Sunday, November 29

Author: Raja Senthilnathan

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநரின் அடுத்த படம் ‘பாலன்’!

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநரின் அடுத்த படம் ‘பாலன்’!

News
கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணையும் முதல் திரைப்படம்! மலையாள திரையுலகில் இயக்குநர் சிதம்பரம் (மஞ்சும்மல் பாய்ஸ்) மற்றும் எழுத்தாளர் ஜித்து மாதவன் (ஆவேஷம்) ஆகியோர் இணையும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் மூலம் திரு.வெங்கட் கே நாராயணா சார்பில் கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் மற்றும் திருமதி ஷைலஜா தேசாய் ஃபென் சார்பில் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்துள்ளன. பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்தப் படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணையும் முதல் திரைப்படம் "பாலன்" என்ற பெயரில் உருவாகிறது என்றும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியதாகவும் படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஷைஜூ காலித் ஒளிப்பதிவு பணிகளையும், இசையமைப்பாளராக சு...
வசூல் வேட்டை நடத்தும் ‘வார் 2’!

வசூல் வேட்டை நடத்தும் ‘வார் 2’!

News
வார் 2 இரண்டு நாட்களில் இந்தியளவில் ரூ.115 கோடி வசூலித்துள்ளது! இந்தியாவில் வார் 2 திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி கொண்டிருக்கிறது. வார் 2 வெளியான இரண்டு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 115 கோடி வசூலித்து மக்களை மகிழ்வித்து வருகிறது. இப்படம் ஹிந்தி பதிப்பில் மட்டும் இதுவரை ரூ. 75 கோடி வசூலித்துள்ளது , தெலுங்கு பதிப்பு ரூ.40 கோடி வசூலித்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய வசூல் வார இறுதியில் காத்திருக்கிறது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மட்டும் ஹிந்தி பதிப்பில் ரூ. 46 கோடி வசூலுடன், இரண்டு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 115 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. வார் 2 பட வெற்றியை கொண்டாடி, ஹ்ரித்திக் ரோஷன் அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டது படி, "திரையரங்குகளில் உங்கள் கொண்டாட்டங்களையும் கைத்தட்டல்கள...
கிராமிய பின்னணியில் உருவான அசத்தலான கமர்ஷியல் படம் “கடுக்கா”!

கிராமிய பின்னணியில் உருவான அசத்தலான கமர்ஷியல் படம் “கடுக்கா”!

News
'கடுக்கா' திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா! Vijay Gowrish Productions, Niyanth Media and Technology, மற்றும் Malarr Maarii Movies சார்பில், கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில், இயக்குநர் SS முருகராசு இயக்கத்தில், சமூக அக்கறையுடன், கிராமிய பின்னணியில் ஒரு அசத்தலான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கடுக்கா”. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஆனந்த் பொன்னுசாமி பேசியதாவது… எங்கள் அழைப்பை மதித்து வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தை மிக கஷ்டப்பட்டு ஒரு குழுவாக உழைத்து, உங்கள் முன் கொண்டு வந்துள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. ஜர்னலிஸ்ட் யூனியன் தலைவர் சுபாஷ் பேசியதாவது… ப...
ஆகஸ்ட் 29 வெளியாகும் “வீரவணக்கம்”!

ஆகஸ்ட் 29 வெளியாகும் “வீரவணக்கம்”!

News
சமுத்திரக்கனி , பரத் நடித்த "வீரவணக்கம்" படம் ஆகஸ்ட் 29 வெளியாகிறது! பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் முதன்முறையாக தமிழில் இயக்கி சமுத்திரக்கனி மற்றும் பரத் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் "வீரவணக்கம்" . புரட்சிகரமான சமூக கருத்துக்களை கொண்ட இந்தபடம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. சம காலத்தில் நடைபெறும் சமூக அவலங்களும், கடந்த காலத்தில் நடந்த புரட்சிகளும் இந்த கதையில் முக்கியமான ஒரு கருத்தை நமக்கு உணர்த்தும் வண்ணம் படமாக்கப்பட்டிருக்கிறது . சமீபத்தில் இத்திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சி திரையிடப்பட்டது. அதில் பல பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்தப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தேசிய விருது பெற்ற நடிகை சுரபி லக்‌ஷ்மி நடித்திருக்கிறார்.என்கிறார் படத்தின் இயக்குனர் அனில் வி. நாகேந்திரன்....
மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் ‘அக்யூஸ்ட்’ படக்குழு!

மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் ‘அக்யூஸ்ட்’ படக்குழு!

Uncategorized
ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின் 'அக்யூஸ்ட்' படக்குழு! ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான 'அக்யூஸ்ட்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு வித்திட்ட ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் 'அக்யூஸ்ட்' படக்குழுவினர் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்தனர். இந்த விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் ஏ. எல். அழகப்பன், அழகன் தமிழ்மணி, சௌந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம் பேசுகையில், ''இப்படத்தின் வெற்றிக்கு...
இணையத்தில் வைரலாகி வரும்டியர் ஸ்டூடண்ட்ஸ்’ (Dear Students) பட டீசர்!

இணையத்தில் வைரலாகி வரும்டியர் ஸ்டூடண்ட்ஸ்’ (Dear Students) பட டீசர்!

Uncategorized
நிவின் பாலி & நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும், ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ (Dear Students) பட டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது! நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில், விரைவில் வெளியாகவுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான வேகத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்று, சமூக வலைத்தளங்களில் இந்த டீசர், இப்போது வைரலாகி வருகிறது. மேலும் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து, படம் மெகா ஹிட்டாகும் என்கிற எதிர்பார்ப்பை உறுதி செய்துள்ளது. ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் நிவின் பாலி – நயன்தாரா எனும் நட்சத்திர ஜோடி மீண்டும் இணையும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய் ( George Philip Roy)மற்றும் சந்தீப் குமார் எழுதி இயக்கியுள்ளனர். Maverik Movies Pvt. Ltd தயாரிப்பில், நிவின் பாலியின் ஹோம் பேனரான Pauly Jr. Pictures மற்றும் Rowdy ...
துல்கர் சல்மானின் ஏழாவது தயாரிப்பு “லோகா – சேப்டர் 1 : சந்திரா”

துல்கர் சல்மானின் ஏழாவது தயாரிப்பு “லோகா – சேப்டர் 1 : சந்திரா”

News
வேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) வழங்கும் “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!! துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) நிறுவனத்தின் ஏழாவது தயாரிப்பான “லோகா – சேப்டர் 1 : சந்திரா” படம், தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் மூலம் வெளியாகிறது. ஒணம் பண்டிகை சிறப்பு வெளியீடாக திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை டொமினிக் அருண் எழுதி, இயக்கியுள்ளார். மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம், ‘லோகா’ எனும் சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் படமாகும். இதில் கல்யாணி பிரியதர்ஷன் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். பல பாகங்களாக வெளியாக இருக்கும் சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் பாகம் இதுவாகும். தென் இந்தியா முழுவதும் EPIQ திரைகளிலும் படம் வெளியாகிறது....
தீவிரவாத கூட்டத்தில் பயணிக்கும் சிறுவன்!

தீவிரவாத கூட்டத்தில் பயணிக்கும் சிறுவன்!

News
ஐ&ஐ மூவிஸ் சார்பில் வை. வைரப்பிரகாஷ் தயாரித்துள்ள படம் "ஃபிளாக்"! இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் SP. பொன் சங்கர். இசை- ராஜா ரவிவர்மா படத்தொகுப்பு வரதராஜன் இப்படத்தில் கொட்டுக்காலி, இட்லி கடை போன்ற படங்களில் நடித்த தீஹான் மற்றும் தூம், க்ரிஷ், சர்தார் போன்ற படங்களில் நடித்த பாலிவுட்டை சேர்ந்த மிக்கி மக்கி ஜா & அபினவ் கோசாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இவர்களுடன் போஜ்புரியை சார்ந்த அனந்த் பெங்காளியைச் சேர்ந்த பப்புஷா மற்றும் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் ... இப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில் தமிழ்நாடு, கேரளா,ஆந்திரா, கர்நாடகா, மும்பை, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேஷ், மத்திய பிரதேஷ், டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட நகரங்களில் இப்படத...
U/A சான்றிதழ் பெற்ற தண்டகாரண்யம்” திரைப்படம்!

U/A சான்றிதழ் பெற்ற தண்டகாரண்யம்” திரைப்படம்!

News
தினேஷ், கலையரசன் நடித்த "தண்டகாரண்யம்" படத்திற்கு U/A இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தண்டகாரண்யம். இந்த படத்தை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் , லேர்ன் அண்ட் டெக் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு நிறைவுபெற்று வெளியீட்டுக்கு தயாராகும் நிலையில் இந்த படத்திற்கு U/A சான்றிதழ் சென்சார் வழங்கியுள்ளது. இதன் அறிவிப்பை வெளியிட்ட குழுவினர் "அமரன்கள் செய்த அநீதிகளை பேசும் தண்டகாரண்யம்" என்கிற தலைப்பில் இன்று வெளியிட்டுள்ளனர். இந்தபடத்தின் படப்பிடிப்பு முழுக்க காடுகளும், மலைப்பிரதேசங்களிலும், மலைக்கிராமங்களிலும், நடைபெற்று முடிந்திருக்கிறது. விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் ....
அமெரிக்காவில் ‘கூலி’ படத்துக்கு வரவேற்பு எப்படி?

அமெரிக்காவில் ‘கூலி’ படத்துக்கு வரவேற்பு எப்படி?

News
  அன்று சென்னையில்கல்லூரி மாணவனாக நான் இருந்த காலத்தில் 16 வயதினிலே படத்தில் பரட்டை ஆக நடித்த ரஜினி"இது எப்படி இருக்கு"என்று கேட்பார். 50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா வந்த நான் கூலி படத்தை பார்த்துவிட்டு அது எப்படி இருக்கிறது என்று  சொல்ல விரும்புகிறேன். படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் சொன்னது போல "வயசு ஆனாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை அப்படியே தான் இருக்கு"என்ற வசனத்தை ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன். அன்று பார்த்த அதே நடிப்பின் விறுவிறுப்பு , குறிப்பாக சண்டையின் இடையில் வில்லனை பார்த்து" breathe in" "breathe out" என்று சொன்னபோது தியேட்டரே சிரிப்பிலும் கைத்தட்டலும் அதிர்ந்தது. அதுபோன்ற சின்ன சின்ன நகைச்சுவை அதே நேரத்தில் சண்டை காட்சியில் காட்டும் வேகம் ஆகியவை மற்ற எல்லா விஷயங்களை பின்னுக்கு தள்ளி ரஜினியின் முகம் மட்டுமே நமக்கு படம் ஆரம்பித்து கடைசி வரை நிற்கிறத...