Tuesday, October 27

ரத்தம் – விமர்சனம்

Loading

ரத்தம் – விமர்சனம்

Cast
Vijay Antony
Mahima Nambiar,
Nandita Swetha,
Ramya Nambeesan

Technical Crew
Direction: C.S. Amuthan
produced by Kamal Bohra, G.Dhananjayan, Pradeep B, and Pankaj Bohra of Infiniti Film Ventures
Music Director : Kannan Narayanan
D O P: Gopi Amarnath
Editor: T.S. Suresh

புலனாய்வு பத்திரிகையாளரான விஜய் ஆண்டனி மனைவி இழந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் மதுவுக்கு அடிமையாகி கொல்கத்தாவுக்கு குடி பெயர்ந்து தன் மகளுடன் வசித்து வருகிறார்.

பத்திரிகை அதிபரான நிழல்கள் ரவியின் மகனும், விஜய் ஆண்டனியின் நெருங்கிய நண்பனுமான செழியன் சமூக விரோதிகளால் கொல்லப்படுகிறார்.

கொல்கத்தா வந்து விஜய் ஆண்டனியிடம் இந்த தகவலை நிழல்கள் ரவி தெரிவிக்க, மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு வருகிறார் விஜய் ஆண்டனி.

செழியன் கொலை குறித்து விசாரிக்கும் போது, இதே பாணியில் வேறு பல கொலைகளும் நடந்திருப்பது விஜய் ஆண்டனிக்கு தெரிய வருகிறது.

இந்தக் கொலைகளுக்கு காரணம் யார்? எதனால் இந்த கொலைகள் நடத்தப்படுகின்றன?  என்று களத்தில் இறங்கி விஜய் ஆண்டனி விசாரிக்கும் போது மேலும் பல மர்ம முடிச்சுகள் விழுகின்றன.

அதைத் தொடர்ந்து பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகின்றன. சரியாக முதல் பாதி முடியும் போது விழும் மர்ம முடிச்சு ரசிகர்களின் இதயத் துடிப்பை அதிகமாக்குகிறது என்றே சொல்லலாம்.

படத்தின் இரண்டாம் பாதியில் இந்த கொலைகளை செய்வது யார்? எதற்காக செய்கிறார்கள்?  என்பது பரபரப்பான காட்சிகள் மூலம் விவரிக்கப்படுகின்றன.

விஜய் ஆண்டனி கல்கத்தாவில் இருக்கும் வரை ரன்வேயில் ஓடிக்கொண்டிருந்த கதை, அவர்  சென்னைக்கு வந்ததும் டேக் ஆஃப் ஆகி ஜெட் வேகத்தில் பறக்க ஆரம்பித்து விடுகிறது.

எதிர்பாராத  திருப்பங்கள் படத்திற்கு சுவாரஸ்யம் சேர்க்கின்றன. விஜய் ஆண்டனியின் உடல் மொழியும் வசன உச்சரிப்பும் புலனாய்வு பத்திரிகையாளர் வேடத்திற்கு பலம் சேர்க்கின்றன. நந்திதா ஸ்வேதாவுக்கு வேடம் இல்லை என்றாலும், கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.

கனமான பாத்திரம் ஏற்றிருக்கும் மகிமா நம்பியார் அதை  கச்சிதமாகவே செய்திருக்கிறார்.

கண்ணன் நாராயணன் பின்னணி இசை படத்துக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மற்றொரு பக்கம் பலம்.

சஸ்பென்ஸை இறுதிவரை அழகாக கொண்டு சென்ற இயக்குனர் சி எஸ் அமுதனுக்கு தனியாக ஒரு பாராட்டை சொல்லிவிடலாம்.

சஸ்பென்ஸ் திரில்லர் வகை படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு விருந்து வைக்கிறது இந்த ‘ரத்தம்’.

மதிப்பெண் 4/5