‘கூலி’ பட கவுண்ட் டவுன் பிரிவியூவுடன் Sun NXTல் தொடங்கும்
‘கூலி படக் கவுண்டவுன் கூலி அன்லீஷ்ட் பிரிவியூவுடன், Sun NXT - இல் தொடங்குகிறது!
இந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி, காலை 10 மணிக்கு, கூலி படத்தின் பிரீவியூவைப் பார்க்கத் தயாராகுங்கள் - கூலியின் மனதைக் கவரும் கொண்டாட்டத்தின் ஒரு அதிரடியான முன்னோட்டத்தை, நட்சத்திரங்களுடனான விழாவைக் கண்டுகளிக்கத் தயாராகுங்கள். ஆரவாரமான ரசிகர்கள் மற்றும் தொழில்துறை ஜாம்பவான்கள் பங்கேற்ற இந்த விழா, ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் என்பதை விடவும், மிகப்பெரியக் கொண்டாட்டம். கூலி படத்தின் கவுண்டவுன் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது.
இந்த விழா உலகெங்கிலும் உள்ள தென்னிந்திய திரைப்பட ஆர்வலர்கள் கண்டுக்களிக்கும் வகையில் Sun NXT, இல் ஒளிபரப்பாகிறது.
ரெட் கார்பெட் துவங்கிய தருணத்திலிருந்தே, உற்சாகம் துவங்கி விட்டது. ரசிகர்களின் காதைப் பிளக்கும் ஆரவாரத்துடன் நட்சத்திரங்கள் விழா அரங்கிற்குள் நுழைந்தனர். இசை அரங்கம் முழுக்க அதிரும் பலத்துடன்...







