கடம்பன் விமர்சனம்

0

Loading

0a1g-11

இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் அற்புதமான மலை காடு கடம்பவனம். மண்ணின் மைந்தர்களாக பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருகின்றனர் பழங்குடியின மக்கள்.
சிமெண்ட் தயாரிப்புக்குத் தேவைபடும் முக்கியமான மூலப்பொருளான சுண்ணாம்க்கல் இந்தப் பகுதியில் அதிகம் கிடைப்பதால், மண்ணின் மைந்தர்களான பழங்குடிகளை அப்புறப்படுத்திவிட்டு காட்டையே கபளீகரம் செய்யத் துடிக்கிறார் ஒரு சிமெண்ட் கம்பெனி முதலாளி. இவருக்குத் துணையாக வனத்துறை அதிகாரிகளும் செயல்படுகிறார்கள்.
பழங்குடி இனத்தைச் சேர்ந்த கடம்பன், காட்டைக் காக்க போராடுவதும், அதில் அவனுக்கு ஏற்படும் இழப்புகளும்தான் கடம்பன் படத்தின் கதை. சக்தி மிக்க சிமெண்ட் கம்பெனி முதலாளியின் சதித்திட்டங்களை முறியடித்து இறுதியில் கடம்பன் எப்படி வெற்றி பெற்றான் என்பதை மிகவும் பிருமாண்டமான முறையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ராகவா.
ஆர்யா நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும்.
கடம்பன் வேடம் ஏற்றிருக்கும் ஆர்யா கட்டுமஸ்தான தோற்றத்துடன் மலைகுகையில் தேன் எடுக்கும் ஆரம்ப காட்சியே அசத்தலாக இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் படத்தை ரசிக்கலாம் என்று ஆவலோடு காத்திருக்கும் ரசிகனுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. காரணம் வலுவான காட்சியமைப்புகள் அதிகம் இல்லாத பலவீனமான திரைக்கதைதான்.
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சுமார் அறுபது எழுபது யானைகளுக்கு மத்தியில் நடக்கும் சண்டை ஆங்கிலப்படங்களுக்கு இணையாக மிக அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கிறது.
படத்தைக் காப்பாற்றுவது எஸ்.ஆர்.சதீஷ் குமாரின் ஒளிப்பதிவும், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளும்தான். எது நிஜம் எது கிராபிக்ஸ் என்று தெரியாக அளவுக்கு மிகச்சிறப்பாக சி.ஜி. காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
நாயகியாக வரும் கேதரின் தெரசா மலைக்காட்டின் அழகு மயிலாக வலம் வருகிறார்.வசதிங்கறது வாழ்ற தரத்தில இல்லை வாழ்ற முறையில இருக்கு
காட்டை அழிக்கறது கர்பப்பையிலே இருக்கற குழந்தை கத்தியை எடுத்து தாயோட வயித்தை அறுக்கற மாதிரி
போன்ற வசனங்கள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. இயக்குநர் ராகவாவுடன் சேர்ந்து தேவ் படத்துக்கு வசனம் எழுதிியிருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான பாடல்கள் பரவாயில்லை ரகம்தான்.
ஒளிப்பதிவு மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளுக்காகவே கடம்பன் படத்தை பார்த்து ரசிக்கலாம்.

Share.

Comments are closed.