுது ஏதோ சொர்க பூமி போல் காட்டி உலக மக்களை வியப்பில் ஆழ்த்துகிறார்கள். ஆனால் அமெரிக்காவிலும் இன்னொரு மறுபக்கம் இருக்கிறது என்பதை *சிட்டி ஆப் ட்ரீம்ஸ் என்ற ஆங்கிலப்படம் உலகுக்கு உணர்த்தி இருக்கிறது. வெவ்வேரு நாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் 18 வயதுக்கும் குறைவான சிற...
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் கன்னட இயக்குநர் சந்தோஷ் குமார்!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் கன்னட இயக்குநர் சந்தோஷ் குமார்!

News
’யுவன் ராபின் ஹூட்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல கன்னட இயக்குநர் சந்தோஷ் குமார்! ஆக்‌ஷன் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் ‘யுவன் ராபின் ஹூட்’! - பூஜையுடன் தொடங்கியது ‘கேம்பஸ் கிராண்டி’ (Campus Kranti), ’ஸ்டூடண்ட்ஸ்’ (Students), ’பிருந்தாஸ் கூக்லி’ (Brundass Googly) ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சந்தோஷ் குமார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அவர் எழுதி இயக்கி தயாரிக்கும் முதல் தமிழ்ப் படத்திற்கு ’யுவன் ராபின் ஹூட்’ (Yuvan Robin Hood) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் கன்னட நடிகர் வீரன் கேஷவ் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக பாலிவுட் நடிகை அல்பிஃயா ஷேக் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரித்விகா, பொன்வண்ணன், ஸ்ருதி சுதிர், தேஷ்பாண்டே, சந்திர சேகர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர...

வருணன் _ விமர்சனம்

Reviews
வருணன் விமர்சனம் ராதாரவி சரண்ராஜ் துஷ்யன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் வருணன். வடசென்னையை மையப்படுத்தி பல அடிதடி கதைகள் வந்திருக்கின்றன என்றாலும் வருணன் படம் அவற்றில் இருந்து சற்றே மாறுபட்டு வடசென்னையில் வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் இரண்டு பெரிய குழுக்களை பற்றிய கதையாக அமைந்திருக்கிறது. ராதாரவியும் சரண்ராஜும் வடசென்னை பகுதியில் ஆட்களை வைத்து வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர். இருவருக்கும் இடையே போட்டி என்று இருந்தாலும் அது எல்லை மீறாமல் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த இருவரிடமும் பணியாற்றும் இளைஞர்கள் அடிக்கடி பல்லை கடித்துக்கொண்டு மல்லு கட்டி நிற்கின்றனர். சரண் ராஜின் மனைவி தனது தம்பியின் துணையுடன் சட்ட விரோதமாக சுண்டக் கஞ்சி காய்ச்சி அதை விற்பனைக்கு அனுப்ப முயலுகிறார். இதை மோப்பம் பிடித்து விடும் போலீஸ் இன்ஸ்பெக்டர், சரண்ராஜை கையும் ...
ராபர் படத்தின் பின்னணி இசை மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஜோகன் சிவனேஷ்!

ராபர் படத்தின் பின்னணி இசை மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஜோகன் சிவனேஷ்!

News
ராபர் படத்தின் பின்னணி இசை மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஜோகன் சிவனேஷ்! ஜோகன் சிவனேஷ் தமிழ்நாட்டின் சென்னையில் இசைப்பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் . இவர் 9 வயது முதலே கீபோர்டு இசைக்கப் பழகினார். பின் ஏ.ஆர். ரஹ்மானின் தற்போதைய கே.எம். கன்ஸர்வேட்டரி அன்று ‘வாப்பா’ கன்ஸர்வேட்டரி என்ற பெயரில் செயல்பட்டுவந்த இசைப்பள்ளியில் சவுண்ட் இன்ஜினீயரிங் படித்தார். மறுபுறம் முன்னனி இசைக்குழுக்களில் கீபோர்டு வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால் பாடகர் எஸ். பி. பாலசுப்பிர மணியம் முதல் இளையராஜா வரை பல இசை மேதைகளோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு அங்கு கிடைத்தது. 2008 ஆம் ஆண்டு இளையராஜாவின் ராஜா ஒன் மேன் ஷோ நிகழ்ச்சியில் கீபோர்டு வாசித்தார் . 2012 ஆம் ஆண்டு முதல்முறையாக கொள்ளைக்காரன் படத்துக்காக இசையமைத்திருந்தார் .இதை தொடர்ந்து இவர் இசையமைத்த மெட்ரோ படம் ஜோகனுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பையும...
‘டெஸ்ட்’ படத்தில் நடிகர் மாதவனின் கதாபாத்திரம் அறிமுகம்!

‘டெஸ்ட்’ படத்தில் நடிகர் மாதவனின் கதாபாத்திரம் அறிமுகம்!

News
'டெஸ்ட்' திரைப்படத்தில் நடிகர் ஆர். மாதவனின் கதாபாத்திரம் சரவணனாக அறிமுகம்: கணவர், விஞ்ஞானி, கனவுகளைத் தேக்கி வைத்திருப்பவர் என சரவணன் தனக்கு வரும் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார்! ஒருவரின் அறிவுதான் விலைமதிப்பில்லாதது. இதை சரவணனை விட வேறு யாரும் நன்கு அறிந்திருக்க மாட்டார்கள். திறமையான, விடாமுயற்சியுடன் போராடும் விஞ்ஞானியான அவரது முன்னேற்றத்திற்கு ஏதோ ஒரு தடை வந்து கொண்டே இருக்கிறது. நெட்ஃபிலிக்ஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் ’டெஸ்ட்’ திரைப்படத்தில் சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் ஆர். மாதவன் நடித்துள்ளார். மேதைமைக்கும் விரக்திக்கும் இடையிலான கோட்டில் பயணிக்கும் நபரை இந்த கதாபாத்திரத்தில் கொண்டு வந்திருக்கிறார். ஆர். மாதவனின் அன்பு நண்பரும், நடிகருமான சூர்யா, ’டெஸ்ட்’ படத்தில் மாதவனின் சரவணன் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளார். சரவணன் தனது கனவை நனவாக்கப் போராடும்போது அந...