சதுர அடி 3500 – விமர்சனம்

0

Loading

ரியல் எஸ்டேட் தொழிலின் இருண்ட பகுதிகளையும் அதில் ஆதிக்கம் செலுத்தும் மஃபியா கும்பலையும் படம் படித்துக் காட்டுகிறது சதர அடி 3500.
புதிதாகக் கட்டப்பட்டுவரும் அடுக்கு மாடிக் குடியிருப்பொன்றில் அதன் ப்ரமோட்டர் ஆகாஷ் தூக்கில் தொங்கும் காட்சியுடன் துவங்கும் படம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது.
தூக்கில் தொங்கும் ஆகாஷ் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற என்ற கேள்வியுடன் காட்சிகள் விரிகின்றன.
இறந்துபோன ஆகாஷின் ஆவி ஆங்காங்கே உலவுவதாகவும், பேயாக அவரைப் பார்த்ததாகவும் பலரும் கூறுகின்றனர். இதை உயர்போலீஸ் அதிகாரியான தலைவாசல் விஜய் நம்புகிறார். இது குறித்து புலன் விசாரணை செய்யும்படி துடிப்பான போலீஸ் அதிகாரியான நிகிலுக்கு உத்தரவிடுகிறார்.
ஆவி, பேய், பிசாசு போன்ற சமாச்சாரங்களை சற்றும் நம்பாத நிகில் களத்தில் இறங்க, இனியாவின் அறையில் ஆகாஷ் ஆவியைப் பார்த்ததாக அவரது தந்தையே கூறுகிறார்.
இனியாவுக்கும் ஆகாஷுக்கும் என்ன தொடர்பு… ஆகாஷ் ஆவி சுற்றிக்கொண்டிருப்பது உண்மையா போன்ற கேள்விகளுக்கெல்லாம் நிகிலின் வெற்றிகரமான விசாரணை இறுதியில் விடையளிக்கிறது.
அறிமுக நாயகன் நிகில் போலீஸ் அதிகாரி வேடத்தில் கனகச்சிதமாகப் பொருந்துகிறார். அவ்வளவு உயரமான நாகனுக்கு ஏன் சராசரிக்கும் குறைவான உயரமுள்ள பெண்ணை ஜோடியாகப் போட்டார்கள் என்று புரியவில்லை.

கணேஷ் ராகவேந்திராவின் இசை பரவாயில்லை ரகம் என்றாலும், பிரான்சிஸின் ஒளிப்பதிவு கதையோட்டத்துக்கு வெகுவாகக் கை கொடுக்கிறது.நல்ல கதையை தேர்வு செய்த இயக்குநர் அதற்கு ஏற்ற வகையில் விறுவிறுப்பான முறையில் திரைக்கதை அமைத்திருந்தால் குறிப்பிடத்தக்க த்ரில்லர் பட வரிசையில் இடம் பெற்றிருக்கும்.

Share.

Comments are closed.