Saturday, October 3

குழந்தைகள் முன்னேற்ற கழகம் _ விமர்சனம்

Loading

 

குழந்தைகள் முன்னேற்ற கழகம் _ விமர்சனம்

Cast: Yogi Babu, Senthil, Saravanan, Mayil Samy, Lissy Antony, Subbu Panchu, Imaya Varman, Advaith Jai Masthan, Vaigha Rose, Ashmitha Singh, Chitra Lakshmanan, Harika Pedada

Directed By : N.Shankar Dayal

Music By : ‘Sathaga Paravaigal’ Shankar

Produced By : Meenakshi Amman Movies – Arunkumar Sammantham and N.Sangkar Dayal

ஓர் அரசியல்வாதியின் மகனும்,  அந்த அரசியல்வாதியின் சின்ன வீட்டு மகனும் ஒரே பள்ளியில் ஒன்றாக படிக்கிறார்கள்.

இருவருக்குமே தந்தையைப் போல் அரசியலில் புகழ் பெற வேண்டும் என்ற ஆசை.

அப்பாவைப் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ குதர்க்க புத்தி,  சதி வேலை என்று இருவரும் வளர்கிறார்கள்.

இப்படிச் செல்கிறது குழந்தைகள் முன்னேற்ற கழகம் படத்தின் கதை…

மகன்கள் இருவருக்கும் இன்ஸ்பிரேஷன் ஆன அப்பா வேடத்தில் நடித்திருக்கும் யோகி பாபு கொஞ்சமாக கிச்சு கிச்சு மூட்ட முயல்கிறார். ஆயினும் சட்டியில் இருந்தால்தானே அகப்பையில்  வருவதற்கு…

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை நடிகர் செந்தில்,  நகைச்சுவையே அல்லாத ஒரு பாத்திரத்தில் வீணடிக்கப்பட்டிருக்கிறார். மெல்லிசை கச்சேரிகள் நடத்தும் சாதக பறவைகள் சங்கர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.  முதல் படத்திலேயே இசையமைப்பாளராக பாஸ் மார்க் வாங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

லக்ஷ்மன் குமாரின் ஒளிப்பதிவும் ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பும் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன.

யோகி பாபு செந்தில் என்று இரண்டு நகைச்சுவை ஜாம்பவான்கள் இருந்தாலும் படத்தின் கதை ஓட்டம் சிறுவர்கள் இருவரையுமே மையப்படுத்தி அமைந்திருக்கிறது.

சிறுவர்கள் இமயவரம்பன் மற்றும் அட்வைஸ் ஜெய் மஸ்தான் இருவருமே திறம்பட நடித்திருக்கிறார்கள்.

சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வைகா ரோஸ், அஸ்மிதா சிங், லிஸி ஆண்டனி, சரவணன் என முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் தங்கள் பாத்திரத்தை  உணர்ந்து திறம்பட நடித்துள்ளனர்.

ரசிகர்களை சிரிக்க வைப்பது என்பதை பிரதான நோக்கமாக்க் கொண்டு எடுக்கப்பட்ட குழந்தைகள் முன்னேற்ற கழகம் திரைப்படம் அவ்வப்போது சில காட்சிகளில் சிந்திக்கவும் வைப்பது என்பதை மறுப்பதற்கு இல்லை.