Wednesday, April 30

City of dteams _ ஆங்கிலப்பட விமர்சனம்

Loading

Cast: Ari Lopez, Renata Vaca, Alfredo Castro, Paulina Gaitán, Jason Patric, Diego Calva

Directed By : Mohit Ramchandani

Music By : Lisa Gerrard

Produced By : Rufus Parker

City of dteams _ ஆங்கிலப்பட விமர்சனம்

அமெரிக்கா என்றதும் அந்த நாட்டின் செல்வ செழிப்பும், வளமான வாழ்க்கையும்தான் நினைவுக்கு வரும்.
பூலோக சொர்க்கம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் இருண்ட பக்கத்தை அப்பட்டமாக படம் பிடித்து காட்டுகிறது சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஆங்கில படம்.
14 வயது சிறுவன் ஆரி லோபஸ் கால்பந்தாட்ட வீரனாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறான். ஆனால் அந்தக் கனவு எப்படி சிதைக்கப்பட்டு, அவன் வாழ்க்கை சின்னாபின்னம் ஆகிறது என்பதை ரத்தமும் சதையுமாக சொல்லும் படம் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்.
சிறுவன் ஆரி லோபஸ் ஹியூமன் ட்ராபிக்கிங் கும்பலால் அமெரிக்காவுக்கு கடத்தி வரப்படுகிறான்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் கிட்டத்தட்ட கொத்தடிமை போல் பணிக்கு சேர்க்கப்படுகிறான்.
‘உம்’ என்றால் அடி ‘ஏன்’ என்றால் உதை என்ற கொடூரமான வாழ்க்கையில் சிக்கி தவிக்கிறான். அங்கிருந்து எப்படி ஆரி லோபஸ் வெளியேறி தப்பிக்கிறான் என்பதுதான் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் படத்தின் கதை.
உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் இறுதியில் ஆண்டு தோறும் எவ்வளவு பேர் பல்வேறு நாடுகளில் இருந்து கடத்தப்பட்டு அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர் என்ற புள்ளி விவரங்கள் காட்டப்படும்போது கடும் அதிர்ச்சி ஏற்படுகுறத்து.
மொத்த படத்தையும் தாங்கி நிற்பது ஆரி லோபஸ் என்றால் மிகையாகாது.
வசனமே இல்லை என்றாலும் கண்களிலேயே பயத்தைக் காட்டும் ஆரி லோபஸ், முக பாவங்களிலேயே தன் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.
உடலெங்கும் ரத்த காயத்துடன் சிறுவன் ஆரி லோபஸ் அடிபட்டு கிடக்கும் காட்சி நம் நெஞ்சை பதற வைக்கிறது.
பேண்டஸி காட்சிகள் நிரம்பிய அமெரிக்கப் படங்களை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு முகத்தில் அறையும் உண்மைகளைச் சொல்லும் இந்த படம் ஒரு மாறுபட்ட திரை அனுபவத்தை தரும் என்பதில் ஐயமில்லை.
கண்டிப்பாக ஒவ்வொருவரும் தவறாமல் பார்க்க வேண்டிய படம் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்.
மதிப்பெண் 4/5