Sunday, October 25

ககனாச்சாரி – மலையாளப்பட விமர்சனம்

Loading

ககனாச்சாரி – மலையாள சினிமா விமர்சனம்

2040-ம் வருடம் கதை நடக்கிறது… அந்தக் காலக்கட்டத்தில் பெய்த மழை, வெள்ளத்தினால் கேரள மாநிலத்தில் பெருமளவு நிலப்பரப்பு அழிந்துபோய் பூமிக்கு அடியில் மறைந்துவிடுகிறது.

அப்போதைய ஆட்சியும் மக்களை ஒடுக்கி சர்வாதிகாரம் செய்கிறது. குடிமக்கள் ஒவ்வொருவரையும், தீவிரமாக கண்காணிக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் அரசின் உளவு கருவி பொருத்தப்பட்டுகிறது. இதன் மூலம் காவல்துறை, மக்களை வேவு பார்க்கிறது.

இந்த நிலையில், மக்களை காப்பாற்ற வேற்றுக் கிரகவாசிகளை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் கே.பி.கணேஷ்குமார், ஏலியன்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பான கட்டிடத்தில் தனது உதவியாளர்களான கோகுல் சுரேஷ் மற்றும் அஜூ வர்க்கீஸூடன் மறைந்து வாழ்கிறார்.

முன்னாள் ராணுவ வீரர் கணேஷ் குமார் குறித்து ஆவணப் படம் தயாரிப்பதற்காக ஒரு குழு வருகிறது. கணேஸ்குமார் சந்தித்த த்ரில்லான சம்பவங்களை, போர்க்களன்களை அவரது உதவியாளர்கள் குழுவினரிடம் விவரிக்கிறார்கள். அந்தக் காட்சிகள் திரையில் ஆவணப்படக் காட்சிகளாக விரிய ஆரம்பிக்கின்றன.

இந்த நிலைமையில் மூன்று பேருடன் ஒரு பெண் ஏலியனும் வந்து இணைகிறது. வந்த பெண் ஏலியனை கோகுல் சுரேஷ் காதலிக்க ஆரம்பிக்கிறார்.
அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை..!

கணேஷ்குமார் சிறப்பாக நடித்து உள்ளார். கோகுல் சுரேஷ் தன்னால் இயன்றவரை நடிக்க முயற்சித்ுத இருக்கிறார். அஜூ வர்கீஸ் தன் இயல்பான நடிப்பை அளித்து இருக்கிறார்.

ஏலியன் பெண்ணாக நடித்திருக்கும் அனார்கலி மரைக்காயர் பார்வையிலேயே பலவித மனித உணர்வுகளை வெளிப்படுத்தி அசரடித்து இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சுர்ஜித் எஸ்பயை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வித்தியாசமான கதை அம்சம் உள்ள சயின்ஸ் பிக்சன் கதைக்குத் தேவையான அருமையான காட்சிகளை நமக்கு அளித்து இருக்கிறார்.

கலை இயக்குநர் எம்பாவாவின் நேர்த்தியாக தனது பங்கை அளித்து இருக்கிறார். குறிப்பாக அந்த கட்டிடம் தனி ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

சங்கர் சர்மாவின் பின்னணி இசை ஈர்க்கிறது. சீஜே அச்சுவின் படத்தொகுப்பு படத்துக்கு பலம்.

சயின்ஸ் பிக்சன் படங்களுக்கேற்ற கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்க, பிரமிக்க வைக்கின்றன.

அறிவியல் கற்பனை கதையை நகைச்சுவையாக அளித்துள்ளனர் இயக்குநர்கள் அருண் சந்து மற்றும் சிவ சாய்.

கால நிலை மாற்றத்தினால் ஏற்படும் இயற்கையின் பேரழிவு, அறிவியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் ஏற்படும் ஆபத்துகள்… இப்படி அவசியமான கருத்தை, சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறது படம்.