Friday, October 2

வல்லான் _ விமர்சனம்

Loading

வல்லான் _ விமர்சனம்

மிகப்பெரும் செல்வந்தர் ஒருவரின் மருமகன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.

காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. உயிர் காவல் துறை அதிகாரி ஒருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி சுந்தர் சியை இந்த வழக்கை புலன்விசாரணை செய்யும்படி கேட்டுக்கொள்கிறார்.

சுந்தர் சியும் துப்பு துலக்கிக் கொண்டிருக்கும்போதே,  இந்த வழக்கு. தொடர்பான செய்திகளை வெளியிட்டுக்  கொண்டிருக்கும் ஒரு பெண்ணும் மரணமான முறையில் கொலை செய்யப்படுகிறாள்.

துப்பு எதுவும் கிடைக்காமல் காவல்துறையும் சுந்தர் சி யின் திணறிக் கொண்டிருக்க,  மற்றொரு பெண்ணின் சடலமும் கிடைக்கிறது. அந்தப் பெண்ணின் சடலத்துக்கு அருகில் மற்றொரு பெண்ணின் பிணமும் கிடைக்கிறது.

இறந்து கிடக்கும் பெண்ணின் அடையாளத்துடன் தனது காதலி தான்யா ஹோப்  அடையாளமும் ஒத்துப்போக இறந்து கிடப்பது தனது காதலிதானோ என்று எண்ணி சுந்தர் சி கதறி அழுகிறார்.

இந்தக் கொலைகளுக்கு காரணம் என்ன?

கொலைகளின் நோக்கம் என்ன என்பதை விறுவிறுப்பான திரைக்கதை விளக்குகிறது.

மணி பெருமாளின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

படத்திற்கு கதை வசனம் எழுதி இயக்கி இருப்பவர் வி ஆர் மணி சேயோன். தொழிலதிபர், ட்ரஸ்ட் பணம், என்றெல்லாம் எங்கெங்கோ கதை சுற்றி அலைவதை தவிர்த்து நேர்கோட்டில் அழகாக சொல்லி இருக்க வேண்டிய சஸ்பென்ஸ் திரில்லரை என்ன காரணத்தாலோ சுற்றி வளைத்து ஏதேதோ காட்சிகளை அமைத்து சொல்லி இருக்கிறார் இயக்குநர் மணி சேயோன்.
சந்தோஷ் தயாநிதியின் இசை சுமார் ரகம் தான்.

சுந்தர் சி யின் உயரமும் கட்டான உடலமைப்பும் காவல்துறை அதிகாரி வேடத்துக்கு கனகச்சிதமாக பொருந்துகிறது. மிடுக்காக வந்து போவது மட்டுமின்றி, காதலியை பிணமாக பார்க்கும் காட்சியில் நடிப்பதற்கும் நன்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது சுந்தர் சிக்கு.

தலைவாசல் விஜய்,  சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாசலம் என்று பலர் இருந்தாலும் யாருடைய பாத்திரமும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்பது படத்தின் மிகப்பெரிய குறை.

பொறுமையை சற்றே சோதிக்கும் இந்த கிரைம் திரில்லரை சஸ்பென்ஸ் பட ரசிகர்கள் விரும்புவார்கள்.