விசிறி – விமர்சனம்

0

 1,087 total views,  1 views today

கதாநாயகர்கள் : ‘ராம்சரவணா’ & ‘ராஜ் சூர்யா
கதாநாயகி:ரெமோனா  ஸ்டெபனி
ஒளிப்பதிவு: விஜய் கிரண்,
இசை: தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர்
எடிட்டிங்: வடிவேல் – விமல்ராஜ்,
வசனம்: பித்தாக் புகழேந்தி
பாடல்கள்: மதன் கார்க்கி, ஞானகரவேல், ரேஷ்மன் குமார், ஸ்ரீ ராவன்
இணை தயாரிப்பு : பூமா கஜேந்திரன், S. சரஸ்வதி சரண்ராஜ், N.K. ராஜேந்திர பிரசாத் (துபாய்)”.
நிர்வாக தயாரிப்பு : A.P.பிரகலாதன், கர்ணன் மகாலிங்கம், V.ராஜேஸ்வரி
கதை, திரைக்கதை, இயக்கம்  : வெற்றி மகாலிங்கம்
எம்.ஜி.ஆர். _சிவாஜி, ரஜினி _ கமல், என்று பிரிந்து நின்று மோதிக்கொள்ளும் தீவிர சினிமா ரசிகர்கள் வரிசையில் சமகாலத்தைய ரசிகர்கள் தல அஜித் தளபதி விஜய் என்றுபிரிந்து சமூகஊடகங்கள் மூலம் மோதிக் கொண்டிருப்பதை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் வெற்றி மகாலிங்கம். படத்தின் கதை, திரைக்கதையும் இவரே.
தீவிரமான தல ரசிகர் ராஜ் சூர்யாவுக்கும், தளபதி ரசிகர் ராம் சரவணனுக்கும் சமூக ஊடகங்கள் மூலம் அடிக்கடி மோதல் நடக்கிறது. ராஜ்சூர்யா ராம் சரவணனை காதலித்து காட்டுமாறு சவால் விடுகிறார். இந்த சவாலை ஏற்றுக் கொள்ளும் ராம் சரவணனுக்கு விஜய் ரசிகையான ரெமோனா ஸ்டெபனிமீது காதல் ஏற்படுகிறது.
தான் ஒரு விஜய் ரசிகரைத்தான் காதலித்து மணப்பேன் என்று ரெமோனா சொல்லியிருப்பதால், தானும் விஜய் ரசிகன் என்று பொய் சொல்லி காதலிக்க தொடங்குகிறார் ராம் சரவணா.
இதனிடையே ராஜ் சூர்யாவுடன் போஸ்டர் தகராறு ஏற்பட ரெமேனோ ஸ்டெபனி அவரின் தங்கை என்று ராம் சரவணா அறிகிறார். காதலி ரெமேனோ பொய் சொல்லும் ராம் சரவணனை வெறுத்து ஒதுக்குகிறார். இறுதியில் ராம் சரவணா-ரெமேனோ ஸ்டெபனி காதல் கை கூடியதா? பிரபல நடிகர்களின் ரசிகர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா?
அக்னி நட்சத்திரம் படம் மு ழுவதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அண்ணன் தம்பிகளான பிரபுவும் கார்த்திக்கும் இறுதில் ஒரு பொது எதிரியை வீழ்த்துவதற்கு இணைவதைப்போல் இந்தப் படத்தில் தல தளபதி ரசிகர்கள் இருவரும் க்ளைமாக்ஸில் இணைகிறார்கள்.
பாடல்கள் பெரிய அளவில் படத்திற்கு கைகொடுக்கவில்லை என்றாலும் விஜய் கிரணின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் தருகிறது.
நல்ல கதைக் கருவை எடுத்துக்கொண்ட இயக்குநர் இன்னும் சற்று மெனக்கெட்டிருந்தால், தல தளபதி ரசிகர்களை மட்டுமின்றி பொதுவான ரசிகர்களையும் கவரும் படமாக அமைந்திருக்கும்.
Share.

Comments are closed.