Monday, December 9

கனவு வாரியம் விமர்சனம்

Loading

 

சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற திரைப்படங்கள் என்றால் நத்தை வேகத்தில் நகரும் கதையும், பொறுமையை சோதிக்கும் காட்சியமைப்புகளும் கொண்டதாக இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றியமைத்திருக்கிறது அருண் சிதம்பரம் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் கனவு வாரியம் திரைப்படம். கணிதத்தில் ஆர்வமாக இருந்த ராமானுஜனைப்போல் அறிவியலில் மிகுந்த ஆர்வம் காட்டும் மாணவனாகத் திகழ்கிறார் அருண் சிதம்பரம். ஆனால் அந்த ஆர்வத்துக்கு நமது கல்விமுறை சரியான வழிகாட்டியாக இருந்து விடுமா என்ன… விளைவு… ரேடியோ போன்ற மின்சாதனப் பொருள்களின் பழுதுகளை சரி செய்துதரும் கடையில் வேலைக்கு சேர்கிறார். இந்த சமயத்தில் மிகக்கடுமையான மின்வெட்டு காரணமாக ஊரே மிகவும் பாதிக்கப்படுகிறது. மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வுகாண முயற்சிக்கிறார் அருண். தகவல் தொழில் நுட்பத்துறையில் கை நிறைய சம்பாதித்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, இயற்கை விவசாயம் செய்க் ஜெப்பி. இவருக்கும் அருண் சிதம்பரத்துக்குமான எண்ண அலையப் போகிறேன் என்று அந்த கிராமத்துக்கு வருகிறரா் யோவரிசை ஒத்துப்போக நண்பர்களாகிறார்கள். நண்பர்கள் இருவரையும் கிராம மக்கள் கிண்டல் செய்கிறார்கள். இருவரும் தங்கள் லட்சியத்தில் வென்றார்களா என்பதை சுவைபட சொல்லும் படம்தான் கனவு வாரியம். சற்றே கவனக் குறைவாக இருந்தாலும் விவரணப்பட வாசனை வந்துவிடக்கூடிய கதையாக இருந்தாலும், சுவையான திரைக்கதையால் ரசிக்கக்கூடிய படமாக மாற்றியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அருண்சிதம்பரம். காதல் நகைச்சுவை இரண்டும் இயல்பாகவே கதைக்குள் இணைந்திருப்பதுபோல் காட்சிகள் அமைத்திருப்பது சிறப்பு. நாயகன் அருண் சிதம்பரத்தில் சிறப்பே பக்கத்து வீட்டுப் பையன்போல் இருக்கும் அவரது தோற்றம்தான். அதிலும் கள்ளங்கபடமற்ற அந்த மலர்ச்சியான சிரிப்பு அட்டகாசம். இசையமைப்பாளர் ஷ்யாம் பெஞ்சமின், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார் ஆகியோரின் பணியும் படத்துக்கு பக்க பலமாக இருக்கின்றன. நல்ல படங்களே வருவதில்லை, குப்பை படங்களாகவே வந்து குவிகின்றன என்று குறைசொல்லும் ரசிகர்கள் இது போன்ற படங்களை வெற்றி பெறச் செய்தால்தான் மென்மேலும் இதுபோன்ற படங்கள் அதிகம் வரும். கனவு வாரியம் கண்டிப்பாக எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய தரமான படம்.